வங்காள விரிகுடா என்ற பெயர் தவறானது... சோழ மண்டல கடல் என்பதே சரியானது! - அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள்!
பல சிறு கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே பெருங்கடல் என சொல்கிறோம். அதன்படி அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய கடல்களும் இந்தியப் பெருங்கடலில்தான் அடங்கும்!
அப்படிப்பட்ட இந்திய பெருங்கடலை கட்டியாண்ட பெருமை தமிழகத்தின் மூவேந்தர்களையே சாரும்!
சோழர்களின் பெருமையும், அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்தது தான்!
சோழமண்டல கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை!
இச்சொல் முகமதிய ஆட்சியின் பொழுதுதான் முதன்முதலாக வருகிறது. வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்க பகுதி வரையில் பரந்த குடாப்பகுதியே விரிகுடா எனப்படுகிறது!
ஆனால் நமது கடல் சோழமண்டலக் கடல், இதனை ஐரோப்பியர்களின் ஒலிப்பில் வேறாக விளங்கியது. சோழமண்டலத்தை #கோரமண்டல் என்று அழைத்தார்கள்!
மத்திய மாநில அரசுகள் இப்பெயரை மரபு அடிப்படையில் நிறுவிட அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!