, 33 tweets, 7 min read
சுர்ஜித் இழப்பு, தொழில்நுட்பத்தின் தோல்வி இல்லை, எடப்பாடி அரசின் தோல்வி.!

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க ஒரு protocol உருவாக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தேன். இதைப்போலவே சமீபத்தில் 2019 ஜூன் மாதம் கூட பஞ்சாப் முதலமைச்சர்ஆழ்துளை கிணறு சம்பவங்களுக்கென்று
ஒரு வழிமுறை
உருவாக்கப்பட வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார். உண்மையில் ஏற்கனவே ஒரு Standard operating procedure உருவாக்கப்பட்டு அது 2012 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த மீட்பு வழிமுறைகள் எல்லாரும் யூகித்த, பரிந்துரைத்த, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட அனைத்து முறைகளையும்
உள்ளடக்கியதாக சிறப்பாக இருக்கிறது.
ஆனால் இந்த முறைகள் எல்லாம் manual ஆக ஏற்கனவே ஆழ்துளை கிணறு சம்பவங்களில் ஈடுபட்ட முயற்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிறந்த வழிமுறைகள். இந்த வழிமுறைகள் தொடர்ந்து update செய்யப்பட வேண்டும் என்றும் அந்த வழிகாட்டியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆழ்துளை கிணறு சம்பவங்களுக்கு பிரத்யேகமாக அறிவியல் சார்ந்த நேரடியான முறைகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அந்த manual-ல் பல அம்சங்களை நடுகாட்டுப்பட்டியில் பின்பற்றப்பட்டிருந்தும் திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை
என்ற கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு முதல்வர் எடப்பாடி நீங்கள் 2009ல் ராணுவத்தை அழைத்தீர்களா என்று கேட்டார். உண்மையில் முக ஸ்டாலின் அன்று ராணுவத்தை அழைத்திருக்கிறார், இரு ராணுவ துணைப்படைகள் வந்து குழந்தையை உயிருடன் 30 மணி நேரத்தில் மீட்டுள்ளனர்,
ஆனால் குழந்தை அதன்பிறகு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது. இதே போன்று பல்வேறு பகுதிகளில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சையின்போது இறந்திருக்கின்றன. 30 அல்லது 40 மணி நேரம் குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி ஆக்ஸிஜன் அளித்த போதிலும் நுரையீரல் தொற்று அதிமாக ஏற்படுவதாலோ அல்லது
வேறு சில பாகங்களில் தொற்று ஏற்பட்டு அந்த பாகம் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம். 2009 காலகட்டத்தில் தற்போதுள்ளதை போன்று Standard Operating Procedure for Bore well incidents என்ற manual எல்லாம் உருவாக்கப்படவில்லை. இவை 2011-2012 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என்றே கருதுகிறேன்.
ஏனென்றால் இந்த வழிமுறையை பயன்படுத்தி மீட்கப்பட்டவர்கள் என்ற அட்டவணையில் 2012-க்கு முன் யாரும் இல்லை. மேலும் நடுகாட்டுப்பட்டி சம்பவத்தில் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக குறிப்பிட்ட நிலையில் அரசின் மீது குற்றம்சுமத்த எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது அரசியல் என்று
விமர்சனம் வருகிறது. விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும் தமிழக அரசு இந்த வழிமுறை கையேட்டில் உள்ள அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினார்களா என்ற கேள்வியை எழுப்பினால் தமிழக அரசு நடத்திய நாடகத்தை புரிந்துகொள்ள முடியும்.
ஆழ்துளை கிணறு சம்பவங்களை இனிவரும் காலங்களில் எப்படி அணுக வேண்டும்
என்ற வழிமுறையில்

//District Collector should be empowered to verify that the above guidelines are being followed and proper monitoring check about the status of boreholes/tube wells are being taken care through the concerned State/Central Government agencies.
• District/Block/Village wise status of bore wells/tube wells drilled. In the rural areas monitoring of these should be done through village Sarpanch and the Executive from the Agriculture Department// என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் இந்த அரசு செய்யவில்லை.
இதற்கு முழு முதற்காரணம் அஇஅதிமுக அரசு. அதனால் தான் குழந்தையின் குடும்பத்துக்கு எதிர்க்கட்சி, அரசு மற்றும் ஆளுங்கட்சியினர் இழப்பீடு வழங்கியுள்ளனர். இதில் அரசியல் ஒன்றும் இல்லை. அரசு தன் கடமையை சரிவர செய்யத்தவறியதால் கொடுக்கப்படும் இழப்பீடு.

ஆழ்துளை கிணறு சம்பவங்கள்
நடைபெற்றால்
உடனடியாக தொலைபேசி மூலம் தேசிய பேரிடர் மேலாண்மைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாநில அரசுகளின் அழைப்பின்பேரிலும் மத்திய அரசின் அறிவிறுத்தலின் படியும் Search and Rescue பணிகளை தேசிய பேரிடர் மேலாண்மை கவனிக்கும். மாநில அரசு அழைக்காத நிலையில் அவர்கள் வரமாட்டார்கள்.
நடுகாட்டுப்பகுதி சம்பவத்தில் செய்தியை மட்டும் தெரிவித்திருக்கிறார்கள் ஆனால் அழைக்கவில்லை.
கனரக எந்திரங்களை அருகே
உபயோகிக்க கூடாது, உபயோகிப்பது அதிர்வுகளை ஏற்படுத்தும் அது குழந்தை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது.
அதிகளவு அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த போர்வெல் இயந்திரங்களும் உபயோகப்படுத்தப்பட்டன.

குழந்தை சிக்கிய இடத்திற்கு அருகே இன்னொரு குழி தோண்டும்போது பெரிய பாறை வந்துவிட்டால் அது ஒட்டுமொத்த பணியையும் மீண்டும் செய்ய வேண்டிய
நிலையை உருவாக்கும். (அதாவது மீண்டும் இன்னொரு குழி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (பாறை இருந்தால் இந்த முறை அறிவுறுத்தப்பட்டதல்ல).

மேலும் SAR (Search & Rescue) நடவடிக்கைகள் fast and precise ஆக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. துல்லியமாக இவர்கள் எதையும் கணித்தபாடில்லை
ஆனால் பாறை வந்த பிறகும் ரிக் இயந்திரத்தை வைத்து தோண்டினார்கள், அதனால் முடியாமல் போக இந்தியாவிலேயே அதிக சக்தி கொண்ட இயந்திரம் என்று பெருமையாக மீடியாவில் கூறி போர்வெல்லை கொண்டுவந்து பாறையை துளையிட்டு அதிர்வுகளை ஏற்படுத்தினார்கள். இது முட்டாள்தனம். பாறை வந்தபோதே இதை நிறுத்தியிருக்க
வேண்டும். ஆனால் காப்பாற்றிவிடுவோம் எனக்கூறி தொடர்ந்து 55 அடி வரை துளையிட அதற்குள் துற்நாற்றம் வருவதாக கூறி மீட்பு பணியை நிறுத்தி குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றின் வழியாகவே மீட்டு விட்டதாக விடியற்காலை அறிவித்துவிட்டார்கள்..

எப்படி இப்பொது மட்டும் அதே வழியாக 88 அடி ஆழத்தில்
இருக்கும் குழந்தையை எடுத்தார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது.

குழந்தையை வெளியே எடுத்தது தேசிய பேரிடர் மேலாண்மை, பயன்படுத்தியது பேரிடர் மேலாண்மையால் ஏற்கனவே உருவாக்கப்பட்டு அமலில் இருக்கும் பின்வரும் சாதனங்களுள் ஒன்று.

a. Rope rescue
b. Magic ball
c. Umbrella tool
d. Cloth bucket
e. Cameras (with LED Light along with minimum 100 ft. wire and display)
f. Pendant jhula
g. Robotic machine(with camera & audio)
h. Iron Rod in “L/J/U” shape ( Dada ji ki chhadi with Iron Rod )
i. Aluminum wire with hook
j. Life Jacket of plastic sheet with wire
இதில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 40 மணிநேரங்களுக்கு பிறகு தேசிய பேரிடர் மீட்பு துறையினர் வரவைக்கப்பட்டு, இறுதியாக 80 மணிநேரத்திற்கு பிறகு தமிழக அரசின் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு குழந்தையை ‘Aluminum wire with hook’ மூலம் மேலே எடுக்கும்போது குழந்தையின் சிதைந்த பாகங்கள்
வந்திருக்கின்றன. அப்போது குழந்தை இறந்து 24 மணிநேரத்திற்கு மேலாகிறது என்று தெரிவித்தார்கள்.

இவர்கள் ஏற்படுத்திய அதிர்வுகளால் குழந்தை 26 அடியிலிருந்து 88 அடிக்கு செல்லும்போது பெருங்காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதோடு, தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளால் குழந்தையின்
மீது ஒரு அடிக்கு மண் மூடப்பட்டு குழந்தை கஷ்டப்பட்டு இறந்திருக்கக்கூடும்.

அமைச்சரின் சட்டையில் கறைபடும் அளவுக்கு உழைத்தார் என்று பெருமை பேசியவர்கள் முடிந்தால் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.

ஏன் உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மை அல்லது ராணுவம் வரவைக்கப்படவில்லை ?
தமிழக அரசு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க கையாண்டு வரும் நடைமுறை என்ன ?

இதில் எந்த அளவுக்கு அனுபவம் வாய்ந்தவர்களை பயிற்சி கொடுத்து உருவாக்கி வைத்திருக்கிறது ?
ஏன் குழந்தை 26 அடியில் இருக்கும்போதே தேசிய பேரிடர் மேலாண்மை வரவைக்கப்பட்டு மேற்சொன்ன ஏதோ ஒரு சாதனத்தை கொண்டு மீட்கவில்லை ?

ஏன் அதிர்வுகள் ஏற்படும் வண்ணம் கனரக எந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன.?

பாறை வந்த பிறகும்
தொடர்ந்து
துளையிடப்பட்டது ஏன் ?
பாறை வந்து அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட பிறகு இந்த சம்பவத்தில் உதவ நிபுணர்கள் முன்வந்தால் அவர்களின் பரிந்துரைகளை ஏற்க தயார் என்று வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அழைத்தது ஏன் ?

பணிகள் சிறப்பாக நடைபெற்றதற்கு பொறுப்பேற்ற சுகாதாரத்துறை அமைச்சர்,
இப்போது ஏற்பட்ட இழப்பிற்கும் பொறுப்பேற்பாரா ? அல்லது அவரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார்கள் பொறுப்பேர்பார்களா ?
மேலும், மீட்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், மருத்துவர்கள் போராட்டத்தை அறிவித்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்
சம்பந்தம் இல்லாமல் நடுகாட்டுப்பட்டியில் இருந்தார், இரண்டு நாட்களுக்கு பிறகு இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் அங்கு வர இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அமைச்சர் உதயகுமார் அவர்கள் வந்த சில மணிநேரங்களுக்கு பிறகு தான் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு,
சிறுவன் சுர்ஜித் மேலே கொண்டுவரப்பட்டான்.
இதனையடுத்து நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ள அறிக்கையில் மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் அதே அளவு சம்பளத்தை அதாவது ஆரம்பத்திலேயே 80 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். உண்மையில் ஆரம்பத்தில் மருத்துவர்களுக்கு
47,000 சம்பளம் தான் வழங்குவார்கள். அவர் எவ்வளவு பெரிய உத்தமர் என்பதற்கு இந்த ஒற்றை சான்று போதும்.

மேலும் சுர்ஜித் போன்ற குழந்தைகளை அன்றாடம் மருத்துவமனைகளில் காப்பாற்றி வரும் மருத்துவர்களை மக்கள் முன்பு குற்றவாளிகளை போல் சித்தரித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க
நிர்வாகிகளிடம் ஆதரவோடு போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்திருக்கிறார். அதாவது எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல்.
இதே அமைச்சர் தான் இதற்கு முன்னர் மருத்துவர்கள் போராடும்போது உங்கள் கோரிக்கைகளை 4 வாரங்களில் பரிசீலித்து நல்ல முடிவை அறிவிக்கிறேன் என்று சாய் பாபா மீது
சத்தியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் குட்கா பான் மசாலா போன்ற பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையிலும் மறைமுகமாக குட்கா விற்பனை செய்ய அனுமதித்து அதற்கு 80 கோடி ரூபாய்க்கு மேலே இலஞ்சப்பணம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக இந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் சட்டையில் சேற்றுக்கறை மற்றும் பான்பராக் கறையோடு தற்போது சுர்ஜித்தின் இரத்தக்கறையும் மருத்துவர்களை சுரண்டிய கறையும் ஒட்டிக்கொண்டுள்ளது, இதற்கும் அவரை பாராட்டுங்கள்.

-கா. தீனா
#பிணந்தின்னி_அதிமுக
#SorrySurjith
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with sivagsk

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!