சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பி சாப்பிட்டால் தொண்டை எரிச்சல்,கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளை பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்கு போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாச குழல் அழற்சி சரியாகும்.
கிராம்பு பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர,வாய் நாற்றம்,ஈறு வீக்கம்,பல்வலி ஆகியவை குணமாகும்.
கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர
தசை பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும்.
கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரை பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
சமையலுக்கும்,கறிகளுக்குச் சுவையூட்டவும்,கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம்.
நன்றி:தமிழ் மருத்துவம்
பிகு:எம்மை பின்தொடரும் சகோதரி ஒருவர் கேட்டதற்கிணங்கவே இப்பதிவு
பிடிக்காதவர்கள் பதிவினை விட்டு கடந்துசெல்லலாம் இல்லை பின்தொடருவதை நிறுத்தலாம்,அதைவிடுத்து உள்பெட்டியில் வந்து அனாவசிய பேச்சு வேண்டாம்