கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க சென்றார், சுருக்கமாக சொன்னால் அன்றைய இந்தியாவின் பெரும் சிக்கல்
வக்கீல் தொழிலுக்காக சிங்கப்பூருக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்றிந்தால் கூட இன்று இந்திய லஞ்ச,கருப்பு,டாஸ்மாக் பணங்களில் சிரிக்கும் அவமானம் அவருக்கு வந்திருக்காது,
அந்த காலத்திலிருந்தே இனவெறிக்கு பெரும் எடுத்துகாட்டு தென்னாபிர்க்கா, மிக சமீபம் வரை இனவெறி சிக்கல் உண்டு என்றால் அந்தகாலம் எப்படி இருந்திருக்கும்?. அங்குதான் இனவெறியின், அடிமைதனத்தின் கோரமுகத்தினை நேருக்கு நேர் காண்கிறார்,
காந்தி பெரும் திறமையான வக்கீலோ அல்லது பெரும் அறிவுஜீவியோ அல்ல,ஆனால் அடுத்தவர் படும் வதைகளை காண சகிக்காமல் தானே அவர்களுக்காக போராட வந்த மனிதநேய மிக்க சாதாரண மனிதர்.
தென்னாபிரிக்காவில் பல போராட்டங்களை முன்னெடுத்து
காரணம் பிரித்தாளும் கொள்கை,மதவாதம்,சாதி என பல பிரிவினை மூலம் இந்தியாவினை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையனுக்கு முதல் முதலாக ஜாதி,மதம்,மொழி கடந்த ஒரே இந்திய தலைவனாக காந்தி உருவானதே அவர்களுக்கு அச்சம் கொடுத்தது.
காந்தியின் போராட்ட வடிவம் மகா வித்தியாசமானது,
அவரின் சித்தாந்தம் மகா எளிது, 30 கோடிமக்களை ஆள்வது வெறும் 1 லட்சம் பிரிட்டானியர்,
அதன் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம்,
அதாவது அடிமைமட்ட மக்களுக்கு வெறியூட்டுவதற்கு பதிலாக அறிவூட்டினார். அதனை பொறுமையாக ஊட்டினார்.
நீங்கள் கொடுமை செய்தால் எங்களை நாங்கள் வதைத்துகொள்வோம்,சாவோம். பிணங்களின் மீது ஆட்சிசெய்தால் இங்கிலாந்து அரசுக்கு என்ன வருமானம்?
அப்படி அவர் புகழ்பெற்ற போராட்டங்களை நடத்தி பின் விடுதலையும் பெற்று கொடுத்து, பின் வரலாற்றில் அழியா இடம் பிடித்ததெல்லாம் வரலாறு. இந்தியாவில் அவர் மறக்கபடிக்கபடலாம், ஆனால் உலகெல்லாம் வாழும் மனிதர்கள் அவரை மறக்கமாட்டார்கள்.
எவ்வளவோ காந்தி மன்றாடியும், ஜின்னாவினை அவரால் சமாதானபடுத்த
காந்தி ஒரு இந்து, ஆனால் உன்னதமான இந்து. பாகிஸ்தான் பிரிந்து சென்றபொழுதும் அதற்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க சொன்னர். இந்தியாவிலே தங்கவிரும்பும் இஸ்லாமியருக்கு இது தாய்நாடு என
அந்த சூழ்நிலை அவருக்கு மகா சிக்கலனாது, அவர் பாகிஸ்தான் பிரிந்ததில் மனம் நொந்துகிடந்தார், அந்த பணத்தை தாமதம் செய்தாலோ அல்லது கலவரங்களுக்கு காரணம் பாகிஸ்தான் என அறிக்கை இட்டாலோ அவர்
அப்படி ஒரு நிலை வந்திருந்தால் இந்தியாவில் மீதமிருந்த சிறுபான்மை இஸ்லாமியரின் நிலை இன்னும் படுமோசமாக மாறி இருக்கும். உண்மையில் மதவெறியர்கள் அதனைத்தான் எதிர்பார்த்தார்கள், நடக்கவில்லை வெறுப்பில் துப்பாக்கியால் பழிவாங்கினார்கள் அதுவும் பல
50 ஆண்டுகாலம் வெள்ளையன் பாதுகாத்த காந்தியினை வெறும் 1 ஆண்டுக்குள் கொன்றது அவரது கனவான சுதந்திர இந்தியா, காரணம் மதவெறி.
காந்திமேல் சர்ச்சைகளும் உண்டு, அதாவது பகத்சிங்கினை காப்பாற்றவில்லை, அல்லது நேதாஜியினை அவர் பகைத்தார் என ஏராளம் உண்டு.
வன்முறைக்கு காந்தி எதிரி, வன்முறையால் அமைக்கபடும் எந்த அமைப்பும்,விடுதலையும் நிலைக்காது என்றவர், சோவியத் யூனியனை
மொத்தத்தில் இந்திய இளைஞர்களை துப்பாக்கி ஏந்தவிடாமல் அவர்களை காமராஜர்,நேரு,சாஸ்திரி என வருங்கால தலைவர்களாக மாற்றி
இதுதான் காந்தியின் வெற்றி மாபெரும் வெற்றி.
உலகில் அகிம்சையால் சாதித்த நெல்சன் மண்டேலா,மார்டின் லுத்தர் கிங் போன்றவர்கள் அவர் வழியில் போராடியதால்தான் இன்றளவும்
எந்த லண்டன் ஏகாதிபத்தியம் அவரை எள்ளி நகையாடி பின் அங்கிகரீத்ததோ அதே லண்டன் பாராளுமன்றம் அவருக்கு
ரத்தகளறிகள் மிகுந்த இவ்வுலகில் மகாத்மாவின் வழிதான் சிறந்தது என ஐ.நாவில் பான் கீ மூன் மேற்கோள் காட்டுகின்றார், இவை எல்லாம் காந்தியின் வெற்றி, உலகம் உணர்ந்துகொண்ட உத்தமனின் வெற்றி.
ஆனால் பாரத திருநாட்டில் நடப்பது என்ன?
மதவெறியின் உச்சத்தில், அதுவும்
காந்தி என்ன தலைமைக்கு ஆசைபட்டாரா? இல்லை தன் பிள்ளைகள் எல்லாம் இந்தியாவினை ஆளவேண்டும் என ஆசைபட்டாரா? தான் வெள்ளையனை எதிர்ப்பதால் தன் மகனின் லண்டன் படிப்பினையே தடுத்து தீரா குடும்பழி சுமந்தவர்.
( என்ன தலைவர் இவர்? 4 பிள்ளைகளை பெற்றாரே ஒருவரையாவது
உலக சரித்திரத்தில் சுதந்திர போராட்ட தலைமையேற்று,அதில் வெற்றியும் பெற்று ஆனால் அதிகாரம் வேண்டாம் என ஒதுங்கிய ஒரு தலைவனை காட்டமுடியுமா? அமெரிக்காவின் வாஷிங்டன், ரஷ்யாவின் லெனின், சீனத்து மாசேதுங்,
ஆனால் பெரும் வெற்றிபெற்ற பின்னும் அரசியல் வேண்டாம்,இந்திய மக்களுக்கு உழைக்க இன்னொரு வழி இருக்கின்றது என சொல்லிகாட்டிய உத்தமர் காந்தி.
காந்திக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவு மகத்தானது, தென்னாபிரிகாவில் 16 வயதில்
மதுரை பக்கம் தமிழ் விவசாயிகள் மேலாடை இன்றி உழைப்பதை கண்ட காந்தி எனது சகோதரர்கள் போலவே நானும் என மேலாடை துறந்தார் (அதன்பின் கோர்ட் என்ன? சட்டை கூட அணியவில்லை),
கள்ளுகடை எதிர்ப்பு என்றவுடன், பெரியார் போன்றவர்கள் தென்னந்தோப்பையே அளிக்கும் அளவிற்கு காந்திபாசம் இருந்த மண்ணில்தான் இன்று
அப்படியே காந்தி நினைவு மியூசியம் மதுரையில் அமைக்கபட்டது,புதிதாக ஒரு கட்டடம் கட்டினால்தான் என்ன? அதனை செய்யாமல் புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் மாளிகை காந்தி மியூசியம் ஆயிற்று.
கன்னியாகுமரியிலே அவருக்கு மண்டபம் கட்டபட்டது,
நாளை காந்தி பிறந்த தினம், இந்தியாவினை சுற்றி பார்த்து மக்களின் மனதினை இந்தியாவின் உண்மையினை கண்டறிந்து சில கருத்துக்களை சொன்னவர் காந்தி,அது இக்காலமும் பொருந்தும்.
முக்கியமான ஒன்று, மதவெறி
இன்று இந்த தேசத்தை வளப்படுத்துவதாக சொல்லிகொண்டு உலகெல்லாம் ஓடுபவர்கள் நிச்சயம் செல்லவேண்டியது அந்நிய தேசம் அல்ல.
மாறாக சென்று ஞானம் பெறவேண்டிய இடம் சபர்மதி ஆசிரமம்,
நாளை காந்தி பிறந்தநாள் எப்படி இந்த அரசு சிறப்பிக்க போகின்றார்களோ என தெரியாது,கொஞ்சம் அவசரபட்டு இந்திரா காந்தி பிறந்த நாளை மிக சரியாக கழிப்பறை தினம் என கொண்டாடியதால் இப்பொழுது யோசனையில் இருப்பார்கள்.
காரணம் அவர் இந்து மத நெறியாளர்தான், ஆனால் சாதி இல்லை என சொன்ன புத்தன்,
"வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறை
தெய்வத்துள் வைக்க படும்"
அதனால்தான் மகா ஆத்மா எனும் பட்டமும் அவருக்கு தேடி வந்தது.