திருமாவளவனின் பெயரைக்கூட போடாமல் தீண்டாமை சுவர் எழுப்பி வரும் உடன்பிறப்புகள் இனி எதிர்காலத்தில் 'தலித்தியம்' பேசும்போது அவர்கள் வரைந்த தீண்டாமை சுவர்களே சாட்சியாக நின்று சிரிக்கும்.
1/4
சட்டசபையில் திமுக"திராவிட கட்சிக்கு தலைமை ஒரு பாப்பாத்தியா?"என நக்கலா கேட்டபோது
"ஆமாம்.நான் பாப்பாத்திதான்.அந்த பாப்பாத்தி ஒரு திராவிட கட்சிக்கு தலைமையாக இருப்பதை நான் பெருமையா நினைக்கிறேன்"என சொல்லி செருப்பால் அடிக்காத குறையாக வார்த்தையால் அடித்து திமுகவை உட்கார வைத்தார்
2/5
அதையே பல காலமாக பிடித்துக்கொண்டு 'ஜெ தன்னை பாப்பாத்தி என சட்டசபையிலேயே பெருமையாக சொல்லிக்கொண்டார்'என திமுக மங்குணிகள் வாந்தியெடுத்துக்கொண்டு சுத்தியதெல்லாம் பலரும்அறிந்த கதைதான்.கேள்வியை மறைத்துவிட்டு பதிலைமட்டும் பிடித்து தொங்குவதில் திமுகவினரிடம் சகுனியும் தோற்றுப்போவான்
3/6
அந்த பாப்பாத்திதான் 69% இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் யாரும் நீக்காமல் இருக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அதை சேர்த்து சட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டுப் போனார்.
4/8
அந்த பாப்பாத்திதான்"நான் அருந்ததியர் என்பதால் என் வீட்டில் நம்ம கட்சிக்காரங்கக்கூட சாப்பிட வர மாட்றாங்கம்மா"என மனம் நொந்துபோய் சொன்ன திரு.தனபால் அவர்களை மாநிலத்திற்கே உணவுத்துறை அமைச்சராக்கினார். அதுவும் போதாதுஎன நினைத்து சட்டசபையில் சபநாயகராக்கி அழகு பார்த்தார். 5/8
அதே நேரத்தில் "என்னை தினமும் பராமரிப்பதே ஒரு அருந்ததியர்தான்" என சொல்லிக் கொண்டிருந்தார் திராவிட இன தலைவர் கருணாநிதி.
ஜனாதிபதி தேர்தலில் மிகவும் ஒடுக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியின சமூகத்தை சார்ந்த பி.ஏ.சங்மாவை அதிமுக முன்மொழிந்தபோது எதிரணியின் சார்பில் வங்காள பிராமணரான பிரனாப் முகர்ஜியை முன்மொழிந்து முதல் கையெழுத்து போட்டவர் திமுக தலைவர்.
அதற்கு முந்தைய ஜனாதிபதி தேர்தலில் அதிமுக அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க முன்மொழியவுள்ள தகவல் கிடைத்ததும் 'கலாம் என்றால் கலகம் என்று பொருள்' என சம்பந்தமில்லாமல் அப்துல் கலாமை திட்டினார்.
அப்துல் கலாம் வாயாலேயே 'ஒருமித்த கருத்து இல்லாவிட்டால் நான் போட்டியிடவில்லை' என சொல்லவைத்து, மராத்திய பிராமணர் பிரதீபா பாட்டீலுக்கு முன்மொழிந்து முதல் கையெழுத்து போட்டதும் திராவிட இன தலைவர்தான்.
"ஆ.ராசா தலித் என்பதால் 2G வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆரிய மாயையும், பார்ப்பன சூழ்ச்சியும் இன்னும் தொடர்கிறது" என காங்கிரஸ் கட்சியையே பிராமண கட்சி என வசைபாடிவிட்டு அதே காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ச்சியாகவும் இருந்தார்.
அதிமுக கூட்டணியில் திருமாவளவன் இருந்தபோது சாதி ரீதியான எந்த பாகுபாடும் இருந்ததில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் திமுக கூட்டணியில் சாதி ரீதியான தீண்டாமையில் சிக்கும் ஆள் திருமாதான்.
எனக்கு உண்மையில் திருமா மீது எந்த பெரிய அபிப்பிராயமும் கிடையாது. திமுகவின் சாதி தீண்டாமையை விளக்கவே திருமாவை உதாரணமாக காட்டியுள்ளேன்.
மீண்டும் முதல் வரியை படியுங்கள்
பெரம்பலூர் தனித் தொகுதியை பொது தொகுதியாக மாற்றியதும் ஆ.ராசாவை நீலகிரி தனி தொகுதிக்கு விரட்டியடித்தார் கருணாநிதி. ஆனால் ஒரு தலித், தனித்தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் அவலத்தை மாற்ற தலித் எழில்மலையை திருச்சி பொது தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தவர் ஜெ. அதுதான் சமூகநீதி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நடந்துகொண்டிருந்த காலகட்டம் (2011)
தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கட்சியாக படுதோல்வியடைந்திருந்தது.
1/8
ஆளும் அதிமுக அரசிற்கு குடைச்சல் கொடுக்க கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. ( 2011 ஆகஸ்ட்)
தமிழ்நாட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிமுக அரசுடன் இணைந்து இனக்கமாக செயல்பட தொடங்கினார் ரோசய்யா.
2/8
இந்த எதிர்பாராத டுவிஸ்ட்டை கருணாநிதியே எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
தற்போது ஆளுநர் ரவிக்கு எதிராக ஸ்டாலின் ஆள் வைத்து முரசொலியில் எழுதிவரும் 'கொக்கென கோண வாயா, நக்கென நாராவாயா' பாணியில் கருணாநிதி தனக்குத்தானே கேள்வி பதில் என்ற பெயரில் முரசொலியில் ரோசய்யாவை கழுவி ஊற்றினார்.
3/8
கருணாநிதிதான் 69% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததாக வழக்கம்போல் கதை, கட்டுரை என எழுதித்தள்ளுகிறார்கள் உடன்பிறப்புகள். ஆனால் உண்மையிலேயே கருணாநிதி கொண்டு வந்த இட ஒதுக்கீடு என்ன தெரியுமா?
இட ஒதுக்கீட்டின் வரலாற்றை முழுதாக தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள்.
1/15
1950ல் அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 25%
பட்டியல் இனத்தவருக்கு (SC) 16%
என #மொத்தம்_41% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இட ஒதுக்கீடு இங்கிருந்தான் ஆரம்பிக்கிறது.
1971ல் திமுக ஆட்சிக் காலத்தில்,
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 31%,
பட்டியல் இனத்தவருக்கும் ஆதிகுடிகளுக்கும் (SC / ST) 18% என கூடுதலாக 8% சேர்த்து #மொத்தம்_49% மாக இடஒதுக்கீட்டின் அளவை கருணாநிதி உயர்த்துகிறார்.
திருட்டு ரயில் முதல் சென்னை மெட்ரோ ரயில்வரை -உடன்பிறப்புகளின் உண்மை கதை.
வீராணம் திட்டத்தை கொண்டு வந்தது திமுக. ஆனால் அதை வெற்றிகரமா நிறைவேற்றினது யாரு?
வீராணம் மாதிரியே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தையும் சொல்லலாம்.
1/10
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை செய்துதர சொல்லி தமிழக அரசு கேட்டதன் பேரில் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் 2003-ஆம் ஆய்வை தொடங்கியது.
அந்த குழு 2005ல் அறிக்கையை சமர்ப்பித்தது.
2/10
மெட்ரோ ரயிலுக்கு கால தாமதம் மற்றும் கூடுதல் செலவாகும. மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருப்பதால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதால் அது கைவிடப்பட்டு முழுக்க மாநில அரசின் செலவிலேயே மோனோ ரயில் இயக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.