அவனெல்லாம் உ.பியில் நடப்பதினை பார்த்தால் விஷயம் புரியும்
இந்த கொடுமைதான் அக்காலமும் நடந்தது, இதனை விட கொடுமையான விஷயம் எல்லாம்
இக்கொடுமையில் வாழமுடியாமல்தான், இவர்களின் கொடூர சாதிவெறுப்பிற்கு தப்பித்தான்,மனிதனை மாட்டை விட கேவலமாக பார்க்கும் இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது என்பதால்தான் அபலைகள் அந்நிய மதம் தேடினர்.
கிராமத்து சிறுவர்கள் ஓணான்களை வதைப்பது போல, சரச நடமனாடும் பாம்புகளை சுற்றி நின்று கல்வீசி ரசிப்பதை போல, இந்த சக மனிதர்களை, தாழ்த்தபட்ட மக்களை இம்சிக்கும் கொடுமை காலம் காலமாக உண்டு,
அப்படி வாயுள்ள வாயுள்ள ஜீவன்கள் கதறும்பொழுது,தன் காயத்தை துடைத்து மருந்திட்டு வாஞ்சையுடன் பாதுகாக்கும் ஒருவன் பின் செல்லாதா?
நாயே நன்றியோடு இருக்கும்பொழுது
பின்னாளில் அம்பேத்கார் அதனையே செய்தார், எங்கு தன் இனத்திற்கு சமத்துவமும், அங்கீகாரமும் கிடைக்குமோ அங்கு தேடி சென்றார். இவ்வளவிற்கும் அவர்தான் இந்திய சட்டம் கொடுத்த மேதை
என் மரியாதை எனக்கு முக்கியம், என் மானம் எனக்கு முக்கியம் , நாங்கள் உங்கள் மூட சட்டங்களுக்கு கட்டுபட மாட்டோம் என துணிந்து நின்றார் பெரியார்.
அவர்கள் காசுக்கோ,உணவிற்கோ மதம் மாறியவர்கள் அல்ல,இப்படி உபியில் அடித்தது போலத்தான்,இந்தியா முழுக்க அன்று அடித்தார்கள்,குமரியிலும் அடித்தார்கள்,சூத்திர நாயே உனக்கேன் மேலாடை என சொல்லி அடித்தார்கள்.
ஒரு காதலை பொறுக்காதவர்கள், அந்த சூத்திர சாதி சந்தோஷமாக இருக்க பொறுக்காதவர்களா கல்வி கொடுப்பார்கள்?
காசுக்கும், உணவிற்கும் மாறவில்லை அவர்கள், மாறாக மானத்திற்கும், சமத்துவதுவத்திற்கும் ஏங்கி அழுததால் மாறியவர்கள்
இப்படி அடித்து விரட்டுவார்களாம், கேவலபடுத்துவார்களாம் இதனை எல்லாம் சகித்துகொண்டு இருக்கவேண்டுமாம்,
இதனை பொறுக்க சகிக்காமல் , அடுத்த மதம் ஓடியவர்கள் உணவிற்கும், காசுக்கும் ஓடியவர்களாம், துரோகிகளாம்
புரியாதோர் இனியாவது புரிந்துகொள்ளட்டும்...