1) வேதத்தையும் வேள்விகளையும் சிறப்பித்தனர்
2) வேத நிந்தனை செய்தோரைக் கண்டித்தனர்.
சில எடுத்துக்காட்டுகள்.+
வேள்விகள் பற்றிய சம்பந்தர் பிரான் பாடற்குறிப்புகளில் சிலக் கற்கண்டுச் சிதறல்கள்:
"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை"+
"வேட்டு வேள்வி செயும் பொருளை விளிமூட்டு சிந்தை முருட்ட மண் குண்டர்"
"அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர்" (அழல் = அக்னி)
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்"+
"பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம்" (பறப்பு = கோவில்)
"வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னகராரே" (ஓவா = நீங்காத)+
"வேள்விப்புகையும்பர் உலாவும் புகலியே" (புகலி = சீர்காழி)+
"எண்ணு மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய்"
(பிராமணர்கள் காருகாபத்தியம், ஆசுவனியம், தாட்சிணாக்னி என்ற 3 அக்னிகளை ஓம்புவார்கள்.)
"ஓமமொடு உயர்மறை" (ஓமம் = ஹோமம்)+
சரி, சம்பந்தர் திரு அவதார நோக்கம் பற்றிப் பெரியபுராணத்தில் சேக்கிழார் என்ன சொல்கிறார்?
"*வேதநெறி* தழைத்தோங்க.."
"அப்பதி தான் அந்தணர் தம் கிடைகள் அருமுறையே செப்பும் ஒலி"+
"அவ்வூர் மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய" (சீர்காழி மரங்களும் யாகம் செய்யும் தகைமை உடையன)
"சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால்" (வண்டுகள் சாம வேதம் பாடும் சீர்காழி)
காழியினில் வந்த கவுணியர்தம் போர் ஏறு" (கவுடின்ய கோத்திரம்)+
அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதம், வேள்வி என்று நூற்றுக்கணக்கான குறிப்புகள்.
"மறையின் ஓசையும் மல்கி அயலெலாம் நிறையும் பூம்பொழில்சூழ் திருநின்றியூர்"
"தகை நால்வேதம் ஓர்ந்து ஓதிப்பயில்வார் வாழ்தரும்."+
"கலிமெலிய அழல் ஓம்பும் அப்பூதி" (வேள்வி செய்யக் கலி மெலியும்)
"இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்" (ரிக் வேதம் ஓதும் அந்தணர்கள்)
"அவி அடுவார் அருமறையோர்" (அவி = வேள்வியில் இடும் உணவு)
"சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சுயம்பு" (சாம வேதம்)+
"விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்கை வைத்தார்"
"செந்தியார் வேள்வி ஓவாத் தில்லை"
"வேதமும் வேள்விப்புகையும் ஓவா விரிநீர் மிழலை"
"மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி"
"வேதியர் வேதமும் வேள்வியும் ஆன "+
ஐ வேள்வி = ஐந்து வேள்விகள்
1) தேவ யக்ஞம்
2) ரிஷி யக்ஞம்
3) பித்ரு யக்ஞம்
4) நர யக்ஞம்
5) பூத யக்ஞம்
"அங்கம் ஆறும் அருமறை நான்குடன் தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் "
"வேள்விக்குடி எம் வேதியனை"
"இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்"+
இன்னொன்று:
"ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்" என்று சம்பந்தர் பெருமான் கூற்றில் இருந்து அவர் தமிழையும் சமஸ்கிருதத்தையும் சேர்த்துச் சிறப்பிப்பது விளங்கும்.+
வைதிக சைவத்தைச் சமணர்களிடம் இருந்து காப்பேன் என்று கூறும்போது அல்லவா இதைச் சொல்கிறார்! +
திருச்சிற்றம்பலம்! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏🙏