ஆம் அது உண்மையாக இருக்கலாம்,நாமும் நம் ஆதாரங்களை தருகின்றோம்
அவர் மோடிக்கு பன்னீர் செல்வம் போல இந்திராவுக்கு அடிமையாய் இருந்தார்
அந்த மிசா சட்டம் 1975, ஜூன்மாதம் அறிவிக்கபடுகின்றது, திமுக அதன் போக்கில் ஆட்சியில் இருக்கின்றது,
அட எதிர்ப்பு கூட பிரச்சினை இல்லை, அதைவிட அதிர்ச்சியான விஷயம் ஸ்டாலின் திருமணம் அடுத்த ஆகஸ்டு, அதாவது 20/08/1975 அன்று நடந்தது
அதன் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? அதே குடியரசு தலைவர் பக்ரூதின் அலி அகமது
திமுக உண்மையிலே மிசாவினை எதிர்த்திருந்தால்
இன்று டயர்நக்கி என பன்னீர்செல்வத்தை அழைக்கும் கோஷ்டி இது,அந்த பக்ரூதின் அலி டயர்நக்கிகளை விட மாபெரும் இந்திரா அடிமையாய் இருந்தார்
அடிமைகளை வணங்கும் கலாச்சாரம் எங்கே தொடங்கியிருக்கின்றது
அரசியல் நாகரீகம் என்றாலும் இன்று மோடிக்கு கருப்புகொடி காட்டும் திமுக அன்று பக்ரூதின் அலி என்பவரை
தன் சொந்த வீட்டு விழாவுக்கு அழைத்திருக்க முடியுமா?
அதுவும் நெருக்கடி நிலை உச்சத்தில் இருக்கும் அழைப்பார்களா?
ஆக திமுக மிசாவினை எதிர்க்கவில்லை, அதன் போக்கில்
திமுக ஆட்சி நீடித்ததிலே அவர்கள் மிசாவினை எதிர்க்கவில்லை என்பது தெரிகின்றது
அடுத்த வருடம் அவர்கள் ஆட்சி முடியும் நிலை வந்தது,அதாவது 1971ல் நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது,
அப்பொழுது திமுக அரசு காலாவதியாகி மறுதேர்தல் நடக்க வேண்டிய நேரம், அப்பொழுதுது காந்தியவாதி கிருபாளியினை மிசா கைது செய்தது
இது நாடுமுழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது, திமுக ஆட்சி முடிய சில வாரங்களே இருந்தன
விரைவில் மிசா விலக்கபடும் என்றும்
அதுவரை மிசாவினை எதிர்க்காமல் இருந்த கருணாநிதி, தேர்தல் வரப்போவது அறிந்ததும் உஷாராகின்றார்,இரு எதிரிகளில் ஒரு எதிரியான காமராஜரிடம் "அய்யயகோ காந்தியவாதி கிருபாளினி கைது
ஆம் 1967ல் எந்த காமராஜரை ஓட அடித்தாரோ அவரிடமே சென்று தலையினை சொரிந்து கொண்டு நின்றார் கருணாநிதி
கருணாநிதியினை நன்கு அறிந்த காமராஜர் "நீங்க ஆட்சியின தொடருங்க, இதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" என
"அட அவங்க தேர்தலுக்கு நாடகம் போடுதாங்கண்ணேன்.. போன வருஷமே ஆட்சி இழந்தா எண்ணண்ணேன்?. ஜனதிபதி எல்லாம் கூப்பிட்டாங்களா இல்லியா
இப்போ நான் இவங்க பின்னாடி போனா
ஆம் அதில் உண்மை இருந்தது
அடுத்து காமராஜர் கைவிட்ட நிலையில் தானாக காலவதி ஆகவேண்டிய ஆட்சி கலைந்தது, அய்யகோ மிசா என் ஆட்சியினை
ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எதிர்கட்சியான பின் ஒரு நிலைப்பாடு எனும் இரட்டை நிலைப்பாட்டை அன்றே கொண்டிருந்த கருணாநிதி அதன் பின்பே மிசாவினை எதிர்ப்பதாக சொல்லிகொண்டார்
ஸ்டாலின் மிசா கைதி என பாபநாசம் கமலஹாசன் போல கருணாநிதி உருவாக்கிய அந்த பிம்பம், மிக தந்திரமாக உருவாக்கபட்ட அந்த பிம்பமே
"தந்தை மகற்காற்றும் உதவி" என்ற குறளுக்கு கருணாநிதியின் விளக்கம் இதுதான்
ஆம், உண்மைகள் வரதொடங்கிவிட்டன , கருணாநிதி மிசாவினை எதிர்க்கவுமில்லை அவரின் அரசு மிசாவினால் டிஸ்மிஸ் செய்யபடவுமில்லை என்பது உறுதியாகின்றது
ஆக கருணாநிதி ஆடியதெல்லாம் நாடகம் என்பது அன்றே மக்களுக்கு புரிந்திருக்கின்றது, திமுகவினருக்குத்தான் இன்னமும் புரியவில்லை, புரிந்தாலும் சொல்லமாட்டார்கள்
அந்த ஏதோ ஒரு காரணத்தை மறைக்க திமுகவினர் ஆயிரம் நாடகமாடினாலும் இனி ஒருநேரம் அது வெளிபட்டு தீரும்
பாவம் திமுகவினர்
இப்பொழுது முக ஸ்டாலினின் பிம்பத்தை காக்க,சிறைக்கு அவர் சென்ற காரணத்தை மறைக்க மகா கடுமையாக போராடுகின்றனர் பரிதாபம்..