நம் நாட்டில் நவபாஷாண சிலை வழிபாடு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பழநி முருகன் கோவில் தான். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும்.
🇮🇳🙏1
🇮🇳🙏2
🇮🇳🙏3
சித்தர்களின் கூற்றுப்படி அணுக்களை பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷணம் என்கிறார்கள். இதில் சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷணம், கௌரி பாஷணம், தொட்டி பாஷணம் என ஒன்பது பாஷணங்கள் அடங்கியிருப்பதாக சில ஆய்வுகளும்,
🇮🇳🙏4
🇮🇳🙏5
🇮🇳🙏6
உலகிலேயே மிகப்பெரியதும், உயர்ந்ததுமான மலைத்தொடர் இந்த இமயமலை. இதற்கே ஈடாக தென்னகத்தில் பெரியமலை என்ற ஒரு மலையும் இருந்தது. ஆனால் அது அகத்தியரின் காலடிபட்டு தடைமட்டமானதாக புராண வரலாறு உள்ளது.
🇮🇳🙏7
🇮🇳🙏8
🇮🇳🙏9
🇮🇳🙏10
கோவில் வளாகத்தில் பலிபீடமும், நந்தி தேவரும் உள்ளது. பிரதோஷ வேளைகளில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படகிறது. கோவிலில் நுழைந்தவுடன் முதலில் கண்ணில் தென்படுவது சித்தி விநாயகர்.பரவசப்பட வைக்கும் பளிங்குக் கல் மூலம் இந்த விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளார்.
🇮🇳🙏11
🇮🇳🙏12
சிவபெருமானுக்கும், பார்வதி அம்மையாருக்கும் கயிலாயத்தில் திருமணம் நடைபெற்றபோது சிவன், அகத்தியரை பூமியை சமநிலை செய்யுமாறு கூறினார். அகத்தியரும் தென்பகுதியில் வந்து இஞ்சிமேடு பகுதியில் இருந்த பெரியமலையில் நின்று இந்த பெரிய மலையின் மீது அழுத்தம் கொடுத்தார். 🇮🇳🙏13
🇮🇳🙏14
பெரியமலையில் உள்ள ஒரு சுனை தீர்த்தத்தை வைத்துதான் மூலவராக உள்ள நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் வழிபாடு செய்யப்படுகிறது.
🇮🇳🙏15
🇮🇳🙏16
இத்தலத்திற்கு வந்து வேண்டுதல் விடுக்கும் பக்தல்கள் அக்காரியம் நிறைவேறியதும் சிவபெருமானுக்கும், அம்பாள் அம்மையாருக்கும் அபிஷேகம் செய்து, புடை ஆடைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
🇮🇳🙏17
வருடந்தோறும் படி விழா, ஆண்டு விழா, பொங்கல் விழா, மகா சிவராத்திரி, விநாயக சதுர்த்தி, ஆடிக் கிருத்திகை, நவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபத் திருவிழா போன்ற வைபவங்கள் விமரிசையாக நடக்கின்றன.
🇮🇳🙏18
நடைதிறப்பு
அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
🇮🇳🙏19
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஞ்சிமேடு பகுதியில் உள்ளது பெரியமலை. அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு வழியாக பெரியமலையை அடையலாம்.
🇮🇳🙏20
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳