அந்த இஸ்ரேலியர் சிரியாவில் ஊடுருவி சிரியனாய் வாழ்ந்து ராணுவ ஆலோசகராக உருவெடுத்து இஸ்ரேலை எப்படி எல்லாமோ
சமீபத்தில் அவரின் எலும்புகளையும் அவர் பயன்படுத்திய அந்த தொழில்நுட்ப வாட்சையும் கடத்தி வந்து கண்ணீர் விட்டது இஸ்ரேல்
இந்தியாவிலும் அப்படி ஒருவன் இருந்தான் அவன் பெயர் ரவீந்திர கவுசிக்
அவனும் நபி அகம்த் எனும் பெயரோடு1975ல் ஊடுருவினான், இஸ்லாமியனாக மாறி ஒரு கட்டத்தில் உருது கற்று முழு பாகிஸ்தானியனாகவே மாறிப்போனான்
பாகிஸ்தான் பெண்ணையும் மணந்தான்,கொஞ்சம் கொஞ்சமாக ராணுவ உயர் பதவியினையும் அடைந்தான்
இக்காலகட்டம் கொஞ்சம் மோசமான காலகட்டம்
இப்பக்கம் ஈரானிய புரட்சி அப்பக்கம் ஆப்கன் ரஷ்ய மோதல் என எங்கு திரும்பினாலும் குண்டு சத்தம்
அப்பொழுது சந்தடிசாக்கில் இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த பாகிஸ்தான் ஏகபட்ட ஆட்டங்களை ஆடியது,அதற்கு ஆப்கன் தீவிரவாத குழுக்கள்
ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய பதவியில் இருந்த கவுசிக் அட்டகாசமான தரவுகளை கொடுத்தான்
அவன் பாகிஸ்தான் ஆர்மியினை நடத்திகொண்டே இங்கு தகவல் கடத்தியது எப்படி என்பது இன்றுவரை ஆச்சரியமே
எவ்வளவோ தாக்குதல்கள் அவனால் முறியடிக்கபட்டன
அந்த குவெட்டா அணுவுலை விஞ்ஞானி முடிமுதல் அணுகதிர் மண் வரை அவனாலே இங்கு வந்தது,பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பது தெரிந்தது
விஷயம் இஸ்ரேலால் மோப்பம் பிடிக்கபட்டு மோஷே தயான் அதை தாக்க தயாரானார்
மொரார்ஜி மறுக்க இஸ்ரேலுக்கு ஏமாற்றம்,விளைவு இன்று நாம் காணும் தலைவலி
அதாவது அந்த அளவு மிக துல்லியமான உளவாளியாக இருந்தான் கவுசிக்,பஞ்சாபில் பாகிஸ்தான் தொடங்கிவிட்ட அந்த கலவரத்தின் தரவுகளும் திட்டமும்
ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டல்லவா?
இன்னொரு உளவாளியினை ஈரான் மூலம் உள்ளே அனுப்பியது இந்தியா,அவர் கொஞ்சம் கத்துகுட்டி என்பதால் பாகிஸ்தான் முகத்தில் துண்டு போட்டு அமுக்கியது
இந்திய உளவுதுறை செய்த தவறு கவுசிக் எனும் மகா முக்கிய
அப்படி செய்திருக்க கூடாது மாறாக இடையில் பல கண்ணிகளை வைத்தே இவரை இணைத்திருக்க வேண்டும்
அது செய்யாபட்சத்தில் புதிய உளவாளி கவுசிக்கை காட்டி கொடுத்துவிட்டார்
முதலில் மயக்கம் போட்டு விழுந்த பாகிஸ்தானிய ராணுவ தலைமை
உளவாளிகளின் வாழ்க்கை மகா சோகமானது
மாட்டும் வரை சிக்கல் இல்லை, மாட்டிகொண்டால் சம்பந்தபட்ட நாடு கைகழுவிவிடும்
ஆனானபட்ட எலிகோகனே மாட்டும் பொழுது கவுசிக் மாட்டமாட்டானா?
மாட்டினான்,இந்தியா கனத்த அமைதி.
2 வருடம் அவரை சித்திரவதை செய்த பாகிஸ்தான் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது
இன்று குல்பூஷனுக்காக வாதிடும் இந்தியா ஏதோ செய்து அவனை ஆயுள் தண்டனை கைதியாக மாற்றியது
ஆனால் பாகிஸ்தானின் திட்டமிட்ட கொடும் சிறைவாசம் அவனை நோயாளியாக்கியது
அவன் இந்தியா எப்படியும் தன்னை மீட்கும் என நம்பினான், தன் தாய்க்கு அவன் எழுதிவைத்த கடிதம் எல்லாம் அவன் செத்தபின்பே இங்கு வந்தது
அதில் மிக நம்பிக்கையாக அவன் இருந்தது தெரிந்தது,நாட்டுக்காக அவன் மகிழ்வுடன்
எனினும் தேசம் கைவிடாது என நம்பியிருக்கின்றான்
ஆனால் அது காலம் கடந்த நம்பிக்கை,அப்படியாக சிக்கி கொண்ட உளவாளியினை எந்த தேசமும் காப்பாற்றாது,காப்பாற்றமுடியாது அந்த சாபம் பிடித்த துறை அப்படி
எனினும் இஸ்ரேலை போல பின்னாளில் இந்தியா அவரை தம் உளவாளி என
10 வருட உளவு பணி,16வருடம் கொடும்சிறை என அவன் இத்தேசத்துக்கு செய்த சேவை கொஞ்சமல்ல
இந்தியாவின் எலி கோகன் அவன்
எந்நாளும் இந்தியர் நினைவில் அவன் வாழ்வான்,இன்றும் அவன் பெயரை சொன்னால் பாகிஸ்தான் ராணுவம் சிறு புன்னகை பூத்துவிட்டு
அவக்கு நேற்று நினைவு நாள்,உலகின் தலைசிறந்த உளவாளிகளில் இந்தியரும் உண்டு என நிரூபித்து உயிர்விட்ட அந்த சிங்கத்துக்கு வீர வணக்கம்🙏
இப்படிபட்ட பெரும் தேசபக்தர்கள் பிறந்த நாட்டில் இன்று புலி,பேரரிவாளன்,நளினி என கொடிபிடிக்கும் கும்பலை நினைத்தால்.........