5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில், கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.!
ஆச்சரியப்பட தயாரக இருங்கள்!
[பாகவத புராணம் 12.2.1]
2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
[பாகவத புராணம் 12.2.2]
தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
[பாகவத புராணம் 12.2.36)
4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
[பாகவத புராணம் 12.2.4]
5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத்
குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
[பாகவத புராணம் 12.2.5]
6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்று அறியப்படுவான்.
வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும்.
பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
[பாகவத புராணம் 12.2.6]
தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
[பாகவத புராணம் 12.2.7]
8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
[பாகவத புராணம் 12.2.9]
இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.2.10]
[பாகவத புராணம் 12.2.11]
11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான்.
[பாகவத புராணம் 12.3.42]
நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
[பாகவத புராணம் 12.3.41]
தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.38]
இத்தனை காலம் பால்கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்து விட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
நன்றிக்கடன் மறக்கப்படும்.
அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.32]
**********************************
நன்றி: வாட்ஸப்.
🍁வாஸவி நாராயணன்🍁