அமெரிக்காவின் ஆபிரஹாம் லிங்கன் தன்னிகரற்ற தலைவன் அவனின் 1800களின் கொள்கையும் வழிகாட்டலும் அமெரிக்காவுக்கு தேவைபட்டது, ஆனால் கென்னடி அதற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார்
தற்காப்பு மட்டுமே செய்து பழக்கபட்ட இனம் சீன இனம், அது மங்கோலியா ரஷ்யா ஜப்பான் என தொடர்ந்து அடியாய் வாங்கியது, மாவோ புதுவழி கட்டினான் இன்று அத்தேசம் எழும்பி நிற்கின்றது
இந்த காலத்திலும் காந்தி கொள்கை என சொல்லிகொண்டிருந்தால் சரிவராது
புத்தரின் கொள்கைகள் விடைபெற்றது போல காந்திய கொள்கையும் ஒருநாள் விடைபெற்றுத்தான் தீரும்
இப்பொழுது இந்தியாவுக்கு மாற்றத்துக்கான நேரம், அதற்காக கோட்சே தியாகியாகிவிட மாட்டான்
காந்திவழி இன்னும் இங்கு பொருந்தாது என்பதுதான் யதார்த்தம்