1 - Jet Airways closed
2 - Air India in Rs 7600 crore loss
3 - BSNL 54,000 jobs in danger
4 - No money to pay salary for HAL employees
5 - Postal department loss of Rs 15000 crores
6 - About 1000000 to be laid off in Auto Industry
7 - 12.76 lakhs houses unsold in 30 major cities
8 - Aircel is dead for Jio life.
9 - JP Group finished
10 - Most profitable company in India - ONGC is now making losses
11 - 36 largest debtors missing from country.
12 - Rs 2.4 lakh crores loan waive off to a few corporates
13 - Punjab National Bank continues to loss.
14 - All banks incurring huge losses
15 - External debt on country 500+ Billion Dollars
16 - Railways on sale
17 - Rent Heritages including Red Fort
18 - Largest car maker Maruti cuts production
19 - Rs 55000 crores car inventory lying at factories, with no buyers.
20 - Builders all over stressed. Some committing Suicide, no buyers Construction Stopped due Mat cost rise (GST at 18% to 28%)
21 - OFB under corporatization affecting over 1.5 lac employee & families.
22 - 1.5 Million directly unemployed due to Demonetisation
23 - Highest unemployment in 45 years.
24 - 5 airports sold to Adani.
25 - Highest domestic stagflation.
26 - Record HNI individuals leaving India
27 - Videocon bankrupt.
28 - 35% people about to layoff in construction field alone.
எல்லை பிரிப்பு போராட்டம் - எல்லை காப்பு போராட்டம் என்பது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டம்.
ஆனால், தமிழ்நாடு என தாயகத்துக்கு பெயர் சூட்டப்பட்டவேண்டும் என்பதற்கான போராட்டம், ஒரு தன்னெழுச்சிகரமான பண்பாட்டு போராட்டம்.
எல்லை போராட்டத்துக்கு முன்பாகவே, இந்திய சுதந்திரத்துக்கும், இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும் தமிழர்கள் தொடங்கிய பண்பாட்டு அரசியல் செயல்பாடு 'தமிழ்நாடு பெயர் சூட்டல்'.
அந்த பண்பாட்டு அரசியல் செயல்பாடு என்பது, வெறும் கலாச்சார காப்பு போராட்டம் மட்டுமல்ல.
மாறாக, தமிழர்கள் தங்களின் இறையாண்மை அதிகாரத்தை நிறுவிக்கொண்ட தினத்துக்கான போராட்டம். ஆழமாக பார்த்தால், தமிழர்கள் தங்களின் இறையாண்மை அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலை வெற்றிகண்டு களி தீர்த்த நன்னாள் என ஜூலை 18-ஐ கொண்டாட வேண்டும்.
ஏப்ரல் 21ம் தேதி பாஜக அரசு தடுப்பூசி கொள்முதல் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது.
இந்தியாவில், ஏப்ரல் 21,2021 வரை சுமார் 10.95 கோடி பேர் முதல் தடுப்பூசி (Dose 1) செலுத்தப்பட்டிருந்தனர்.
முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில், 1.74 கோடி பேர் இரண்டாம் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். சுமார் 9.21 கோடி பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியிருந்தது.
இதில், மிக அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பிரிவினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. இந்த வயதினருக்கு 4.73 கோடி முதல் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 45-60 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 4.35 கோடி பேருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மும்மொழிக்கொள்கை முன்வைப்பவர்கள் முன்னெடுக்கும் முக்கியமான வாதம். இந்தி இந்தியாவின் மிகப்பெரும்பான்மையான மொழி, அதைப்படித்தால் இந்தியாவுக்குள் எங்கும் செல்லலாம் என்பது.
இந்தியாவே ஹிந்து பேசுகிறது; எனவே எல்லோரும் பேசுங்கள் என்பதே அந்தக்குரல். எல்லோரும் ஹிந்தி பேசுகிறார்கள் - பேச விரும்புகிறார்கள் என்றால், யாரைப் பார்த்து இன்னமும் ஹிந்தி பேசு என்கிறார்கள் இவர்கள்?
முதலில் இந்தியாவில் எல்லோரும் ஹிந்தி பேசுகிறார்கள் என்பது உண்மையா?
2011ம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மொழிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்திய அரசு நடத்திய அந்தக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்த்து 12 மாநிலங்களில் மட்டுமே ஹிந்தி பேசப்படுகிறது.
கோல்காபூர் மன்னர் சாகு மகாராஜ், பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த நாள் ஜூலை 26, 1902. பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கான ஒதுக்கீடு தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகி வரும் சூழலில், சாகுமகாராஜ் நினைவுக்குரியவராகிறார்.
சாகு மகராஜின் நினைவையொட்டி எழும் ஒரு முக்கியமான கேள்வி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கான இட உரிமைச் சட்டத்தின் உண்மையான பலன் கிடைக்கிறதா?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு 25 ஆண்டுகளுக்குப்பின் செய்யப்படும் ஆய்வுகள் அதிர்ச்சியையே தருகின்றன.
இந்தியாவின் ஒன்றிய அரசின் முதன்மை குடிமைப்பணிகளான Group A பதவிகளில் 14% இடங்களும், Group Bல்- 13% பிற்படுத்தப்பட்டோர் இடங்களும், Group C- 5% இடங்களும் நிரப்பப்படவில்லை. அதாவது பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு வந்து சேர வேண்டிய சுமார் 1.76 லட்சம் பணி இடங்கள் வந்து சேரவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல், வரலாற்றுப் பங்களிப்புகளை பட்டியலிட்டால், மிகச்சிறந்த, தனித்துவமிக்க அதிகாரக் கட்டுமானத்தை உருவாக்கியதில் அதற்கு முக்கிய இடம் உண்டு. அவர் உருவாக்கிய, முன்னிறுத்திய, பயன்படுத்திக் கொண்ட IAS பட்டாளம், அரசை மக்களை நோக்கி மிகச்சரியாக செலுத்தக்கூடியது.
People - Government connection-ல் அரசைத் தக்கவைப்பதில் அவர்களுக்கு இணையான அதிகாரிகள் சமகால வரலாற்றில் யாராலும் கண்டெடுக்கப்படவில்லை. ஸ்டாலினே அதைச்செய்தார். மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக அவர் இருந்தபோது கண்டெடுக்கப்பட்ட முன்னிறுத்தப்பட்ட அதிகாரிகள் மிகச்சிறந்தவர்கள்.
27% இடஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், சமூக நீதி அரசியல் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறதோ அதற்கு நிகராக எதிர்த்து போராட வேண்டிய சூழ்ச்சிகளும், வன்மமும், குயுக்திகளும் இருக்கின்றன.
என்னென்ன அவை?
27% இட ஒதுக்கீட்டை, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிறைவேற்றுவதற்கான விருப்பம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பது, அரசியல் ரீதியான முக்கிய வெற்றி.
ஏனென்றால் ALQல் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது ஒன்றிய அரசின் கடமை அல்ல என்றே இதுவரை டெல்லி சொல்லிவந்தது.
ஆனால், இம்முறை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மனு, அகில இந்திய தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டை தன் அதிகாரத்தால் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.