உண்மையில் இங்கு இந்துசமயத்தின் பல கொடுமைகளை இந்துக்களே எதிர்த்து சீர்படுத்தினர். இந்த உடன்கட்டை ஏறும் கொடுமையினை தடுத்த மோகன்ராய் ஒரு இந்து, குழந்தை திருமணமத்தை தடுக்கும் சாரதா சட்டத்திற்கு காரணமானவர் இந்து
அந்த வரிசையில் தமிழகம் கண்ட மாமனிதர் வைத்தியநாத அய்யர்
ஆம் அவர் அய்யர்,ஆனால் போராடியதெல்லாம் தாழ்த்தபட்ட மக்களுக்காக
அவர் அன்றே வழக்கறிஞர் என்றாலும் போராட வந்தார், உப்பு சத்தியாகிரகத்தில்
எப்படிபட்ட அப்பழுக்கற்றவர் என்றால் உப்பு சத்தியாகிரகத்தில் குடும்பத்தோடு கலந்து கொண்டவர்,அவர் மனைவி மகன் என
ஒருமுறை சிறையில் இருந்தபொழுது மூத்த மகன் இறந்தான் அவருக்கு பரோல் கிடைக்கவில்லை சிறையிலே அழுதார், மகள் திருமணத்திற்கு பரோலில் ஒரு நாள் வந்திருந்தார்
கவனியுங்கள்,சட்டம் படித்தவர். கொஞ்சம் வெள்ளையனுக்கு ஒத்துழைத்திருந்தால் ஏராளமான கைதிகளுக்கு
ஆனால் மனிதர் பாரதி சாதி,வாழ்வை நாட்டிற்காக தொலைத்தார்
வைத்தியநாத அய்யர் எதில் தனித்து நிற்கின்றார் என்றால் முதன் முதலில் தாழ்த்தபட்ட மக்களை ஆலயத்தில் அனுமதிக்க வேண்டும் என போராடினார்
ஆம் மதுரையில் தாழ்த்தபட்ட சாதியினர் ஆலயத்தில் நுழைய தடை இருந்தது,அவர்கள் நுழைந்தால் பஞ்சம் வந்துவிடும் என்ற மூடநம்பிக்கை இருந்தது
1924ல் வைக்கம் சென்ற பெரியார் கூட மதுரை பக்கம் வருவதற்கு யோசிக்கும் அளவிற்கு நிலமை சிக்கலாய் இருந்தது,பகுத்தறிவு பகலவன்கள்
1937ல் மதுரை வந்த காந்தி அந்த ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழையமுடியாது என அறிந்து, அவர்கள் நுழையாத ஆலயத்தில் நானும் நுழையமாட்டேன் என அறிவித்தார் என்றால் நிலமையின் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள்
ஆனால் வைத்தியநாத அய்யர் துணிந்தார்,
சாதி வெறியர், ஆச்சாரவாதி , உடம்பெல்லாம் விஷம் என பலரால் சொல்லபட்ட ராஜாஜிதான் அந்த அறிவிப்பினை செய்தார்
உத்தரவு வந்தும் நிலைமை சுமூகமாக இல்லை, கோவில் கோஷ்டி அராஜகத்தில் இறங்கியது, பின் பசும்பொன் முத்துராமலிங்கம் வந்ததும் அக்கோஷ்டி கோவிலை இடமாற்றுகின்றோம் என தமிழ்சங்கம் பக்கம் ஓடிவிட்டது
வைத்தியநாத அய்யர் தாழ்த்தபட்டவர்களுடன் கோவிலுக்குள் நுழைந்தார், மிகபெரும் புரட்சி அங்கு நடந்தது. அதுதான் புரட்சி
காந்தி அதனை பாராட்டி நாடெல்லாம் சொன்னார்,
நாடே திரும்பி பார்த்தது
மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோருக்கான முதல் வெற்றி அது.
அதன் பின் திராவிட கோஷ்டி மதுரை பக்கம் வந்தன,
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என சொன்ன பெரியார் அன்று அய்யரால் காப்பாற்றபட்டார்
அதன் பின்னும் தாழ்த்தபட்ட மக்களுக்காக ஹரிஜன் சேவா சங்கம்
மக்கள் சேவையே மகேசன் சேவையாக, தன் உயிருள்ள வரை இந்திய நாட்டிற்கு உழைத்த தன்னலமற்ற தியாகியாக, அஞ்சா நெஞ்சராக, மனிதநேய பண்பாளராக, மிகச்சிறந்த தேசபக்தராக, காந்தீயவாதியாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பாதுகாவலராக,
தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக கண்டது தேவர் மட்டுமல்ல இந்த வைத்தியநாத அய்யரும் கூட
தமிழகத்தில் மறக்கமுடியாத மாமனிதர் அவர்,
காரணம் அரசியல், இந்திய தேசியத்தில் தமிழகம் கலந்துவிட கூடாது எனும் திருட்டு அரசியல்