அப்படிபட்ட நோயின் தாக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது, ஒவ்வொரு ஊரிலும் போலியோ தாக்கபட்டவர்களை காணாலம் இருக்க முடியாது
சில குழந்தைகளை இரு கை இரு கால் என
1997வரை ஒவ்வொரு வகுப்பிலும் போலியாவால் தாக்கபட்டு அங்ககீனமான ஒரு மாணவனோ இல்லை பலரோ சாதாரணம்
அவர்கள் இன்றும் சரியான பணி இன்றியும், குடும்ப வாழ்வு இன்றியும் வாழ்வதை சாதாரணமாக பார்க்கலாம். மாற்று திறனாளிகள் என கலைஞர்தான் அழைக்க
உடலால் செத்த அவர்களை மனதாலும் கொல்லும் நோய் போலியோ
குழந்தையிலே அவர்களை தாக்கும் அந்நோய், காலமெல்லாம் யாரையாவது நம்பியே அவர்கள் அன்றாட கடமையினை செய்யுமளவு அவர்களை முடக்கிவிடும் பெரும்
அப்படிபட்ட கொடூரமான நோய் வருதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை, அம்மை நோய் என்றால் அம்மனை காட்டும் சமூகம் விஞ்ஞானமாக வேப்பிலை மருந்தை சொன்னாலும், போலியோ என்றால் விதிபயன் என சொல்லிவிட்டது
நோய்க்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் தெரியாது,
இரண்டாம் உலகபோருக்கு பின் நச்சு ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்ட்ட பல கொடூர வைரஸ்களை கட்டுபடுத்தி மருத்துவத்திற்கு பயன்படுத்தமுடியுமா என்ற ஆய்வு தொடங்கிற்று
அவர் அமெரிக்க யூதர், அப்பொழுதே டாக்டர். இந்த பாலும் பழமும் சிவாஜி கணேசன் சினிமாவில் புற்றுநோய்க்கு பாடுபட்ட காலங்களில் அவர் அமெரிக்காவில் உண்மையாக போலியோவிற்கு எதிராக பாடுபட்டார்
ஆம் அது நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒருவித வைரஸ் என்பது உறுதியானது
நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒருவித வைரஸ் ஆயுதம் ஹிட்லரால் உருவாக்கபட்டது
ஆனால் அந்த அடிப்படைதான் சால்கினை போலியோவினை குணபடுத்த முடியும் என்ற நம்பிக்கையினை கொடுத்தது
அதன் பின் தன் வாழ்வினை அதற்காக அர்பணித்து பெரும் உழைப்பிற்கு பின் அந்த அருமருந்தினை கண்டுபிடித்தார்
மனிதர் தானே பரிசோதனை ஆனார், அந்த மருந்தை தன் உடலில் செலுத்தி நம்பிக்கை அளித்தார்
அதன் பின் அந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவில் இளம்பிள்ளை வாதம் ஒழிந்தது
உலக சுகாதார அமைப்பு அந்த அருமருந்தினை உலக மக்கள் எல்லோருக்கும் கொடுத்து நோயினை ஒழிக்க உறுதி பூண்டது
எதுவுமே தாமதமாக வரும் இந்தியாவில் பின்னாளில்
உறுதியாக சொல்லலாம், இந்தியாவில் இப்பொழுது இளம்பிள்ளைவாதம் ஒழிக்கபட்டிருக்கின்றது, பழைய தாக்கம் இல்லை
ஆரோக்கியமாக குழந்தைகள் வளர்கின்றன,மறுக்கமுடியாது
உலகின் மாபெரும் சொத்துக்கள் குழந்தைகள்,
பைபிளில் சூம்பிய கையினை குணமாக்கினார் யூத ஞானி இயேசு கிறிஸ்து,அதன் பின் அந்த நோய்க்கு மருந்தும் யூத விஞ்ஞானியிடம் இருந்தே வந்தது
இன்று நாமெல்லாம் இலவசமாக
இதுவே மிகபெரும் விலையான மருந்தென்றால் என்னாகும்? குழந்தைகள் விவகாரம் அல்லவா? காசு கொடுத்துத்தான் வாங்கி இருக்க வேண்டும்
ஆனால் எப்படி இவ்வளவு
இல்லை,சால்க் தன் கண்டுபிடிப்பினை பதியவில்லை,அதற்கான பாடன்ட் எனும் காப்புரிமையோ இம்மருந்தால் கிடைகும் வருமானம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்றோ அவர் எழுதி வைக்கவுமில்லை,சட்டபடி பதியவுமில்லை
ஏன் கவனகுறைவா என்றால் இல்லை, அந்த பெருமகன்
நல்ல மருத்துவனின் மனம் என்பது இதுதான்,நோயினை விரட்ட வேண்டும்,மானிட குலம் காக்கபட வேண்டும்,பணம் என்பதெல்லாம் யாருக்கு வேண்டும்?
மானிட நேயமும் மருத்துவமும் கலந்த சில மேதைகள் இப்படித்தான்
அவர் மட்டும் மருந்துதினை பதிந்து சம்பாதித்திருந்தால் இன்றைய பில்கேட்ஸ் இன்னபிற மில்லியனர்களை விட பெரும் உயரத்தில் இருந்திருப்பார்
அதன் பின்னாலும் சால்கின் ஆராய்ச்சி தொடர்ந்தது தன் இறுதி காலங்களில் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் இருந்தார்,
போலியோ எனும் கொடும் வியாதியினை உலகில் இருந்து விரட்டிய அந்த மாமனிதனின் பிறந்தநாள் இன்று
அவனுக்கு குழந்தைகள் உலகமும், பெற்றோர் உலகமும் மாபெரும் அஞ்சலியினை செலுத்தி கொண்டிருக்கின்றது
நிச்சயம் அந்த யூத விஞ்ஞானி இரண்டாம் கிறிஸ்து,அதில் சந்தேகமில்லை.