#Kaivalliya_navaneetam#கைவல்லிய_நவநீதம் -50
மீள் பதிவு -ஈசன்
இந்த சூக்ஷ்ம உடம்பு நாம் விழிச்சுகிட்டு இருக்கிறப்ப இருக்கும். செத்து போன பிறகு இருக்காது.
நடுவிலே தூங்கி கனவு காணும்போதும் இருக்கும். கனவு காணும்போது நம்ம எங்கோ போகிறோம், வரோம், ஆனா உடம்பு இங்கேயேதான் இருக்கு. 1/11
அப்ப அன்ன மய உறை- தூல உடம்பு சும்மாதான் கட்டை மாதிரி கிடக்கு. ஆனா உணர் கருவிகள், செயல் கருவிகள், வேலை செய்கிற சக்தி, அந்தக்கரணம் எல்லாம் சேத்து- என்ன பேர் சொல்லுங்க? ஆங்! சூக்ஷ்ம சரீரம், அது இருக்கும். கனவிலே எங்கோ போகிறோம். கை கால்கள் வேலை செய்வதா உணர்கிறோம். நான் என்கிற 2/11
நினைப்பும் இருக்கு. மூச்சு விட்டுகிட்டுதான் இருக்கோம்.
இந்த கனவு நிலையிலே - அவஸ்தையிலே- சூக்ஷ்ம - சூக்கும சரீரம் இருக்கும்.
தூங்கி கனவு கூட இல்லாத நிலையிலே நாம ஆனந்தமா இருப்போம். கனவிலே அப்படி சொல்லமுடியாது. பயங்கர கனவு வந்து கஷ்டப்பட்டாலும் படுவோம். சுகமான கனவுகளும் வரலாம். 3/11
ஆனா ஆழ் துயிலுக்கு பின்னே முழுச்சுகிட்டு அருமையான தூக்கம் சொகம் என்போம். இதுவே ஆனந்த மய கோசம்..
-
பரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இது ஆழ்துயில் போல- சுசுப்தி நிலை. இந்த உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே 4/11
தான் பிரம்மத்திலேயே லயிச்சு ஆனந்தமா இருக்கிறதால ஆனந்த மய கோசம்.
அது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...
சினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு5/11
துக்கப்பட்டு... புரியுது இல்லையா? ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். சினிமாதான் பாக்கிறோம், இது உண்மையில்லை என்கிறது போல. நமக்கு அப்படி தெரியாது, சினிமாலேயே ஒடுங்கி போனது போல.
இனிப்பிலேயே சர்க்கரை இனிப்பு, மாம்பழத்தின் இனிப்பு, மாவு பண்டங்களோட அசட்டு 6/11
இனிப்பு ன்னு பலவிதமா இருக்கே! முதலாவது திகட்டிடும். இரண்டாவது நிறையவே சாப்பிடலாம். திகட்டாது. மூணாவது இனிப்பிலே சேத்தியாங்கிற அளவு கம்மியாவே இனிப்பு.
அது போல இந்த சத்துவத்திலேயே இன்னும் அதிக பிரிவா சத்துவம் ராஜசம் தாமசம் ன்னு பிரியும்.
முன்னேயே ஒரு வாக்கியம் பாத்தோம். 7/11
முக்குணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொண்ணு தலைதூக்கும்.
ஈஸ்வரனா இருக்கிற பிரம்மம் ஒண்ணேதான். இருந்தாலும் ஈஸ்வரன் நேரம் செயல்களுக்கு தகுந்தாப்போலே பலதா இருப்பான்.
ராஜசம் அதிகமாகும் போது பிரம்மனா இருந்து படைக்கிறான்.
சத்துவம் அதிகமாகும் போது விஷ்ணுவா இருந்து காக்கும் 8/11
தொழில் செய்யறான்.
தாமசம் அதிகமாகும் போது சிவனா இருந்து அழிக்கும் தொழில் செய்கிறான்.
[சைவர்கள் சிவனுக்கே 5 தொழில்ன்னு சொல்லி இதை எல்லாமே சேத்துடுவாங்க. அப்படி சொல்கிறபோது அவங்க சிவன் என்கிற பேரிலே பரம்பொருளைத்தான் சொல்கிறாங்க. அதே போல சாக்தர்களூம், வைணவர்களும். 9/11
அழைக்கிற பொருள் ஒண்ணே; பெயர்தான் வேற வேற. விநாயக புராணம் பாத்தா அவரே முழுமுதற் கடவுள்ன்னு சொல்லும். சிவ புராணம் பாத்தா சிவன்தான் முதல்லே. இப்படியே மத்தது எல்லாமும். படிக்கிறவங்களுக்கு புரியணும், குழம்பக்கூடாதுன்னு இப்படி சொல்லி இருக்கு. 10/11
ஆனா நாமோ எல்லாத்தையுமே படிச்சுட்டு குழம்பறோம்! பல வழிகளிலே ஒரே நேரத்துக்கு போகப்பாக்கிற மாதிரி இது!]
{பரப்பிரம்மத்தின் சத்துவ பாகத்தில் இருந்து ஈஸ்வரன் என்கிற கடவுள் தோன்றினார். அவரே மூன்று விதமாக செயல்படுகிறார். அப்போது அவருக்கு பெயரும் மாறுகிறது.} 11/11
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
English Translation of Shri.Vimal Jain’s tweet:
For several years we have been consuming imported pulses. 2 years back Modi ji started stopping it and now it has been completely stopped. this protest against farmers laws is just a Sham. the real reason and story are here.
1/n
Let us read. In 2005 Manmohan stopped the subsidies for pulses. after 2 years Netherland, Australia and Canada entered into understanding with the government which was importing the pulses. several big pulses farms came up in Canada. they were handed over to the Punjabi sikhs
2/n
who were residing there and so India started importing Canadian pulses in a big way. big importers like Amarinder, Kamal nath and such congressmen along with akalis like Badal were there. they started selling the pulses the rate of 200 to 250 per kilo and soon they were
3/n
#நான்யார்? - 16
அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?
நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மாபத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும்
1/8
இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!
பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?
முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஸ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு
2/8
இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்? பரமேஸ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான்
3/8
#நான்யார்? - 15
நடக்கறது எல்லாமே கடவுளோட வேலைதானே?
சூரியன் உதிக்கணும்ன்னு நினைச்சா உதிக்கறான்? அது இயற்கை. ஆனா அதுக்கப்பறமா உலகத்துல சூடு ஏறுது; கந்தக பூமில வாழறவங்க சூட்டை உணருவாங்க. சூரியன் உதிச்சா தாமரை மலருது. தரையில் இருக்கற ஈரம் உலருது. இதெல்லாம் இயற்கைதானே? காந்தக்கல்
1/7
முன்னே வைக்கிற இரும்பு ஊசி அதால கவரப்படறது இயற்கை என்கிறது போல ஈஸ்வரனோட சந்நிதியில பூமியில் அத்தனை பேரும் அவரவர் வேலையை செய்ய ஆரம்பிக்கறாங்க. என்ன செய்யறாங்க என்கிறது அவரவர் கர்மாவை பொருத்து அமையுது. இவரிவர் இப்படி இப்படி செய்யணும்ன்னு ஈஸ்வரனுக்கு சங்கல்பம் ஒண்ணும்
2/7
கிடையாது.
நிஷ்காம்ய கர்மம் பத்தி தெரியுமில்லே? முன்னேயே அது பத்தி பாத்து இருக்கோம். மனுஷனுக்கே இயற்கையா செய்கிற கர்மாவுடைய பலன் அவனுக்கு ஒட்டாதுன்னா ஈஸ்வரனோட சன்னிதான விசேஷத்தால மட்டுமே நடக்கும் கர்மாவுக்கும் அவருக்கும் எப்படி சம்பந்தம் வரும்?
சூரியனோட முன்னிலையில்
3/7
அந்த சொரூபம் எப்படி இருக்கும்? அதோட இயல்பு என்ன?
சொரூபம் மட்டுமே இயல்பா இருக்கும். அதுவே ஆத்மாவோட சொரூபம். நாம உலகம், சீவன், கடவுள்ன்னு எல்லாம் சொல்கிறோமே அது எல்லாமே இது மேல தோற்றுவிக்கப்பட்ட கற்பனைகளே.
கடற்கரையில ஒரு சிப்பி இருக்கு. நாம கடற்கரையில் உலாவ
1
போகறப்ப இது நம் கண்ணுல படுது. சூரிய ஒளியில இது பளிச்சுன்னு இருக்கு. நாம அதை ஏதோ வெள்ளியால செஞ்ச பொருள் அங்கே கிடக்குன்னு நினைப்போம். கிட்டே போய் பார்க்கிற வரைக்கும் இது நமக்கு வெள்ளியாத்தான் தோணும். கிட்டே போய் பார்த்தா து வெள்ளி இல்லே, சிப்பின்னு தெரியும்.
அது போலத்தான்
2
இதுவும். சீவன், ஈஸ்வரன், உலகம்ன்னு எல்லாம் கற்பனை செஞ்சது எல்லாம் ஒரே பொருளைத்தான். விசாரணை செஞ்ச பிறகே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; அது நம்மோட பார்வையை பொருத்தே இருந்ததுன்னு தெரிய வரும்.
16. சொரூபத்தின் இயல்பு என்ன?
யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே. 3/4
ம்ம்ம்... ஒரு வேளை நீங்க சொல்லறத நம்பி விசாரணையை ஆரம்பிச்சுட்டேன்னு வைங்க. எது வரைக்கும் அதை செய்யணும்?
எது வரைக்கும் உலக விஷயங்களில ஈர்ப்பு இருக்கோ அது வரை செய்யணும். நினைவுகள் எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் அவை கிளம்பற இடத்திலேயே நசுக்கணும். அத எப்படி
1/5
செய்யறதுன்னு ஏற்கெனெவே பாத்து இருக்கோம்.
முன் காலத்து ராஜா ராணி கதை மாதிரி. ஒரு கோட்டையிலேந்து வீரர்கள் வந்து கொண்டே இருக்காங்க. அவங்க வர வர ராஜ குமாரன் அவங்களை வெட்டி வீழ்த்திகிட்டே இருப்பான்னு கதை வருமில்ல? அந்த மாதிரி மனசுலேந்து எண்ணங்கள் வர வர அதை எல்லா நசுக்கி
2/5
போட்டுகிட்டே இருந்தா ஒரு வழியா வாசனைகள் எல்லாம் போய் அவை வரது நின்னுடும். சொரூபத்தையே த்யானம் செய்து கொண்டு இருப்பதே போதும். சொரூபத்தை அடைஞ்சுடுவான்.
15. விசாரணை எதுவரையில் வேண்டும்?
மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும்
3/5
#நான்_யார்? - 8
மனசாலத்தான் பார்க்கிறோம்ன்னா அந்த மனசோட சுய ரூபம் என்ன?
ஆத்மா ஆத்மான்னு சொல்லறாங்களே அதில இருக்கிற ஒரு அதிசயமான சக்திதான் மனசு என்கிறது. நாம் விழிப்போட இருக்கோம்; கனவு காண்கிறோம் என்றால் அதை மனசே தோற்றுவிக்கிறது. நாம இதைப்பார்க்கிறோம் அதைப்பார்க்கிறோம்ன்னா
1/12
அப்படி மனசு நினைக்கிறது. அதாவது அதை மனசே தோற்றுவிக்கிறது. இந்த மனசு என்ன? நினைவுகள்தான். நினைப்புகள் இல்லைன்னா மனசும் இல்லை.
இந்த ஐம்பொறிகள் வழியா மனசு வெளியே பார்க்கிறது. இதோ இந்த ரோஜாப்பூ இளம் சிவப்பா இருக்கு. நல்ல வாசனையோட இருக்கு. ரொம்ப மிருதுவா இருக்கு. ஊஊஊ! கூட
2/12
முள்ளும் இருக்கு. ரொம்ப அழகா இருக்கு - இந்த ரீதியில மனசு அதைப்பத்தி நினைக்க நினைக்க அதை நாம பார்க்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கோம். வேகமா அந்த ரோஜாச்செடியை தாண்டி போறோம். அதை பார்க்கக்கூட இல்லை! அப்ப நம்மைப்பொறுத்த வரை அது இல்லை. ஏம்பா வந்த வழில ஒரு ரோஜாச்செடி இருந்ததாப்பான்னு
3/12