எல்லை பிரிப்பு போராட்டம் - எல்லை காப்பு போராட்டம் என்பது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டம்.
ஆனால், தமிழ்நாடு என தாயகத்துக்கு பெயர் சூட்டப்பட்டவேண்டும் என்பதற்கான போராட்டம், ஒரு தன்னெழுச்சிகரமான பண்பாட்டு போராட்டம்.
எல்லை போராட்டத்துக்கு முன்பாகவே, இந்திய சுதந்திரத்துக்கும், இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும் தமிழர்கள் தொடங்கிய பண்பாட்டு அரசியல் செயல்பாடு 'தமிழ்நாடு பெயர் சூட்டல்'.
அந்த பண்பாட்டு அரசியல் செயல்பாடு என்பது, வெறும் கலாச்சார காப்பு போராட்டம் மட்டுமல்ல.
ஏப்ரல் 21ம் தேதி பாஜக அரசு தடுப்பூசி கொள்முதல் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது.
இந்தியாவில், ஏப்ரல் 21,2021 வரை சுமார் 10.95 கோடி பேர் முதல் தடுப்பூசி (Dose 1) செலுத்தப்பட்டிருந்தனர்.
முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில், 1.74 கோடி பேர் இரண்டாம் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். சுமார் 9.21 கோடி பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியிருந்தது.
மும்மொழிக்கொள்கை முன்வைப்பவர்கள் முன்னெடுக்கும் முக்கியமான வாதம். இந்தி இந்தியாவின் மிகப்பெரும்பான்மையான மொழி, அதைப்படித்தால் இந்தியாவுக்குள் எங்கும் செல்லலாம் என்பது.
இந்தியாவே ஹிந்து பேசுகிறது; எனவே எல்லோரும் பேசுங்கள் என்பதே அந்தக்குரல். எல்லோரும் ஹிந்தி பேசுகிறார்கள் - பேச விரும்புகிறார்கள் என்றால், யாரைப் பார்த்து இன்னமும் ஹிந்தி பேசு என்கிறார்கள் இவர்கள்?
முதலில் இந்தியாவில் எல்லோரும் ஹிந்தி பேசுகிறார்கள் என்பது உண்மையா?
Jul 26, 2020 • 20 tweets • 3 min read
பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு இன்றைய நிலை என்ன?
*
கோல்காபூர் மன்னர் சாகு மகாராஜ், பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த நாள் ஜூலை 26, 1902. பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கான ஒதுக்கீடு தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகி வரும் சூழலில், சாகுமகாராஜ் நினைவுக்குரியவராகிறார்.
சாகு மகராஜின் நினைவையொட்டி எழும் ஒரு முக்கியமான கேள்வி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கான இட உரிமைச் சட்டத்தின் உண்மையான பலன் கிடைக்கிறதா?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு 25 ஆண்டுகளுக்குப்பின் செய்யப்படும் ஆய்வுகள் அதிர்ச்சியையே தருகின்றன.
Jul 20, 2020 • 12 tweets • 2 min read
திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல், வரலாற்றுப் பங்களிப்புகளை பட்டியலிட்டால், மிகச்சிறந்த, தனித்துவமிக்க அதிகாரக் கட்டுமானத்தை உருவாக்கியதில் அதற்கு முக்கிய இடம் உண்டு. அவர் உருவாக்கிய, முன்னிறுத்திய, பயன்படுத்திக் கொண்ட IAS பட்டாளம், அரசை மக்களை நோக்கி மிகச்சரியாக செலுத்தக்கூடியது.
People - Government connection-ல் அரசைத் தக்கவைப்பதில் அவர்களுக்கு இணையான அதிகாரிகள் சமகால வரலாற்றில் யாராலும் கண்டெடுக்கப்படவில்லை. ஸ்டாலினே அதைச்செய்தார். மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக அவர் இருந்தபோது கண்டெடுக்கப்பட்ட முன்னிறுத்தப்பட்ட அதிகாரிகள் மிகச்சிறந்தவர்கள்.
27% இடஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், சமூக நீதி அரசியல் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறதோ அதற்கு நிகராக எதிர்த்து போராட வேண்டிய சூழ்ச்சிகளும், வன்மமும், குயுக்திகளும் இருக்கின்றன.
என்னென்ன அவை?
27% இட ஒதுக்கீட்டை, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிறைவேற்றுவதற்கான விருப்பம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பது, அரசியல் ரீதியான முக்கிய வெற்றி.
ஏனென்றால் ALQல் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது ஒன்றிய அரசின் கடமை அல்ல என்றே இதுவரை டெல்லி சொல்லிவந்தது.
Jun 16, 2020 • 24 tweets • 3 min read
காஷ்மீரும் சீனமும் - எல்லையில் என்ன நடக்கிறது?
*
இந்திய வரலாற்றிலேயே மிக அதிகமாக சீனத்துக்கு அரசு முறை பயணம் செய்த பிரதமர், மோடி. பிரதமராக 5 முறை, குஜராத் முதல்வராக 4 முறை.
ஆனால், மோடியின் ஆட்சியில் தான், சீனப்போருக்கு பிறகான மிக அதிகமான எல்லைப்பதற்றத்தை சீனத்துடன் இந்தியா சந்திக்கிறது. இவ்வளவு சந்திப்புகளுக்குப் பிறகும், சீனாவோடு சுமுகமான சூழலை மோடியால் ஏற்படுத்த முடியவில்லை. ஏன்?
Jun 12, 2020 • 11 tweets • 2 min read
இட ஒதுக்கீடு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை இல்லையா?
*
கேள்வி: இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்ற தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
வீரமணி: வகுப்புவாரி ஒதுக்கீடு காலத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றங்களை பயன்படுத்தும் போக்கு சூழ்ச்சி இருக்கிறது.
1950ல் இதே மாதிரியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
அப்போது, நாடாளுமன்றத்தில் பேசிய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர், (1)
Jun 12, 2020 • 4 tweets • 1 min read
உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரநிர்ணயப்பட்டியலில் (NIRF2020) வெளியிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பிரிவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாடு 18 இடங்களைப் பிடித்துள்ளது - குஜராத் 2.
பல்கலைக்கழகங்கள் பிரிவிலும் முதல் 100 இடங்களில் தமிழ்நாடு 18 இடங்களைப் பிடித்துள்ளது - குஜராத் 1.
கல்லூரிகள் பிரிவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாடு 32 இடங்களைப் பிடித்துள்ளது
- குஜராத் 2
பொறியியல் கல்லூரிகள் பிரிவில் முதல் 200 இடங்களில் தமிழ்நாடு 35 இடங்களைப் பிடித்துள்ளது - குஜராத் 7
மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் முதல் 40 இடங்களில் தமிழ்நாடு 8 இடங்களைப் பிடித்துள்ளது
Jun 11, 2020 • 11 tweets • 2 min read
யாரை பலி கொடுக்கிறது அரசு?
***
தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1839 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3815 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்போர் நடுத்தர வயதினர்.
குழந்தைகள் பாதிப்பும், முதல் 3 மாதத்தில் உகான் நகர பாதிப்பைவிட தமிழ்நாட்டில் 2.5 மடங்கு அதிகம்.
இன்னொருபக்கம், இதுவரையிலான முடிவுகள் படி, தமிழகத்தில் நடுத்தர வயது பாதிப்பே அதிகம்.
Jun 8, 2020 • 31 tweets • 3 min read
கொரோனாவும், சித்த மருத்துவமும் !
***
தமிழக அரசு நியமித்துள்ள கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சித்தமருத்துவ மைய மருத்துவர் வீரபாகு இந்து தமிழ் திசைக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி முக்கியமானது.
ஆனால், அவருடைய சில சொற்களை நாம் எச்சரிக்கையோடு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏனெனில், இதை வைத்தே மரபு வழி மருத்துவம் என சொல்லி, வெகுவெளியில், எளிய மக்கள் ஏமாற்றப்படுவதற்கான அபாயம் இருக்கிறது.
என்னென்ன எச்சரிக்கைகள் அவை?
***
May 28, 2020 • 7 tweets • 1 min read
முழுதாக படியுங்கள்.
உச்சநீதிமன்றம்: தெளிவாக சொல்லுங்கள். புலம்பெயர் ரயில் கட்டணத்தைச் செலுத்துவது யார்?
மத்திய அரசு: தொழிலாளர்களை பெறும் மாநிலமே ரயில்வேக்கு செலுத்தும். சில நேரங்களில் அனுப்பும் மாநிலம் செலுத்தும். சில நேரங்களில் தொழிலாளர் செலுத்துவார் - திருப்பி அளிக்கப்படும்.
உச்சநீதிமன்றம்: தொழிலாளர்களுக்கு திருப்பிக்கொடுப்பதாக இருந்தால் எந்த மாநிலம் கொடுக்கும்? அனுப்பும் அரசா? பெறும் அரசா? தொழிலாளர்களுக்கு இந்த விவரம் தெரியுமா? பணம் கொடுக்கப்பட்டதை எப்படி உறுதிசெய்கிறீர்கள்?
மத்திய அரசு: (தெரியவில்லை) மாநிலங்கள் அறிக்கை அளித்தால்தான் விவரம்தெரியும்
May 26, 2020 • 15 tweets • 2 min read
உ.பி தேசியமும், இதர தேசியமும் !
***
புலம்பெயர்வு குறித்த விவாதம் ஒரு சுவாரசியமான கட்டத்தை எட்டியிருக்கிறது.
யோகி ஆதித்யநாத் தன்னுடைய அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்.
கூட்டத்துக்கு பிறகு, "இனி உ.பி-யிலிருந்து எந்த ஒரு மாநிலத்துக்காவது புலம்பெயர்வு தொழிலாளர்கள் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட மாநிலம் உ.பி அரசுக்கு விண்ணப்பித்து கேட்க வேண்டும். அதன் பிறகே நாங்கள் அனுப்புவோம்" என்றிருக்கிறார்.
May 23, 2020 • 8 tweets • 1 min read
திமுக வழக்கறிஞர் அணியின் வலிமைக்கு காரணம் என்ன?
***
திமுக வழக்கறிஞர் அணி மிகவும் வலிமையான சட்ட அணியாக உள்ளது. தன்அரசியல் வாழ்வில் மத்திய அரசால் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் கலைஞர். அதனால், கட்சியை காக்க வலிமையான வழக்கறிஞர் அணி வேண்டும் என்கிற திட்டமிடல் அவரிடம் இருந்ததா?
என்.ஆர்.இளங்கோ: கலைஞர் வழக்கறிஞர் அணி மீது காட்டிய அக்கறையில் நீங்கள் சொல்லும் காரணம் இருந்திருக்கிறது. இந்திரா காந்தி வழக்கு, சட்டநகல் எரிப்பு வழக்கு, ராஜிவ் காந்தி மரண்ம தொடர்பான ஜெயின் கமிஷன் வழக்கு என எத்தனையோ வழக்குகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
May 17, 2020 • 8 tweets • 2 min read
இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புகளிலேயே 'குயுக்தியான', 'சூழ்ச்சியான' அறிவிப்பு,
மாநிலங்களுக்கான, கடன் வாங்கும் விகிதம் தொடர்பானதுதான்.
***
மாநில அரசுகள் தங்கள் GDP-ல் 3% வரை கடனாக வாங்கிக்கொள்ளலாம் என்பது விதி. பேரழிவு நேரத்தில் 5% ஆக மாற்ற வேண்டும் என மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. தாராள மனசு கொண்ட, வள்ளல் மத்திய அரசு 5% ஆக உயர்த்திவிட்டது. சூழ்ச்சியோடு !
May 16, 2020 • 19 tweets • 2 min read
மாநில உரிமைகளுக்கும், மக்களுக்கும் கிட்டத்தட்ட முழு மரண சாசனத்தையும் இன்று எழுதிமுடித்துவிட்டார்கள்.
மின்சார சட்ட திருத்த வரைவு விவாதத்தில் இருக்கும்போதே, Tarrif Policy திருத்தத்தை சர்வசாதாரணமாக இன்று அறிவித்துவிட்டார்கள்.
மின் உற்பத்தியாளர்களை காக்கும்பொருட்டு, DISCOM-களுக்கு அபராதம் விதிக்கும் என்கிற அறிவிப்பு, மாநில ஆணையங்களை மத்திய ஆணையம் கைகளுக்குள் கொண்டுவருகிறது என்பதை சொல்லாமல் சொல்லும் அறிவிப்பு.
May 14, 2020 • 13 tweets • 3 min read
#onenationonerationcard scheme will not be a cure to Migrants as govt. romanticise it. Instead, it may bring new tensions and chaos in unexpected way.
1. Poor Migrants are not stable. They are seasonal movers. Especially Agri, construction labourers, a major section.
#Thread2. We cannot predict accumulation and food need of the population of a particular place, since we could not predict the moving labourers.
May 14, 2020 • 12 tweets • 2 min read
வெறும் அகந்தையா தலைமைச் செயலாளரின் செயல்?
***
Dravidian years புத்தகத்தில் ஒரு அற்புதமான விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருப்பார், இந்திய பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் நாரயணன் IAS.
1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிகாரப்புகலிடங்களுக்கும், மக்களுக்கும் இடையிலான இடைவெளி நொறுங்கியது.
மக்கள் பிரதிநிதிகளும், மாவட்டச் செயலாளர்களும் நேரடியாக அரசு இயக்கத்துக்குள் வந்தார்கள்" என்கிறார் நாராயணன்.
ஒரு நேர்காணலுக்காக அவரைச் சந்தித்தபோதும் இதை விரிவாக பேசினார்.
பெட்ரோல், டீசல் கலால் வரியை மத்திய அரசு ரூ.10, ரூ.13 என கூட்டியுள்ளது. சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டதுதான் இது. ஊரடங்கால் பெட்ரோல், டீசல் பயன்பாடு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 80% வரை குறைந்துள்ளது.
இதனால், மத்திய அரசுக்கு மட்டும் சுமார் 40,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வருவாயை இழப்பைச் சரிசெய்ய இந்த வரி உயர்வு உதவும் என்றும், இதனால் சந்தையில் விலை கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது
May 4, 2020 • 39 tweets • 4 min read
மாநில உரிமைகளின் சவக்குழியில் மின்சாரத்துக்கு சவப்பெட்டி !
ஊரடங்கு நடைமுறைகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 17, 2020 அன்று நடப்பில் உள்ள மின்சாரச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.
அனுப்பப்பட்ட 21 நாட்களுக்குள், மே 8க்குள் இம்மசோதா மீது பதிலளிக்குமாறு முதற்கெடு விதிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பின் அழுத்தத்தையடுத்து ஜூன் 5 வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் இருக்கும் மதச்சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக்கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு பொருந்தும் என 29.04.2020 அன்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஒரு மருத்துவ பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும்போதே, இன்னொருபுறம் நடக்கும் சுகாதாரத்துறை தொடர்பான நடவடிக்கைகள், இந்த நாடு எப்படி சம்பந்தமே இல்லா பாதைகளில் மாட்டிக்கொள்கிறது என்பதற்கு சாட்சி.
நீட் - ஐ முன்னிறுத்துவதில் முஸ்தீபு காட்டும் இந்தியாவின் அடிப்படை சுகாதாரச் சிக்கல் என்ன?