சரி, தமிழ்ச் சைவ முதல்வர்கள் யார்? சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் பாடல்களில் மேலோட்டமான பரிச்சயம் இருந்தாலும் மேற்கண்ட கூற்றுகள் தவிடுபொடி ஆகிவிடும்.+
எ.கா:
"அருநெறிய மறைவல்ல முனி" (அதாவது, சிவபெருமான் அரிய வேதங்களில் வல்லவர்)
"வேதத்தில் உள்ளது நீறு"
"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே"+
"சாமவேதம் ஓதினீர்" (சாம வேதம்)
"சதுரம் மறைதான் முறை செய்து வணங்கும்.." (நான்கு வேதங்களும் வணங்கும்..)
அதாவது,
வேதம் ஓதி ஹோமம் செய்யும் அந்தணர், ஹோமப் பொருட்கள் தரும் பசுக்கள் - இவர்கள் தங்கள் கடமையைச் செய்தால் குளிர்ச்சி தரும் மழை பொழியும்; அரசும் மக்களும் தழைப்பர்.
"தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழற் சேர" !!!!!
"சொற்றுணை வேதியன்"
"நான்மறையோடு ஆறு அங்கமானாய்"
"வேதியனை, வேதத்தின் கீதம் பாடும் பண்ணவனை"
"வேதியன் காண், வெண்புரிநூல் மார்பினன் காண்"+
"வானவர் இருக்கொடும் பணிந்தேத்துவர்" (ரிக் வேதம்)
"சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்" (சாம வேதம்)
"சாம வேதர்" (சிவபெருமான்)
"சங்கரனை, சாமம் ஓதும் வாயானை"
"அரியானை அந்தணர்தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை"+
"இருக்கு வாய் அந்தணர்கள் .. வேள்வியிருந்து" (இருக்கு=ரிக் வேதம்)
"சாம வேதம் பெரிது உகப்பானை"
"சாம வேதனை"
"மறை நான்கும் கல் ஆல் நிழற் கீழ்ப் பன்னிய எங்கள் பிரான்"
"அந்தணர் ஓமப்புகையால்.."+
"நமசிவாய வாழ்க" (வேதத்தின் நட்டநடு வாசகம் திரு ஐந்தெழுத்து. அதில் தான் திருவாசகம் ஆரம்பம்.)
"ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க" !! (ஆகமமே இறைவன் தான்)
"மூவா, நான்மறை முதல்வா போற்றி"
"ஆய் நான்மறையவனும் நீயேயாதல் அறிந்து"+
"இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" (இருக்கு = ரிக் வேதம்)+
இது ஏதும் அறியாமல் "63 நாயன்மார்களும் வேதத்தைப் போற்றவில்லை" என்பது அறியாமை.+
அதாவது, நாயன்மார்களில் ஒருவர் கூட வேதத்தை, சமஸ்கிருதத்தைத் தூற்றவில்லை; மாறாகப் போற்றியே உள்ளனர்.+
அடுத்து, ஆகமங்கள் பற்றி.
"ஆலய அர்ச்சனைக்கு ஆகமங்களே அடிப்படை" என்ற நூலில் இருந்து சில தகவல்கள். (ஆசிரியர்: கே. சி. லட்சுமிநாராயணன். எல் கே எம் பப்ளிகேஷன்.)+
அதில், சிவாகமங்கள் 28.
இவற்றில் என்ன உள்ளன?+
தெய்வப் பிரதிஷ்டை
தினசரி பூஜைகள்
அர்ச்சனை முறை
அபிஷேகத் திரவியங்கள்
அர்ச்சனைக்கு உகந்த பூக்கள்
மாத பூஜைகள்
யாகசாலை அமைப்பு
உற்சவங்கள்
கும்பாபிஷேகம்
..
என்று, திருக்கோவில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும்.
- தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.+
"அரனடி நாடொறுஞ் சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேன்"
"அஞ்சொடு இருபத்து மூன்றும் ஆகமம்" (அதாவது, 28)
"பாடி எழுகின்ற வேத ஆகமங்களும் நாடியின் உள்ளாக நான் கண்டவாறே"
+
"ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்" (வடமொழியின் 50 எழுத்துகளே ஆகமங்கள் ஆயின)+
"அரவொலி ஆகமங்கள், அறிவார் அறி தோத்திரங்கள்"
மாணிக்கவாசகர் திருவாசகம்:
"ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க"+
"நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப் பொங்குகிறது என் ஆசை" என்று இறைவி, இறைவரிடம் சொல்கிறார். அதாவது,
1) ஆகமங்களை அருளியவர் இறைவன்.
2) அதன்படி அவரை அர்ச்சனை செய்ய வேண்டும்.
"பூசனைக்கு நிபந்தம் ஆராய்ந்தான் துங்க ஆகமம் சொன்ன முறையால்"+
இது போலவே, சைவ சித்தாந்தத்தின் மெய்கண்ட சாத்திரங்கள் ஆகமங்களின் பொருளையும் சிறப்பையும் விளக்கி அமைபவை.+
"ஆகமங்கள் சொன்ன அவர் தம்மை"
திருத்துறையூர் அருள்நந்தி சிவாசாரியார் இயற்றிய "சிவஞான சித்தியார்" நூல்:
"சுத்தவடிவு இயல்பாக உடைய சோதி சொல்லிய ஆகமங்கள்"
"படிக்கும் நூல் சிவாகமம்"+
(ஸ்)மிருதி, புராணம், கலைகள்.. மெய்நூலின் வழிபுடையாம்"
அதாவது - வேத, ஆகமங்கள் முதலில் தோன்றின. கலைகள், புராணங்கள் அந்த "உண்மை நூல்களில்" இருந்து தோன்றின.
"உண்மை விளக்கம்" நூலில்:
"அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்"+
"சுருதிபயில் செம்மைதரும் ஆகமங்கள்" (சுருதி = வேதம்)
சரி, உமாபதி சிவாசாரியார் "கொடிக்கவி" அருளினாரே. அது, சிதம்பரம் கோவிலில் *ஆகம முறைப்படியான* கொடியேற்ற நிகழ்வின் போது தானே.
"சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர் திருவடிகளே"
"நாலாரும் ஆகமத்தின் நூலாய ஞானமுத்தி"
கந்தரநுபூதியில்:
"வேதாகம ஞான விநோத (முருகா)"+
"வேத ஆகமம் அவன் எனக்கண்டுரைத்த"
அவரது "கொலை மறுத்தல்" நூலில் இருந்து:
"அருமறை ஆகமநெறி சொற்பொருள் அமைத்து.." +
"வேத ஆகமத் துணிபு இரண்டில்லை ஒன்று"
"தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும்"+
"சிற்பங்களைச் சிற்ப சாஸ்திரத்தைப் பார்த்துத் தான் செய்ய வேண்டும் என்று ஆகமநூல் சொல்கிறது.
சிவாகமங்களின் படியும் சிற்பசாஸ்திரங்கள் படியும் மட்டுமே கோவில்களை எழுப்ப வேண்டும்."+
சைவம் வேறு, ஹிந்து மதம் வேறு என்ற வாதத்தில் எவ்வளவு அறியாமை/பொய் என அறியமுடிகிறது அல்லவா?+
அவர் கைக்கொண்ட முறையில் சமஸ்கிருத மொழியில் யாகம், கலசாபிஷேகம்; தமிழ் வேத தேவார இன்னிசை - இது தானே சரியாக இருக்க முடியும்?! இது தான் நடக்கிறது.+
அவர்கள் வழியில் நடப்பதே சைவநெறி.
🙏🙏