இவ்வளவுக்கும் மருத்துவச்சி என பெண்களுக்கு நாட்டு மருத்துவம் சொல்லிகொடுத்து உருவாக்கிய் தமிழகம்தான்,ஆனால் நவீன கல்வி பக்கம் விடவில்லை
ஆனால் முத்துலெட்சுமி போராடினார்,தனியாக போராடினார் அவரின் உறுதியினை கண்ட புதுக்கோட்டை மன்னரே அவர் படிக்க வழிசெய்தார்
மருத்துவர் ஆயினாலும் மணவாழ்வில் விருப்பமில்லை ஒரு மெழுகின் வாழ்வுபலன் ஆயிரம் மெழுகினை ஏற்றிவைப்பதே என பெண்களுக்காக போராடினார்
1925 வாக்கில் வெள்ளை அரசுகுட்பட்ட உள்ளாட்சி அமைப்பு சென்னை ராஜ்தானியின் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருமானார்
சென்னை கோட்டையில் மக்கள் பிரதிநிதியாய் கால்வைத்த முதல் பெண் அவரே,அவரின் கல்வி
அப்பொழுதுதான் திசைமாறி திரிந்த தேவதாசி ஒழிப்பு சட்டம் அவரால் கொண்டுவரபட்டது, சத்யமுர்த்தி போன்றவர்கள் எதிர்த்தும் அதை கொண்டு வந்தார் முத்துலெட்சுமி
பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் அவராலே கொண்டுவரபட்டது, பின்னாளில் கலைஞர் சட்டமாக்கிய அந்த
தனக்கேற்ற துணையாக தன்னை புரிந்து கொண்ட சுந்தர ரெட்டி என்பவரை மணந்து முத்துலெட்சுமி ரெட்டியானார்
அவர்களின் முயற்சியில் தொடங்கியதுதான் அடையாறு மருத்துவமனை,இன்று புற்றுநோய் சிகிச்சைக்கு தனி அடையாளமாக திகழும் அந்த மருத்துவாலயம்
ஒரு வகையில் சொன்னால் தமிழகத்தின் அன்னை தெரசா முத்துலெட்சுமி ரெட்டி
அந்த மருத்துவ மாமணிக்கு, தமிழக பெண்களின் விடுதலைக்கு முன்னோடிக்கு, என்றுமே தமிழக மகளிரின் தனிபெரும் அடையாளமாக திகழும் அந்த காரிகைக்கு
காலமுள்ள காலம் அவரின் பெயரும் சாதனையும் இங்கு நிலைக்கும்
பாரதியும் பெரியாரும் கிளம்பும் முன்பே யார் சொல்லியும் பெண் விடுதலை நடக்காது,பெண்களே தானாக விலங்கை உடைத்தால்தான் உண்டு என கிளம்பி தன்னை நிருபித்த அந்த சமுக போராளிக்கு இன்று பிறந்தநாள்
பெண்விடுதலைக்கு அவர் முழு ஆதரவினை அன்றே தெரிவித்திருக்கின்றார்,பெரியார் அப்பொழுது களத்திலே இல்லை
இந்தியாவின் முதல் பெண்மருத்துவரை கொடுத்தது தமிழகம்,அன்று கொடிய அடிமைத்தனமான
இந்தியாவிலே முதல்முறையாக பெண்களுக்கு கல்வியும்,சொத்துரிமையும் கொடுத்த இடம் தமிழகம்
அனாதை பெண்குழந்தைகளை ஆதரிக்கும் அவ்வையார் மையங்களை திறந்தது தமிழகம்
இப்படி இந்தியாவுக்கே பெண்விடுதலைக்கு வழிகாட்டிய தமிழச்சி முத்துலெட்சுமி ரெட்டி
குறிப்பாக தமிழக மங்கையருக்கு பெரும் நன்றிகடன் உண்டு
அவர் பாதை காட்டினார் நீங்கள் நடக்கின்றீர்கள்,அவர் விளக்கேற்றினார் நீங்கள் பார்க்கின்றீர்கள்
அஸ்திவாரமாய் நின்றார் நீவீர் கோபுரமாய் உயர்ந்தீர்கள்
தமிழக பெண்களின் நன்றிக்குரிய அந்த முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அடிமை விலங்கை உடைக்க வந்த போராளி தமிழச்சி,அவர் ஏற்றி வைத்த தீபமே இப்பொழுது பிரகாசமாய் எரிகிறது