மாநிலங்களவையின் மொத்த இடங்கள்: 245
இதில், மாநில, யூனியன் பிரதேச சட்டமன்றங்கள் தேர்ந்தெடுத்து அனுப்புவது: 233
ஜனாதிபதி நியமிப்பது: 12
+
கலை, இலக்கியம், சமூக சேவை, நிர்வாகம், விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம், சட்டம் - இவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்கள், பெரும் அனுபவம் பெற்றவர்கள் ஆகியோர். +
புகழ் பெற்ற விஞ்ஞானிகள்:
சத்தியேந்திர நாத் போஸ்
ராஜா ராமண்ணா
கஸ்தூரிரங்கன்
பத்திரிகைத்துறை:
குல்தீப் நய்யார்
குஷ்வந்த் சிங்
சோ ராமஸ்வாமி
கவிஞர்கள்/எழுத்தாளர்கள்:
ஆர்.கே.நாராயண்
மைதிலி சரண் குப்தா
ஹர்வன்ஷ் ராய் பச்சன்+
பிருத்விராஜ் கபூர்
சிவாஜி கணேசன்
ஷபானா ஆஸ்மி
இசை/ஓவியம்:
பண்டிட் ரவிசங்கர்
எம்.எப்.ஹூசைன்
பொருளாதாரம்:
மால்கம் ஆதிசேஷய்யா
பிமல் ஜாலன் (இவர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்)
சட்டத்துறை:
அல்லாடி கிருஷ்ணஸ்வாமி
ஃபாலி நார்மன்+
ஏப்ரல் 2012ல் சச்சின் டெண்டுல்கர், ஹிந்தி நடிகை ரேகா முதலியோர் ஜனாதிபதியால் ராஜ்யசபா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். +
இந்தச் சாதனையாளர்கள், மேலவை விவாதங்களில் தம் துறை சார்ந்த திறன், பன்முகத்தன்மை ஆகியவற்றால் புதிய சிந்தனைகளையும் நவீனத் தீர்வுகளையும் தர முடியும்.
மேலவை என்றால் Elders உள்ள சபை என்று தானே பொருள்! +
அரசியல் சாசனப் பரிச்சயம் இல்லாதவரே இதில் குறைகாண்பர்.
அதனால், திரு.கோகோய் பாஜக உறுப்பினர் ஆகப் போவது இல்லை. (சச்சின் டெண்டுல்கர் ஆனாரா? அதே போல் தான்.)