"குருஜி.. சமையல்காரர் சொதப்பிட்டார்... பந்தியில் ரகளை நடக்கப் போகிறது"
"ஏன் சிஷ்யா.. என்ன ஆயிற்று?"
"சாம்பார் மிகவும் கெட்டியாகி விட்டது. ரசம் நீர்த்துப்போய் வெள்ளமாய் ஓடுகிறது. கூட்டு உப்பே இல்லாமல் சப்பென்று இருக்கிறது. பொரியல் அளவுக்கு மீறி உப்பு கரிக்கிறது.
"மிகவும் சுலபம் சிஷ்யா. *ரசத்தில் கொஞ்சம் எடுத்து சாம்பாரில் ஊற்று.*
*சாம்பாரில் கொஞ்சம் எடுத்து ரசத்தில் கொட்டு.*
*பொரியலில் கொஞ்சம் எடுத்து கூட்டில் கலக்கு.*
*கூட்டில் கொஞ்சம் எடுத்து பொரியலில் கொட்டு.*
"ருசி சரியில்லை என்று சாப்பிடுபவர்கள் குறை சொன்னால் என்ன செய்வது குருஜி?"
"அதற்கும் உபாயம் இருக்கிறது சிஷ்யா. வாசல், வரவேற்பு, மணமேடை, பந்தி போன்ற முக்கியமான இடங்களில் நான்கு நான்கு பேராக ஆட்களை நிறுத்தி, *சாப்பாடு பிரமாதம்* *இப்படியொரு அற்புதமான சாப்பாடு
"பிரமாதம் குருஜி. அப்படியே செய்து விடுகிறேன்."
"நல்லது சிஷ்யா..
*பொருளாதார வீழ்ச்சி... Bank Merger பற்றியெல்லாம் நேற்று ஏதோ சந்தேகம் கேட்டாயே..* அது என்ன சொல். விளக்கம் தருகிறேன்."
*"அவசியமில்லை ஆண்டவரே... சமையல் குறிப்பிலேயே என் சந்தேகம் அனைத்தையும் தீர்த்து விட்டீரே"*