அவனோ அதை கடந்து அடுத்த விஷயத்திற்கு சென்றுவிடுவான்,அவர்களும் விடாமல் வந்து வம்பிழுப்பார்கள்
அந்த அற்புத மனிதனின் 50 ஆண்டுகால வரலாறு சொல்லும் பாடம் அது
கடைசியிலும் அந்த புதிய சட்டமன்ற கட்டடத்தை
அதை அவனுக்காக கட்டினானா? இல்லை தன் குடும்பத்துக்காக கட்டினானா? தமிழகத்துக்கும் அதன் கம்பீரமான தோற்றத்துக்கும் கட்டினான்
இன்னும் 300வருடம் அது தாங்கும் அளவு நுணுக்கமாக கட்டினான்
அது பொறுக்கவில்லை என்றால் எவ்வளவு வன்மம் அவன் மேல் இருந்திருக்க வேண்டும்?
அதையும் பயன்படுத்தாமல் அவனை நோகவைத்து கொன்றார்கள்
அவனுக்கு ஏதும் மகத்தான அஞ்சலி என்றால் சட்டமன்றம் அந்த புதிய கட்டடத்துக்கு குடிபெயர்தலே ஆகும்
ஆனால் இந்த அரசு அங்கு செல்லாமலே
காலங்கள் மாறும்பொழுது காட்சிகள் மாறும்,அப்பொழுது அந்த புதிய சட்டமன்ற வாசலில் அந்த பெருமகனுக்கு கண்டிப்பாய் ஒரு சிலை நிறுவபட வேண்டும்
வாழ்நாளெல்லாம் அவனை கொத்தி கொத்தி விரட்டினார்கள் அல்லவா? அந்த காயத்துக்கான மருந்து அதுதான்,பரிகாரமும் அதுதான்