பேச்சு இல்லாமலே காட்சியின் நகைக்சுவையை வெளிப்படுத்தும்.. 🤘
மறுபடி theme music..
இந்தமுறை வீணைக்கு பதிலாக நாகசுரத்தில் ஆரம்பித்து குழலில் theme music வாசித்து பின்னர் அதே theme music முதல் முறை வீணையில் முழுதும் வாசிக்கப்படும்.. 😍😍
பாண்டியனை பார்க்க மகிழ்ச்சியோடு சீதா வரும்போது குழலிசையும், அங்கில்லாமல் தூரத்தில் அவன் சென்றுகொண்டிருப்பதை பார்த்தவுடன் theme music-ஐ வயலினில் சற்று சோகமாகவும்..
காட்சியில் உள்ளவர்களின் உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தது.. 😍😍
மற்றுமொரு சிறந்த நகைச்சுவை காட்சி..
பாண்டியராஜனின் body language.. ultimate 😍😍😂😂😂
காட்சி ஆரம்பம் முதல் தேங்காய் உடைக்க ஆரம்பிக்கும் வரை வரும் குழலிசை 😍
இருவரின் சந்தோசத்தை நாகசுரம் வெளிப்படுத்த, அடுத்த காட்சியில் கிடைக்கும் அதிர்ச்சியை மிருதங்கம் கூட்டிட, theme music சோகமாக மனதை பிழியும்.. 😞😞
பூர்ணம் விஸ்வநாதனின் உள்ளக்களிப்பை வீணை பிண்ணனி இசையாக வெளிப்படுத்தும் 👌
படத்தின் முதல் tragedy scene.. வீணை காட்சியின் இறுக்கத்தை காட்ட, பின் அதனுடன் சேர்ந்த வயலின் மனதை கணக்க வைக்கும்..
ரேவதிக்கு இனி பேச்சு வராது என்றவுடன் வயலின் கதறி நம்மை கலங்க வைக்கும்.. 😞😞😞😞
எங்க வீட்லயும் நிறைய சாமி இருக்கு, என்னைக்காவது ஒரு சாமியாவது பேசியிருக்கா, அதுக்காக அத வெளியவா எறிஞ்சிட்டோம்.. நீயும் எங்க வீட்டுக்கு வர்ற சாமி மாதிரி தான்.. 👌👌👌
இப்படி ஒரு சீரியசான சீன்ல நகைச்சுவை வேற.. VKR பாட்டியை கிணத்துல குதிச்சு பாக்க சொல்றது 😂😂
குழலில் மனதை வருடம் மெல்லிய சோக இசையில் ஆரம்பித்து இறுதியில் வயலினில் theme music வந்து சோகத்தை பன்மடங்காக வெளிப்படுத்தும்.. 👌👌
மற்றுமொரு சிறந்த பிண்ணனியசை.. நகைச்சுவை காட்சிக்கு..
கணவர் பெயரை பாடலால் பாட்டி சொல்வது.. 👌👌👌
காட்சியின் பதட்டத்தை ட்ரம்ஸ் கொடுக்க, அதை வயலின் தொடர, பாண்டியன் சீதா இறந்த செய்தி வந்தவுடன் நாகசுரம் காட்சியின் இறுக்கத்தை பல மாங்காக அதிகரிக்கும்.. 👏👏
பறையில் ஆரம்பித்து, இடையிடையே trumpet ஊத, பின்னர் ரேவது கை கொடுத்தவுடன் காதல் கசக்குதய்யா பாடல் குழலில் ஊத அதற்கு பறையிசை பிண்ணனி இசையாக படம் முடிவடையும்..
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்.. 💪💪💪
இவர் இளவயதில் தற்கொலைக்கு முயன்று அதில் உயிர்பிழைத்தவர்.. தற்போது அமெரிக்காவில் தற்கொலை தடுப்பு சமூக ஆர்வலராக பிரபலமாக இருப்பவர்..
10 வயது இருக்கும் போது வலிப்பு நோய் (epileptic seizures) காரணமாக மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தார்.. 16 வயது வரை அந்த மருந்துகள் சாப்பிட்டவர் வலிப்பு நோய் குணமடைந்ததால் அந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டார்..
ஆனால் அந்த மருந்துகளின் பக்கவிளைவுகளாக மனச்சோர்வு (depression) மற்றும் இருமுனையப் பிறழ்வு (bipolar disorder) அவருக்கு வந்திருப்பதை அவர் அறியவில்லை..