, 64 tweets, 8 min read
முக்குலத்தோர் (தேவர்) -- குற்றபரம்பரை சட்டம் -- திராவிடர் இயக்கம் -- தந்தை பெரியார்
(நீண்ட ஆதாரபூர்வமான கட்டுரையை கடைசிவரை முழுமையாய் படித்து, உண்மை வரலாறையும், நடந்த நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ளவும்.. )

1919 இல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையின் இந்திய அரசரின் செயலரான எட்வின் சாமுவேல்
மாண்டேகு மற்றும் இந்திய கவர்னர் ஜென்ரல் பிரடிரிக் ஜான் நேப்பியரின் பேரனான செம்ஸ்போர்ட் ஆகியோர் இந்தியர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்களை வழங்க அது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக
டி.எம். நாயர், கே.வி.ரெட்டி. சர்.ஏ. இராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துருக்களை முன்வைத்தனர்.

அச்சமயத்தில் மறவர் மகாஜனசபை என்ற அமைப்பை உருவாக்கச்சொல்லி அதன் சார்பிலும் கருத்துருக்களை வைக்கச் செய்தவர் டி.எம். நாயர். இலண்டனில் மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை நேரில் சந்தித்து இறுதி
வடிவான கருத்துருக்களை சமர்பிக்கச் சென்றபோது இலண்டனில் மருத்துவமனையில் மறைந்தார் டி.எம். நாயர். அதையடுத்து கே.வி. ரெட்டி அந்த கருத்துருக்களைச் சமர்பித்து அதன் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கடலூர் சுப்பராயலு
ரெட்டியார் முதல் முதலமைச்சராகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது. அதன் பிறகு பனகல் அரசர் 1921 முதல் 1926 வரை முதல்வராக பணியாற்றினார். பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசுதான் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து கள்ளர்களில்
பெரும்பான்மையான மக்களை அச்சட்டத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்தது.

கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு ஐ.சி.எஸ் அலுவலரை நியமித்தது. லேபர் கமிஷனர் என அப் பதவி இருந்தது. அந்த லேபர் கமிஷனர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர்
சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழுவீச்சில் செயல்படுத்தியது.

கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.

கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக்கடனுதவி அளித்தது.

கள்ளர்களுக்கென்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து.
அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.

இளைஞர்களுக்குத் தொழில்பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.

மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.
தஞ்சைமாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தாலேயே கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தியது.

பெரியாறு அணைப் பாசனத்திட்டத்தில் கள்ளர்நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச்செய்தது.
1922 இல் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கள்ளர்கள் விவசாயத்திற் காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங் களை கடுமையாக நெருக்கத் தொடங்கியது. அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவு சங்கங் களுக்கு மாகாண
அரசே நிதிகொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து, அடுத்த கட்ட விவசாயத்திற் கும் கடனை அளித்தது
இப்படி கள்ளர்கள் வாழ்வில் ஒரு புரட்சியை உருவாக்கியது நீதிக்கட்சி அரசுதானே ஒழிய முத்துராமலிங்கத்தேவர் அல்ல.

இந்த மாற்றங்கள் நடக்கும் போது தேவர் பொதுவாழ்வுக்கே வரவில்லை.
அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பழங்குடி சட்டப் பட்டியலிலிருந்து மீட்டதும் நீதிக்கட்சி அரசு தான். வரதராஜீலு நாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவரும் இடம் பெற்றிருந்த குழு இந்த நீதிக்கட்சி அரசில்தான் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே
அப்பிரிவு மக்களை அப்படியலில் இருந்து நீக்கியது பெரியாரின் நண்பரான பெரியாரின் ஆதரவு பெற்ற ஆட்சியின் தலைவரான பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையிலான நீதிக்கட்சி அரசுதான்.

இறுதியாக 1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும்,
சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன்வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப்பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழிந்தது.

ஆக குற்றப் பழங்குடியினர் சட்டத்தை ஒழிப்பதற்கும் அச்சட்டத்தால்
கொடுமைப்படுத்தப்பட்ட கள்ளர்கள் உட்பட அனைத்து ஜாதி மக்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உழைத்தது பெரியாரின் தொண்டர்கள் தான். காங்கிரஸ் அரசானாலும், நீதிக்கட்சி அரசானாலும் அரசியல் வாதியாக இருந்தாலும் அரசுப்பதவியில் இருந்தாலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை
எதிர்த்து சரியான செயல் களைச் செய்தவர்கள் பெரியார் ஆதரவாளர்களே! பெரியார் தொண்டர்களே! திராவிடர் இயக்கத்தவர்களே!

பெரியாரும் குற்றப்பரம்பரைச்சட்டமும்

முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கர் என்னும் பார்ப்பனர், மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர்.
கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டுப்ளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து
அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின்
வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நீதிக்கட்சி உழைத்த உழைப்பை நினைவுகூர்ந்து நீதிக்கட்சிக்கு ஆதரவாக தேவர் செயல்பட்டிருந்தால் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்த்த போராளி என முழுமையாக அவரைப் பாராட்டியிருக்கலாம்.
பெரியார் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது,
. . . முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமாகியவை ஏற்பட்டு சிறிது ஞான ஒளியும், சுதந்தர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டபறகு அரசியலில் கல்வி விஷயத்திலேயே முதல் முதல் மாறுதல் ஏற்படலாயிற்று.
அதாவது 1920ம் வருஷத்துக்கு முன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் 1க்கு (1,40,00,000) ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி யென்னும் பார்ப்பனரல்லாதார் மந்திரி பதவி அடைய நேர்ந்து கல்வி இலாக்காவில் ஆதிக்கம் பெற்ற பிறகு
இன்று கல்வி இலாக்காவுக்கு வருஷம் 1க்கு (225,00,000) இரண்டு கோடியே இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கிவைத்து அதற்கேற்றாற் போல் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் சர்வ கலாசாலைகளை யும் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக அதிகப்படுத்த “சண்டாளர்கள்’’ “மிலேச்சர்கள்’’ “சூத்திரர்கள்’’
ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமுலுக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.
இதன் பயனாகவே ஒவ்வொரு வகுப்புக்கும் அதாவது ஈன ஜாதி, சண்டாள ஜாதி, பரம்பரை விவசார ஜாதி, பரம்பரை திருட்டு ஜாதி என்று சொல்லக்கூடிய மக்களுக்கெல்லாம்
சுதந்தர உணர்ச்சியும் சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டு அநேக வகுப்பு சங்கங்களும் ஏற்பட்டு முற்போக்குக்கு உழைக்க முன் வரலாயின.
குடி அரசு 26.12.1937
என்றார். இந்தத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும்
நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இராஜாஜி பார்ப்பனர் முதல்வாரானார்.

அனைத்து அடக்குமுறைச்சட்டங்களையும் ஒழிப்பேன் என்ற சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச்சட்டங்களை முன்பைவிட மிகக்கடுமையாக மக்களிடம்
செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.

சட்டசபையில் ஒருமுறை திருமங்கலம், செக்கானூரணி பகுதிகளில் இன்னும் குற்றப்பரம்பரைச் சட்டம் நடைமுறையில் உள்ளது என தேவர் பேசியபோது, இராஜாஜி, செக்கானூரணி பகுதியில் இருந்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை எனத் திமிராகப் பேசினார்.
பதிலுக்கு தேவர் எதுவும் பேசவில்லை. அந்தக் காலத்தில் பெரியார் குற்றப்பரம்பரை உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்.

..தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை
ஒழிப்பதாகவும் வாக்குறுதி யளித்து பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கரஸ்காரர் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாகவும் காங்கரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுல கமே பொன்னுலக மாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள் தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 மாகாணங்களிலே காங்கரஸ் மந்திரிசபைகள்
ஏற்பட்டிருக்கின்றன.
ஆனால் எல்லைப்புற மாகாணத் தைத் தவிர வேறு எந்த காங்கரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கரஸ்காரரால் வெறுக்கப்பட்ட ஸி.ஐ.டிகளும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச்
சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்துவிட்டார்கள்.
காங்கரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜத்துரோக குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர்மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம்
செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படு கின்றன.
காங்கரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால் யோக்கியப் பொறுப்புடையவர் களானால் நேர்மையுடையவர்களானால் அடக்கு முறைச் சட்டங்களை இதற்குள் ஒழித்திருக்க வேண்டாமா?
அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை தமது வேலைத்
திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழிக்கும் ஒரு மசோதாவை அக் கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப்ப மளித்த காங்கரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம் வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
தோழர் கிருஷ்ணமாச்சாரியார் முயற்சி காங்கரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக்கடியென்றே சொல்ல வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

குடி அரசு 24.07.1938

இந்தக் காலத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் என்று ஒரு புதிய ஒடுக்கு முறைச்
சட்டத்தை யும் இராஜாஜி அரசு பயன்படுத்தத் தொடங்கியது. நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்துமூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார்.

மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் ஜாதியைச்
சார்ந்த மாணவர்களும் தமது எதிர் காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர்.
அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அப்போது குடி அரசில் பெரியார்தான் அடக்குமுறைச்சட்டங்களை எதிர்த்து எழுதினார்.
…இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி “நமது சுயராஜ்ஜிய சர்க்கார்
இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 71எ படி 4மாதம், 6மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.
மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம் பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய
முக்கியஸ்தர்களை 3வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் தினமும்
10 பேர், 15 பேர் வீதம் தண்டிக்கப்பட்டுக் கொண் டும் வருகிறார்கள். இந்த சுயராஜ்ய சர்க்கார் இந்தக் காரியங் கள் மாத்திரம் தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்துவிடு வார்கள்? என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக் கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே
என்று கருதி நமது தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அறுப்புக்கோட்டை அரசியல் மகாநாடு தலைமைப் பிரசங்கத்தில் “இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும் அவர்கள்மீது ஆயுள் பரியந்தம் அல்லது தூக்குப் போடும்படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் மிக “தயாள குணத்தோடு “இழகிய மனம் கொண்டு பேசியிருக் கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்து தலையங்கம் எழுதி இருக்கிறது. மகாத்மா அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ராஜாஜி கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக் காமல் போயிருந்தால் அது பெரும் முட்டாள் தனமாயிருந்
திருக்கும் என்று ஒரு விடத்தில் காந்திஜி கூறுகிறார்.
. . . நாம் வெறுத்த நாம் ரத்துச் செய்தே தீருவோமென்று கூறி வந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத் தானா நாம் கையாளவேண்டுமென்பதுதான் என் கேள்வி. அச்சட்டத்தை காங்கரஸ் மந்திரிகள் கையிலெடுத்தது பாவமில்லையென்று மகாத்மா ஜியே கூறினாலும்
அது குற்றங்குற்றமே யென்று தான் நான் கூறுவேன். இதற்காக சிலர் எனக்கு ""தேசத்துரோகி''ப் பட்டஞ் சூட்டினாலும் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
குடி அரசு 02.10.1938

1937 ஆம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த தவறான நிலைப்பாடு குற்றப்பரம்பரைச் சட்டத்தை மேலும்
10 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. 1934 அபிராமம் மாநாட்டுக்குப் பிறகு - அந்த மாநாட்டுக் கோரிக்கையை அப்போதைய பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி அரசு செயல்படுத்திய பிறகு கைரேகைச்சட்டம் நீக்கப்பட்ட 1947 ஜீன் 5 வரை தேவர் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து எந்தப் போராட்டமும் செய்யவில்லை என்பதோடு
கூடவே இன்னும் கடுமையான அடக்குமுறைச்சட்டங்கள் வந்தபோதும் அமைதியாகவே இருந்தார். 1937 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி குற்றப்பரம்பரைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச்சட்டங்களை ஏன் நீக்கவில்லை என காங்கிரசையோ இராஜாஜியையோ எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 1939 வரை காங்கிரஸில்
இருந்து நேதாஜி வெளியேற்றப்படும் வரை காங்கிரசிலேயே இருந்துவிட்டு தனது அரசியல் ஆசான் சீனிவாச அய்யங்கர் அறிவுரையின் பேரில்தான் நேதாஜியுடன் பார்வர்டு ப்ளாக்கில் இணைகிறார். 1938 இல் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்த பின்னரும் தனது ஜாதி மக்கள் கல்வி
வாய்ப்பை இழந்தபின்னும் 1939 இல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் சீனிவாச அய்யங்காருடன் பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார்.
பெரியாரும் தேவர்களும்

1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகத்துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை இயக்க மாநாட்டை அவரது .
தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடைஎன்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார். 1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச்
செய்திருக்கிறார்கள். குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும்தான் என்பது இராமச்சந்திர சேர்வைக்குத் தெரியும். அதனால் தன் குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் பெரியாருக்கு துணையாக்கினார்.
1952 இல் இராஜாஜி மீண்டும் கொல்லைப்புறம் வழியாக
ஆட்சியைப் பிடிக்கிறார். தகப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்யவேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார். சுமார் 6000 பள்ளிகளை மீண்டும் இழுத்து மூடினார். குற்றப்பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்யமுடியும்? திருடத்தானே முடியும்? அதை எதிர்த்துக் களம் கண்டவர் -
இராஜாஜியை விரட்டி அடித்து குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர் பெரியார்.
அந்தக் காலத்தில் குலக்கல்வித்திட்டத்தை ஒழிக்க தனது கள்ளர், மறவர், அகமுடையர்களுக்காக தேவர் என்ன செய்தார்?

1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தில் பிறந்த ஆர்.எஸ்.மலையப்பன்
என்பவர் திருச்சி மாவட்டஆட்சித்தலைவராக இருந்தார். ஒரு நிலச்சிக்கல் தொடர்பாக அவர் எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து அவரை வேலையை விட்டே நீக்கம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பெரியார் கொதித்தெழுந்தார். 1956 நவம்பர் 4 ஆம் நாள் திருச்சியில்
இதற்காக ஒரு சிறப்பு கண்டனக்கூட்டத்தை நடத்துகிறார். ‘பார்ப்பான் ஆளும் நாடு கடும்புலிகள் வாழும் காடு’ என அந்தக் கூட்டத்தில்தான் முழங்கினார். நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் அந்த உரை நூலாகவே வெளிவந்துள்ளது. அந்த உரைக்காக நீதிமன்ற அவமதிப்புக்காக 1957 ஆம் ஆண்டு பெரியாருக்கு
கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கள்ளர் சமுதாயக் கலெக்டருக்காக கடுங்காவல் தண்டனை பெற்றவர் பெரியார். 1960 செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாள் அன்று அதே ஆர்.எஸ். மலையப்பன் பெரியாருடன் ஒரே மேடையில் உரையாற்றினார். இன்றுவரை அந்த மலையப்பனின் ஊரிலும் அவரது உறவினர்களின்
வீடுகளிலும் பெரியார் சிலையும் பெரியார் படமும் சிறப்பாக வீற்றிருக்கிறது. இன்றும் திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லப்படும் பகுதியாக அப்பகுதி உள்ளது. மலையப்பன் விவகாரத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?
சட்டப்படி கள்ளர்களையும் மறவர், அகமுடையார்களையும் அனைத்து பிற்படுத்தப்பட்ட. தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களென்றும் சூத்திரர்களென்றும் இழிவுபடுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்குமாறு 1957 இல் பெரியார் ஆணையிட்டார்.
நூற்றுக் கணக்கான தேவர்கள் எரித்துச் சிறை சென்றார்கள். இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தில் தேவரின் பங்கு என்ன?

மண்டல்குழு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளில் ஒருவர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி இரத்தினவேல்பாண்டியன்.
அவர் தனது தனிப்பட்ட தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமைக்காக பெரியார் உழைத்த உழைப்பை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

குற்றப்பரம்பரையில் பிறந்தவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கியது திராவிடர்இயக்கம்.
அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளே நினைவுகூறும் பெரியார் பணியை யாரோ சிலர் கேவலமாகப் பேசுவதை ஒரு முக்கியச் செய்தியாக ஒரு பெரியார் தொண்டர் என்பவரே சொல்வது வருத்தத்துக்கு உரியது. கடும் கண்டனத்துக்கு உரியது.
குற்றப் பழங்குடி சட்டத்தைப் பற்றியும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களில் அப்போதைய ஆட்சியாளரின் நடவடிக்கைகள், அப்போதைய சமுதாய இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் அச்சட்டம் பற்றிய பல மூடநம்பிக்கைகள் ஒழியும்.

#தேவர்ஜெயந்தி
#பெரியார்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with sivagsk

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!