#நான்யார்? - 16
அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?
நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மாபத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும்
1/8
இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!
பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?
முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஸ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு
2/8
இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்? பரமேஸ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான்
3/8
இந்த மூட்டையை தூக்கிகிட்டு போறேன்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ட்ரெய்ந்தான் நம்மை சுமக்குது. நாம் மூட்டையை தூக்கி மேலே வெச்சுகிட்டா அதையும் சேத்து தூக்கிக்கும், மூட்டையை கீழே வைச்சாலும் வைக்காட்டாலும் மூட்டையை சுமக்கறது ட்ரெய்ந்தானே? அப்ப அதை நாம் ஏன் தலையில தூக்கி
4/8
வெச்சுக்கணும்?
அது போலத்தான் எல்லா காரியங்களையும் அதே பரமேஸ்வர சக்தி நடத்தறபடி நடத்திகிட்டு போகட்டும்ன்னு விட்டுடணும். நாம நம்ம வாசனைப்படி இயங்கி நம்முடைய கர்மாவை தீர்த்துப்போம். புதுசா எதையாவது செஞ்சு கர்மாவை மேலும் சம்பாதிச்சுக்காம இருந்தாலே போதும்.
5/8
18. பக்தருள் மேலான பக்தர் யார்?
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றுமிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு
6/8
பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல், 'இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு'மென்று சதா சிந்திப்பதேன்?
7/8
புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற் போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?
8/8
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நான்யார்? - 15
நடக்கறது எல்லாமே கடவுளோட வேலைதானே?
சூரியன் உதிக்கணும்ன்னு நினைச்சா உதிக்கறான்? அது இயற்கை. ஆனா அதுக்கப்பறமா உலகத்துல சூடு ஏறுது; கந்தக பூமில வாழறவங்க சூட்டை உணருவாங்க. சூரியன் உதிச்சா தாமரை மலருது. தரையில் இருக்கற ஈரம் உலருது. இதெல்லாம் இயற்கைதானே? காந்தக்கல்
1/7
முன்னே வைக்கிற இரும்பு ஊசி அதால கவரப்படறது இயற்கை என்கிறது போல ஈஸ்வரனோட சந்நிதியில பூமியில் அத்தனை பேரும் அவரவர் வேலையை செய்ய ஆரம்பிக்கறாங்க. என்ன செய்யறாங்க என்கிறது அவரவர் கர்மாவை பொருத்து அமையுது. இவரிவர் இப்படி இப்படி செய்யணும்ன்னு ஈஸ்வரனுக்கு சங்கல்பம் ஒண்ணும்
2/7
கிடையாது.
நிஷ்காம்ய கர்மம் பத்தி தெரியுமில்லே? முன்னேயே அது பத்தி பாத்து இருக்கோம். மனுஷனுக்கே இயற்கையா செய்கிற கர்மாவுடைய பலன் அவனுக்கு ஒட்டாதுன்னா ஈஸ்வரனோட சன்னிதான விசேஷத்தால மட்டுமே நடக்கும் கர்மாவுக்கும் அவருக்கும் எப்படி சம்பந்தம் வரும்?
சூரியனோட முன்னிலையில்
3/7
அந்த சொரூபம் எப்படி இருக்கும்? அதோட இயல்பு என்ன?
சொரூபம் மட்டுமே இயல்பா இருக்கும். அதுவே ஆத்மாவோட சொரூபம். நாம உலகம், சீவன், கடவுள்ன்னு எல்லாம் சொல்கிறோமே அது எல்லாமே இது மேல தோற்றுவிக்கப்பட்ட கற்பனைகளே.
கடற்கரையில ஒரு சிப்பி இருக்கு. நாம கடற்கரையில் உலாவ
1
போகறப்ப இது நம் கண்ணுல படுது. சூரிய ஒளியில இது பளிச்சுன்னு இருக்கு. நாம அதை ஏதோ வெள்ளியால செஞ்ச பொருள் அங்கே கிடக்குன்னு நினைப்போம். கிட்டே போய் பார்க்கிற வரைக்கும் இது நமக்கு வெள்ளியாத்தான் தோணும். கிட்டே போய் பார்த்தா து வெள்ளி இல்லே, சிப்பின்னு தெரியும்.
அது போலத்தான்
2
இதுவும். சீவன், ஈஸ்வரன், உலகம்ன்னு எல்லாம் கற்பனை செஞ்சது எல்லாம் ஒரே பொருளைத்தான். விசாரணை செஞ்ச பிறகே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; அது நம்மோட பார்வையை பொருத்தே இருந்ததுன்னு தெரிய வரும்.
16. சொரூபத்தின் இயல்பு என்ன?
யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே. 3/4
ம்ம்ம்... ஒரு வேளை நீங்க சொல்லறத நம்பி விசாரணையை ஆரம்பிச்சுட்டேன்னு வைங்க. எது வரைக்கும் அதை செய்யணும்?
எது வரைக்கும் உலக விஷயங்களில ஈர்ப்பு இருக்கோ அது வரை செய்யணும். நினைவுகள் எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் அவை கிளம்பற இடத்திலேயே நசுக்கணும். அத எப்படி
1/5
செய்யறதுன்னு ஏற்கெனெவே பாத்து இருக்கோம்.
முன் காலத்து ராஜா ராணி கதை மாதிரி. ஒரு கோட்டையிலேந்து வீரர்கள் வந்து கொண்டே இருக்காங்க. அவங்க வர வர ராஜ குமாரன் அவங்களை வெட்டி வீழ்த்திகிட்டே இருப்பான்னு கதை வருமில்ல? அந்த மாதிரி மனசுலேந்து எண்ணங்கள் வர வர அதை எல்லா நசுக்கி
2/5
போட்டுகிட்டே இருந்தா ஒரு வழியா வாசனைகள் எல்லாம் போய் அவை வரது நின்னுடும். சொரூபத்தையே த்யானம் செய்து கொண்டு இருப்பதே போதும். சொரூபத்தை அடைஞ்சுடுவான்.
15. விசாரணை எதுவரையில் வேண்டும்?
மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும்
3/5
#நான்_யார்? - 8
மனசாலத்தான் பார்க்கிறோம்ன்னா அந்த மனசோட சுய ரூபம் என்ன?
ஆத்மா ஆத்மான்னு சொல்லறாங்களே அதில இருக்கிற ஒரு அதிசயமான சக்திதான் மனசு என்கிறது. நாம் விழிப்போட இருக்கோம்; கனவு காண்கிறோம் என்றால் அதை மனசே தோற்றுவிக்கிறது. நாம இதைப்பார்க்கிறோம் அதைப்பார்க்கிறோம்ன்னா
1/12
அப்படி மனசு நினைக்கிறது. அதாவது அதை மனசே தோற்றுவிக்கிறது. இந்த மனசு என்ன? நினைவுகள்தான். நினைப்புகள் இல்லைன்னா மனசும் இல்லை.
இந்த ஐம்பொறிகள் வழியா மனசு வெளியே பார்க்கிறது. இதோ இந்த ரோஜாப்பூ இளம் சிவப்பா இருக்கு. நல்ல வாசனையோட இருக்கு. ரொம்ப மிருதுவா இருக்கு. ஊஊஊ! கூட
2/12
முள்ளும் இருக்கு. ரொம்ப அழகா இருக்கு - இந்த ரீதியில மனசு அதைப்பத்தி நினைக்க நினைக்க அதை நாம பார்க்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கோம். வேகமா அந்த ரோஜாச்செடியை தாண்டி போறோம். அதை பார்க்கக்கூட இல்லை! அப்ப நம்மைப்பொறுத்த வரை அது இல்லை. ஏம்பா வந்த வழில ஒரு ரோஜாச்செடி இருந்ததாப்பான்னு
3/12
ஏன், உலகம் இருக்கிறப்பவே, தெரியறப்பவே சொரூப தரிசனம் கிடைக்காதா?
கிடைக்காது.
ஏன்?
நாம் உள்ளதை உள்ளபடி பார்க்கவில்லை என்கிறதே அடிப்படையில் பிரச்சினை.
சயன்ஸ்படியே பார்க்கலாம். பல வருஷங்களுக்கு முன்னால (atom) ஆட்டம் ந்னு சொன்னாங்க. அதுக்கு அர்த்தமே
1/6
பிளக்க முடியாதது என்பது. அப்புறமா அதை பிளந்தாங்க. ந்யூட்ரான் ப்ரோட்டான் எலக்ட்ரானு சொன்னாங்க. அப்புறம் இன்னும் மாறித்து… க்வார்க்ஸ் ந்னாங்க. இப்படியே போய் அது எனர்ஜியா இல்லை பருப்பொருளான்னே சந்தேகம் வந்துகிட்டு இருக்கு.
வெளிப்புறமா பார்க்க பல ஆட்டம்கள் சேர்து ஒரு
2/6
எலெமெண்டாவும் அது பலது சேர்ந்து காம்பவுண்டாவும் அதுவே இன்னும் பல சேர்க்கையில் விதவிதமான பொருட்களாவும் எல்லையில்லாம விரிஞ்சுகிட்டே போகிறது. இப்படி ஒரு பொருளை உள்ளே நுணுக்கமா பார்க்கையில் ஒரு விதமாகவும் வெளியே விரிச்சு பார்க்கையில் பலவிதமாவும் இருக்கு.
ஆக உள்ளதை உள்ளபடி
3/6
#நான்_யார்? - 4
அப்படி கிடைக்க நம்மை நாம யார்ன்னு தெரிஞ்சுக்கணும்!
யோவ்! என்னை எனக்கு தெரியாதா என்ன? என்ன உளரல் இது?
–
ம்ம்ம்! தெரியறதான்னு பாத்துடலாமே!
நான் இந்த உடம்பா? சர்வ சாதாரணமா என் கை, என் கால், என் உடம்பு வலிக்கறது ந்னு எல்லாம் சொல்லறோமே? அப்ப உடம்பும் நானும் வேற
1/11
வேறத்தானே? ரொம்ப ரொம்ப சிம்பிளா நான் செத்துப்போனப்பறமும் இருக்கற இந்த உடம்பை நான்ன்னு எப்படி சொல்லறது? அப்படியேவிட்டா சில நாட்கள், பதப்படுத்தி வெச்சா இன்னும் பல நாட்கள் இருக்கிற இந்த உடம்பு நானா? இதயம் துடிச்சு கொண்டிருந்தாலும் மூச்சு லேசா விட்டுக்கொண்டு இருந்தாலும் கூட சில
2/11
சமயம் டாக்டர்கள் இது தேறாதுன்னு சொல்லிடறாங்களே? ப்ரெய்ன் டெட் ந்னு சர்டிஃபை பண்ணி அதிலேந்து சிறுநீரகம் முதற்கொண்டு பலஉறுப்புக்களை எடுத்து வேற வேற ஆசாமிங்களுக்கு வெச்சுடறாங்களே? இந்த உடம்பு நானா இருக்க முடியாது.
இந்த உலகத்தை நான் அஞ்சு உணர்வுகளால அறியறேன். எல்லாமே இந்த அஞ்சுல
3/11