ஆசிரியர் இவன் மூளை கோளாறு பிடித்தவன் என கழுத்தை பிடித்து தள்ள, எடிசனின் அம்மா ஆசிரியர் ஆனார், அவருக்கு வாசிக்க கற்றுகொடுத்தார், அப்பா மரவியாபாரி கணக்கு பார்க்க கற்றுகொடுத்தார் இவ்வளவுதான் படிப்பு
ஆயினும் பிழைக்க வேண்டுமே ரயில் நினையத்தில் தந்தி அடிக்கும் வேலைக்கு சென்றார், அங்கும் ஆய்வு செய்கின்றேன் என எதனையோ அமிலத்தை கொட்டிவிட அந்த வேலையும் போனது
பின் அதேரயில் நிலையத்தில் நொறுக்கு தீனி விற்றார்
அதன் பின் காய்கறி விற்றார்,
பல வேலைகளை செய்த எடிசன் பின்பு பங்கு சந்தை அலுவலகத்தில் வந்தபொழுதுதான் அவர் வாழ்க்கை மாறியது,பங்கு தகவல்களை அனுப்பும் தந்தி முறையில் வேலைக்கு சேர்ந்தார்
இதனால் அப்பணி எளிதாக கிடைத்தது, அதில் இருந்த எடிசன் அதன் சிக்கல்களை கண்டு எளிதாக்க எண்ணிணான்
அதுவரை ஒற்றை வழியாக இருந்த தந்திமுறையினை இருவழியாக்கினார், ஒற்றை வழி என்றால்
இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு உருவாக்கியதுதான் கிராம்போன் எனும் கருவி, இன்றைய நவீன கருவிகளுக்கும் தொலைதொடர்பு சாதனங்களுக்கும் முன்னோடி
ஆய்வு என்பது அபின் போன்றது,
அதில் மாபெரும் வெற்றிதான் மின்விளக்கு, பாரடேயினை விரும்பி வாசித்த எடிசன் அந்த மின்சக்தியினை ஓளியாக மாற்றலாம் என நம்பினார், கடும் ஆய்வுகளை செய்தார்
பின் கடும் உழைப்பு பெரும் தோல்விக்கு பின்
நியூயார்க் நகரம் இரவில் விளக்கு பெற்றதும் அது உலக நாடுகளுக்கு அதிசயமாக விளங்கி வழிகாட்டியதும் எடிசன் என்பவராலே
இருட்டில் இருந்த உலகம் எடிசனால் இன்று இரவு நாம் காணும் வர்ண ஜாலத்திற்கு மாறியது
ஆம் இன்று பம்புசெட், கார் முதல் வீட்டு பேன், தொழிற்சாலை வரை இயங்கும் மோட்டார், அது அன்றி அமையாது தொழில் உலகு
அதுதான் இன்றைய கிரைண்டர், மிக்ஸிக்கும் அடிப்படை அவை இன்றி
அதன் பின்னும் மனிதர் சும்மா இருந்தாரா? இன்றைய சிடி, டிவிடி வகையாறாகளுக்கு முன்னோடியான கிராம்போனை கண்டுபிடித்தார்
அதாவது ஒலியினை பதிவு செய்யும் கருவி அது, பாடல்கள் இப்படித்தான் முதலில் பதிவு செய்யபட்டது, மனிதன்
ஒலியினை பதிந்து காட்டியாயிற்று இதை போல ஒளிபடங்களை உருவாக்கினால் என்ன எனும் அவரின் சிந்தனையில் உதித்ததுதான் திரைப்பட படபிடிப்பு கருவி
ஆம் அவரின் அந்த கண்டுபிடிப்புதான் சினிமா எனும் உலகினை தொடங்கி வைத்தது,
இந்த மானிட வாழ்விற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்த விஞ்ஞானி எனும் வகையில் எடிசன் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டார்
இன்று காணும் ஒளிவிளக்கு, தகவல் தொடர்பு, பிரிண்டர், சிடி, டிவிடி, சினிமா கேமரா என பல விஷயங்களை தொடங்கி வைத்தவர் எடிசன் என்பவரே
இரவில் விளக்கிற்கு சுவிட்சை தட்டும்பொழுதும், பேனை ஓடவிடும்பொழுதும், மோட்டாரில் நீர் கொட்டும்பொழுதும், இன்னும் பல விஷயங்களில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
கிட்டதட்ட 1400 கண்டுபிடிப்புகளுக்கு
எப்படி அம்மனிதனால் இப்படி சாதிக்க முடிந்ததென்றால்,அவனின் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருந்தது
மக்களின் வசதிக்காக,அவர்களின் வாழ்க்கை முறையினை எளிதாக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான்,இந்த உலகமே எடிசனால் மாறிப்போனது
மற்றவர்களுக்காகவே தன் வாழ்வினை செலவழித்து பெரும் விஷயங்களை கொடுத்த எடிசனின் ஜெனரல் எலக்ட்ரிக்கல்ஸ் (GE) நிறுவணம் இன்றும் உலகில் நம்பர் 1 நிறுவணமாக தன் கடமையினை செய்து கொண்டே இருக்கின்றது
புது புது எந்திரமும் பல விஷயங்களும் அந்நிறுவணத்தால் உருவாக்கபட்டு
எடிசன் அதில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார், மற்றவர்களுக்காக வாழ நினைப்பவனுக்கு, அவர்கள் சிரமத்தை தன் கண்டுபிடிப்பு மூலம் சரிசெய்ய வாழ்வினை கொடுத்தவனுக்கு ஒரு நாளும் அழிவில்லை என்பதே எடிசன் வாழ்வு சொல்லும் தத்துவம்
இன்று அவருக்கு நினைவுநாள்
இன்று அமெரிக்காவில் இரவில் சில நிமிடம் விளக்குகளை அணைத்து எடிசன் இல்லையென்றால் உலகம் இப்படித்தான் இருக்கும் என அனுபவபூர்வமாக அஞ்சலி செலுத்துவார்கள்.