விஷயம் இதுதான்
அது 1971ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது, ஏன் செய்தது என்றால் அதற்கும் அரசியல் கணக்கு இருந்தது
உச்சமாக ஒரு கழுதை கழுத்தில் டாக்டர் என எழுதிகட்டி
கலைஞர் அதன் பின் அந்த பட்டத்தை வாங்கியிருக்க கூடாது, நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்
ஆனால் அவரோ சென்றார், டாக்டர் ஆனார் திரும்பினார்
அன்று மாலைதான் அந்த கோரம் நிகழ்ந்தது, எல்லாம் முடிந்த பின்பும் போராட்டகாரர்களை அடக்குவதாக விடுதியில்
மறுநாள் அருகிலிருந்த குளத்தில் பிணமாக மிதந்தான் உதயகுமார், போராட்டம் தீவிரமானது
உதயகுமாரின் தந்தை ஆசிரியர், ஆனால் அவரே வந்து பார்த்துவிட்டு இது என் மகன் அல்ல என எழுதி கொடுத்தார், அவ்வளவு இறுக்கமான காலம் அது
இது சட்டமன்றத்தில் எதிரொலித்தபொழுது மாணவர்கள் தன்னை கொல்ல சதி செய்ததாகவும்,செத்தது உதயகுமார் இல்லை என காவல்துறை அறிக்கை கொடுத்ததாகவும் சொன்னார் முதல்வர் கலைஞர்
விசாரணை இந்த ஜெயா ஆறுமுகசாமி கமிஷன் போல நடந்தது, ஆளாளுக்கு விசாரித்தார்கள்
முடிவில் இறந்தது உதயகுமார்தான், ஆனால் அது எதிர்பாராதது அதற்கும் போலிஸ் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என முடித்து கொண்டது
இது 1971ல் நடந்தது, 1978ல் ராமசந்திரன் முதல்வரானதும் இந்த விவகாரம் வெடித்தது, அதை தொடங்கியவர் உதயகுமாரின் தம்பி மனோகரன்
அவர் ராமசந்திரனுக்கு கடிதம் எழுதினார், அதில் அந்த சம்பவத்தை தொடர்ந்து
கலைஞர் உதயகுமார் குடும்பத்தை ஏமாற்றிய வகையினை பாரீர் என அதிமுக கும்பல் அதை ஊரெல்லாம் சொல்லி சந்தோஷபட்டது
அதன் பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தன
இதில் என்ன சோகம் என்றால் இன்றளவும் அந்த உதயகுமாரின் படமோ இல்லை வேறு ஆதாரமோ எங்கும் கிடைக்காது,
இன்னும் சில ஆண்டுகளில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சாதிப்பார்கள், இல்லை அது நடந்தது என சொன்னால் நாம் கேடுகெட்ட ஜென்மம் ஆகிவிடுவோம்