அந்த ஆனந்தபவன் இல்லம் எல்லாம் அரண்மனை போன்ற மாளிகை, மன்னன் அதை நாட்டுக்காக கொடுத்தான்
9 ஆண்டுகள் சிறைவாசம் ( காமாரஜர் நேரு போன்றவர்கள் எல்லாம் பல வருடம் சிறையில் இருந்தவர்கள்,
அவர் பிரதமரான காலம் மகா சிக்கலனாது, அதாவது பிரிவினை களபேரத்தில் எல்லைகள் எரிய,
இந்தியா உடைவதை உலகம் எதிர்பார்த்த நேரத்தில்தான் அரியணை ஏறினார் நேரு
அந்த காலகட்டத்தில் பிரதமரானவர்தான் நேரு, இன்று காணும் ஓரளவு வளர்ந்த
நேருவின் சாதனைகள் நிறைய இருக்க, மகத்தான சாதனை ஒன்று உண்டு, அதில்தான் பாரதம் இன்றளவும் நிற்கின்றது.
அதாவது இந்தியா பல சாதிகளின் அமைப்பு, இந்து மதத்திலும் பாகுபாடு உண்டு. மதவெறி இல்லா ஒரு தாழ்த்தபட்டவன்,
சில சீர்திருத்த சட்டங்களை அம்பேத்கார் சொன்னபொழுது, பரிவார அமைப்புக்களும், ஆர் எஸ் எஸ் இயக்கமும் வரிந்துகட்டி எழும்பின.
ஆனால் 1952ல் பிரதமரானவுடன்அந்த திருத்தங்களை சட்டபூர்வமாக்கினார் நேரு. எம்மாதிரி சட்டங்கள்? விதவை பாதுகாப்பு, சாதிய வன்கொடுமை, பல திருமணம் தடை, விவாரத்து உரிமை,
நேரு ஆர்எஸ்எஸ் மோதல் இங்குதான் தொடங்கியது.
நேரு காலத்தில் இந்த நாடு கண்ட பெரும் சவால் உணவு பஞ்சம், அதனை சமாளித்தார், பின் பல அணைகளை கட்டி அவற்றை இந்திய ஆலயங்கள் என்றார். இன்று இந்தியா ஓரளவு உணவில் தன்னிறைவு
இந்தியாவின் மகா முக்கிய உணவான பால் உற்பத்திக்கு அவர் செய்த முயற்சி உலகறிந்தது. இன்னும் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியினை பெருக்கியதில் அவர் மகத்தானவர். தமிழகத்தின் மகா முக்கியமான அரசு தொழிற்சாலைகள் எல்லாம் அவரால் அனுமதிக்கபட்டவை.
உலகம் இரு பெரும் பிரிவுகளாய் மோத தயாராகும் பொழுது அணிசேரா நாடுகள் எனும் அவரின் உலக நடவடிக்கை
காஷ்மீர் பிரச்சினையினை முதலில் ஐ.நா வாக்கெடுப்புக்கு கோரினார், ஆனால் குஜராத்தின் ஜூனாகத்தில் முஸ்லீம் அதிகமாயினும் இம்மாதிரி வாக்கெடுப்பில்
இதனால்தான் ஆசிய நாடொன்று பாதுகாப்பு சபையில் இருக்க வேண்டுமென்று வாதாடி சீனாவினை இடம்பெற செய்தார். ஆனால் மாவோவின் வஞ்சகம் நேருவின் மனிதாபிமானத்தை ஏமாற்றிற்று.
ஆயினும் உதவி செய்ய அமெரிக்கா வந்தபொழுதும் அது பெரும் போரானால் பாதிக்கபடுவது இந்தியர் என கருதி அமைதியானார். இதனால் இன்றுவரை அவர் விமரிக்கபடுவது உண்டு. சீனாவினை அவர் நம்பினார், நாம் சகோதரர்கள் என்றார்
நேரு சீனப்போரில் தயங்கியது இதனால்தான், இன்னொன்று அவர் நம்பிய கிருஷ்ணமேனன் அவரை நன்றாக குழப்பினார்.
நேருவின் உள்நாட்டு சாதனை நிரம்ப உண்டு
இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அட்டகாசத்தை ஒடுக்கி, எல்ஐசி எனப்படும் பெரும் நிறுவனமாக்கினார். இன்று இந்தியாவின் பெரும் பொருளக அடையாளம் அது, அந்நிய முதலீட்டில் வெளிநாட்டினருக்கு அது பெரும் விருப்பம்.
மறக்க முடியாது.
ஒருமுறை கேட்டார்கள், இந்தியாவின் பெரும் எதிரி யார்? யார் மூலம் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வரும் என கேட்டார்கள்,
இந்த மதவாதம் வளர்ந்தால் அது இந்தியாவின் நிலையினை பாதிக்கும். பல இனங்கள் வாழும் இந்நாடு சமயசார்பினை கடந்தால் மட்டுமே நிலைத்திருக்கும், இல்லையேல் பல துண்டுகளாக உடையும், அதனால்தான் அழுத்தமாக சொல்கின்றேன்
இன்றுவரை ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் எல்லாம் நேருவினை திட்டி தீர்ப்பது இந்த அறிக்கைக்காகத்தான்
நேரு அனுபவ பூர்வமாக மதத்தால் ஏற்பட்ட அழிவினை பிரிவினையில் கண்டவர், எல்லையில் மதத்தால் பிரிந்த பல ஆயிரம் உயிர்களின் அழுகுரல் சொல்லும் உண்மை அது.
ஒவ்வொரு இந்தியனின் கண்ணீரை துடைப்பதுதான் எனது கடமை,எனது சக்திக்கு அப்பாற்பட்டது ஆயினும் முடிந்தவரை முயற்சிக்கின்றேன் என்ற அவரின் உருக்கம் சாதாரணமானது அல்ல
முன்னாள் சோவியத் அதிபர் கார்பசோவ் சொன்னார், பல இன மக்கள் வாழும் நாட்டில் நேரு போன்ற தலைவர்களின் அணுகுமுறையே சால சிறந்தது,
லெனின்,ஸ்டாலின் வரிசையில் வந்த ஒரு தலைவனின் ஆதமார்த்தமான வார்த்தைகள் அவை.அதன் மதிப்பு அதிகம்.
இன்று அவரின் நினைவுநாள், அவரை கண்ணீரோடு நினைவு கூறலாம்
அவன் காட்டிய வழியே அமைதியான இந்தியா உருவாக வழி, அவ்வழி நடப்போம்
அஞ்சலிக்காக அவரின் படத்தை உற்று பாருங்கள்,நேரு அர்த்தமாக சிரித்துகொண்டிருக்கின்றார்
ஆயிரம் அர்த்தம் நிறைந்த வசீகர சிரிப்பு அது
ஆம் சுதந்திரம் அடைந்த சில மாதங்களில் இந்தியா சிதறும் என்ற உலகத்தார் கணிப்பினை பொய்யாக்கி,
இந்திய மண்ணில் கலந்துவிட்ட அவன் அஸ்தி போலவே அவனின் நினைவுகளும் எக்காலமும் இங்கு நிலைத்திருக்கும்
நவீன இந்தியாவின் தேச தலைவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்