வெளிமாநிலத்தவனும் அங்கு செல்லமுடியாது,காஷ்மீரியும் யார் கையினையும் பிடித்துமேல் வரமுடியாது
பாகிஸ்தானால் தூண்டபடும் தீவிரவாதமும் அது கொடுத்த வறுமையும் மற்ற மாநில மக்கள் அவர்களை தொடர்பு கொள்ளமுடியா அளவு
வறுமையும் வேலை இல்லா திண்டாட்டமும் இளைஞர்களை எளிதில் தீவிரவாத பக்கம் திருப்பிவிடும்,அங்கு அதுதான் நடந்தது
அங்கு தொழில்தொடங்குவார் யாருமில்லை அதற்கு சட்டமோ சூழலோ சரியில்லை எனும்பொழுது இந்திய ராணுவத்தின் மேல் தாக்குதல் நடத்தும்
ஆம் அதை தவிர ஒரு வளர்ச்சியுமில்லை
ஒரு காஷ்மீரிய விஞ்ஞானி என்றோ இல்லை காஷ்மீரிய தொழிலதிபர் என ஒருவரையாவது இங்கு சுதந்திர இந்தியாவில் காட்டமுடியுமா?
ஒருகாலமும் முடியாது, சுதந்திர இந்தியா அதற்கு வாய்பளிக்கவில்லை அந்த சட்டம் அவர்களை
மன்னர்கால சட்டம் காஷ்மீரின் தனிதன்மையினை ஒழித்துவிடும் என கருதிய சலுகைகளே அவர்களை பின்னோக்கி இழுத்து சென்றது
இனி காஷ்மீர் பொருளாதார வளர்ச்சிக்கு திறந்துவிடப்படும்
சிலர் சொல்வது போல தனிநாடு ஆனாலும் அது ஒன்று பாகிஸ்தானால் விழுங்கபடும்
இந்தியா ஒருவகையில் அவர்களை தன்னோடு இழுத்து இனி வளருங்கள் புதிய உலகில் காலடி எடுத்து வையுங்கள் என இன்று அழைத்து வந்திருக்கின்றது
ஹாங்காங் வளர்ந்த பிரதேசம் அதை சீனா இன்றும் தன்னாட்சி பகுதியாக நடத்தி வந்தாலும் ஹாங்காங் அடிக்கடி திமிறுகின்றது
ஆனால் நாமோ பிந்தங்கிய மாநிலத்தை இதுகாலம் சிறப்பு பகுதியாக நடத்தி அவர்களை பின்னடைய செய்திருந்தோம்
தொழில் வளர்ந்து பணபுழக்கம் அதிகமானால் கல்வியும் தொழிலும் வளர்ந்தால் அங்கு தீவிரவாதம் எனும் சொல்லே வராது
ஆம் வளர்ந்துவிட்ட சமூகத்தில் தீவிரவாதத்தை ஒருகாலமும் புகுத்தமுடியாது அது அங்கு வளராது.
காஷ்மீர் சுற்றுலாமுதல் ஏகபட்ட விஷயங்களுக்கு புகழ்பெற்ற பூமி, ஆசீர்வதிக்கபட்ட மலைநாடு
இனி சர்வதேச முதலீடுகள் அங்கு கொட்டபடும் இன்னும் சில ஆண்டுகளில் அது மாபெரும் வளர்ச்சியினை எட்டும்
அதுவரை கத்துபவன் கத்திகொண்டே இருக்கட்டும்
இந்தியா நல்லதைத்தான் அவர்களுக்கு செய்திருக்கின்றது