சிவாஜிகணேசனின் மிக சிறந்தபடங்களில் ஒன்று, நடையில் கூட அசத்தியிருப்பார், மிக ஸ்டைலான பணக்காரத்தனத்தை அநாசயமாக காட்டியிருப்பார்.
தலைவன் எம்.ஆர் ராதா அவர் போக்கில் "ஏண்டா டேய்.." என பின்னி எடுத்திருப்பார்
மிக ரசித்து பார்க்ககூடிய படங்களில் ஒன்று,மிக அர்த்தமுள்ள அழகான வசனங்கள்.
விளம்பர இடைவேளையினில் வேறு சேனலை திருப்பினால்
சூர்யா நடித்த கஜினி என்றொரு படம் ஓடிகொண்டிருந்தது,மகளுக்கு இதெல்லாம் அவ்வளவாக பிடிக்காது,
அதுவரை கம்மென்று இருந்தவள் சேனலை மாற்றிய பின் படம் தொடங்கியதும் நான் மத்தாப்பு கொளுத்த போகின்றேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்,
அவ்வப்போது வந்து பார்த்து கொண்டாள்,மிக அசால்ட்டாக இப்படி கேட்பாள்,
"ஹீரோ வந்தாச்சா?
ஆமாம்மா
ஹீரோயின் வந்துட்டாங்களா?
ஆமாம்மா
லவ் ஆரம்பிச்சிட்டா?
ஆமாம்மா
சரி, சண்டை எல்லாம் முடிஞ்சி கல்யாணம் முடிஞ்ச உடனே என்கிட்ட சொல்லுங்க, ஏன்னா கல்யாணம் முடிஞ்ச உடனே படம் முடிஞ்சிரும், அப்புறமா நான் டிஸ்னி பார்க்கணும் ஓகே யா?
சரி,பாருங்க கல்யாணம் முடிஞ்சதும் கூப்பிடுங்க,நான் போறேன்.."
மகளின் தமிழ் திரைப்பட அறிவு இப்படியாக வளர்ந்து கொண்டிருக்கின்றது..