பரணர் #பதிற்றுப்பத்து பாடலொன்றில், சேரமன்னன் குமரி முதல் இமயம் வரை சென்று ஆரிய மன்னரையெல்லாம் வென்றான் என்றும் அவன் கடற்போரில் வல்லவனாதலால் "கடல் பிறக்கோட்டிய குட்டுவன்" என குறிப்பிடுகின்றார்!
#செங்குட்டுவன் கடல் போன்ற பெரிய படையினை உடையவனாக காணப்பட்டான் என்றும், தேன் அரும்பிய மலர் மாலையை அணிந்த மறப்பண்பு மிக்கவனாகக் காணப்பட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது!
உயர்ந்த அலைகளையுடைய அக்கடலாகிய பகை விலகி ஓடுமாறு செய்தான் என்று #செங்குட்டுவன் புகழ் பாடப்பட்டிருப்பதைக் காணலாம்!
காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த கரிகால்சோழன் தனது கடற்படையின் உதவியினால் இலங்கை மீது படையெடுத்து அங்குத் தனது புலிக்கொடியை நாட்டினான்!