ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம், நிறமானவர்களும் ஒருமாதிரி நாகரீக வடிவம் கொண்டவர்களுமே இங்கு சினிமாவினை ஆளமுடியும் என்பதை நொறுக்கி போட்டவர் அவர்
தமிழே தெரியாத அவர், தமிழறிஞர் மகனான முக ஸ்டாலினை விட நன்றாக தமிழ்பேச பயின்றது அடுத்த ஆச்சரியம்
வில்லனாக வந்து நடிகனாக போராடி வந்ததது அடுத்த ஆச்சரியம்
6 வயதிலே நடிக்க வந்து
கிட்டதட்ட 40 வருடமாக நம்பர் 1 இடத்திலே நிலைத்திருப்பது மாபெரும் ஆச்சரியம்
இதுவரை அச்சாதனையினை செய்தவர் யாருமில்லை, ராமசந்திரன் கூட 23 ஆண்டுகள்தான் முதலிடத்தில் இருந்தார்
அதுவும் சினிமாவால் அரசியலை நிர்ணயிக்கும் மாநிலத்தில் ராமசந்திரன், ஜெயா, கலைஞர், பழனிச்சாமி, பன்னீர் செல்வம் என பல முதல்வர்களை மிக சரியாக கையாண்டு முதலிடத்தில் இருப்பது மாபெரும் ஆச்சரியம்
ஒன்றுமே இல்லாமல் சென்னை
ஒரு ஆன்மீகவாதி இங்கு நடிகராய் வெல்வது பல கருப்பு சக்திகளுக்கு பிடிக்காது
ரஜினி 1980களிலே கவனிக்கபட்டார், எதையுமே மிக சரியாக உள்ளுணர்வால் அறியும்
அன்றில் இருந்தே அவருக்கு எதிர்ப்பு, அவரை குடிகாரன் பெண்பித்தன் பைத்தியம் ஊமையும் நொண்டியுமான குழந்தைகளை பெற்றவன் என ஏக புரளிகள்
அவர் எதையும் மறுக்கவுமில்லை, ஏற்றுகொள்ளவுமில்லை புன்னகைத்தபடி கடந்தார்
எம்.ஆர் ராதா, சந்திரபாபு, பாக்யராஜ், டி.ஆர், வடிவேலு என எத்தனையோ ஜாம்பவான்கள் அரசியலை தொட்டு நாசமாயினர் அதை அனாசயமாக் கடந்தார் ரஜினி, ஜெயாவிடம் அவர் மீண்டது ஆச்சரியமே
ஆம் தமிழகத்தில் நல்ல கலைஞனுக்கு வரும் சாபம் இரண்டு ஒன்று அரசியல் இன்னொன்று
இம்மூன்றில் இருந்தும் தப்பித்து அதிசயமாக செல்லும் ரஜினி நான்காவதும் ஒரு கோஷ்டியிடம் இருந்து தப்பினார்
அது பிரிவினைவாத நாத்திக கோஷ்டி
அது மதம்,மொழி, இனம் என பிரித்துபேசி அழிச்சாட்டியம் செய்யும், அவற்றின் பிடி சினிமாவிலும் உண்டு
சினிமாவில் ஒருகோஷ்டி பெரியார்,
ராகவேந்திரா முதல் பாபாஜி வரை தயக்கமின்றி பேசினார் நடித்தார், அதன் வெற்றி தோல்வி எல்லாம் பற்றி கவலையே இல்லை
அக்கம் பக்கம் பாருங்கள்
மகா கலைஞன் மம்முட்டி இடம் இப்பொழுது இல்லை,
மும்பை கன்னட நிலையும் அதுவே
ஆனால் பாலசந்தர் காலத்தில் வந்து இந்த கார்த்தி சுப்புராஜ் காலம் வரை ஈடுகொடுத்து நம்பர் 1 இடத்தில் இருப்பது மாபெரும் சாதனை
நிச்சயம் பெரும் அருள் அவரோடு இருக்கின்றது.
உங்களாலும் என்னாலும் முடியாததை இன்னொருவர்
சினிமா குதிரையில் ஏறி அரசியல் பள்ளத்தில் விழாமல்,சிங்களிடமும் யானைகளிடமும் சிக்காமல் நெருப்பாற்றை கடந்து சினிமாதுறையின் போட்டிகளை கடந்து,சூழ்ச்சியினை முறியடித்து லகானை அட்டகாசமாக கையாள்பவர் ரஜினி
இங்கு தன் நிலையிலே கடைசிவரை நின்ற நடிகன் என யாருமில்லை
பாவதர், சின்னப்பா வகை ஒருவகை
ராமசந்திரன் அரசியல்வாதியாய் போராடி செத்தார், சிவாஜி கணேசனின் நிலை உலகறிந்தது அது தனி வகை
அவ்வகையில் புரூஸ்லி, ஜாக்கிசான் என வெகுசிலருக்கே அந்த யோகம் உண்டு,
உலக நிலவரமும் அப்படியே
அவர் தமிழக எல்லைகளை தாண்டி இந்திய எல்லையினை தாண்டி இன்று உலக நட்சத்திரமாக மாறிவிட்ட பின் அவருக்கான எல்லை பெரிது, அமெரிக்கா தொடங்கி ஜப்பான் வரை எல்லா நாட்டு மக்களும் அவரை ரசிக்கின்றார்கள்
அரசியலிலும் பிடி கொடுக்காமல் சினிமாவிலும் தன் இடத்தை விடாமல் தேசிவாதியாக மதவாதியாக தன் வழியில் மகா உச்சத்தில் நிரந்தரமாக மின்னும் ரஜினி அந்த விருதுக்கு தகுதியானவரே
அவரிடம் ஒரு நியாயதர்மமும் இருக்கின்றது
தன் படம் என்பது தயாரிப்பாளரின் முதலீடு, அதற்கு நஷ்டம் வராமல் பார்க்கின்றாரே தவிர தன் தொண்டனை வைத்து எப்படி எல்லாம்
தன் ரசிகன் காலமெல்லாம் தன் ரசிகனாக மட்டும் இருக்கட்டும் அவனை வேறு எந்த சிக்கலிலும் இழுத்துவிட கூடாது எனும் மகா கவனம் அது, அது வாழ்த்தவேண்டிய குணம்
ரஜினி இங்கு சிலரால் சாடபட காரணம் இரண்டு, ஒன்று அவர் இந்து அபிமானி
இந்த இரண்டில் ஒரு குணம் இருந்தாலே இங்கு விடமாட்டார்கள், அந்த மாபெரும் சாதனையாளனுக்கு இரண்டு அபூர்வமும் இருந்தால் விடுவார்களா?
மாட்டார்கள், அதனால் ஓரமாக நின்று ஒப்பாரி வைப்பார்கள், அவர்கள் அப்படித்தான்
அவர்களை தாண்டி யோசியுங்கள் ரஜினியின் சாதனையும்
அவர் உச்ச நட்சத்திரம் மட்டுமல்ல, ஒருகாலமும் திசை மாறா துருவ நட்சத்திரம்
தன்னை அறிந்த அந்த ஆன்மீக ஞானி இதை போல பல விருதுகளுக்கு எக்காலமும் தகுதியானவர்.