ஆம் பழைய ஏற்பாடு முழுக்க யூதருக்கும் அவர் இனத்துகுள்ளான சிக்கலை சொன்னது.
யூதரை தாண்டி அது ஏதும் சொல்லாது, முழுக்க யூதருக்கான வரலாறு கட்டளை தண்டனை அவர்கள் சம்பந்தபட்ட அரசன் இவையேதான் பைபிள்
புதிய ஏற்பாடும் அப்படியே,
சமாரியா என்பது கலப்பு யூத இனம் என்பதால் ஒரிஜினல் யூதர்கள் அவர்களை விலக்கிவைத்தார்கள்,இயேசு அவர்களிடம் அவர்கள் பழைய யூதர் என்பதற்காக சென்றார்
மற்றபடி யூதர் சமாரியரிடம் பழகமாட்டார்கள்
யூதர் இயேசுவினை கொல்லதேடிய காரணத்தில் இதுவும் ஒன்று
இயேசுவும் சாமானியர் அல்ல, ஒரு புற இனத்துபெண் தன் மகளுக்காக வேண்டும்பொழுது "பிள்ளைகளின் உணவு நாய்களுக்கு அன்று" என முகத்தில் அடித்து சொல்கின்றார்
ஆம் நான் யூதர்களுக்கானவன்
"இஸ்ரேலியருக்குள் காணாமல் போனவர்களுக்காக அனுப்பபட்டேன்" என பட்டவர்த்தனமாக தன் யூதவெறியினை சொன்னவர் இயேசு
அவர் வறுமையுற்றோர், ஒடுக்கபட்டவர் என சொன்னதெல்லாம் யூதமதத்தில் ஒடுக்கபட்டவரை சொன்னாரே அன்றி மற்ற இனத்தாரை பற்றி எங்கே கவலைப்பட்டார்?
கிறிஸ்தவம் பின்பு இயேசுவின் சீடர்களால் உலகில் பிற இனத்துக்கு சொல்லபட்டதே அன்றி இயேசு இருக்கும் பொழுது அல்ல
இயேசு வாழும் பொழுது அவர் சீடரை யூதருக்குள் மட்டுமே அனுப்பினார்,
பைபிளை படித்தவர்கள் சொல்வார்கள், அது யூதருகுள்ளான சமூகத்தை பற்றி பேசியதே தவிர யூதர் அல்லாத மக்களை புற இனத்தவர் என ஒதுக்கியே வைத்தது
அந்த பைபிளை சமூக நீதிக்கான நூல் என எஸ்ரா சொல்வாராகில் அது பச்சை பொய்களில் ஒன்று