கல்வெட்டுக்களில் #சட்டிச்சோறு #எச்சோறு #புள்ளிச்சோறு #திங்கட்சோறு #வரிச்சோறு #வெட்டிச்சோறு என்று பல சொற்றொடர்கள் வருகின்றன. இதில் #எச்சோறு என்பது ஒரு வகை வரியாகும்.
#சட்டிச்சோறு எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பதை பின்வரும் கல்வெட்டுகள் விரிவாக எடுத்துரைக்கின்றது!
இது திருவிழாவிற்கு வரும் அடியார்களுக்கு, யாத்திரிகர்களுக்கு அளிக்கப்பட்டதாக பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன!
முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் திருவண்ணாமலைக் கோயிலில் பல பணிகள் நடைபெற்றிருக்கின்றன.
இவனுடைய பணி மகன் ஒருவன் “பாண்டிய உதய திவாகரன்” என்பவன் சோழமண்டலத்து அருமொழித்தேவ வளநாட்டு ஓர்வலக் கூற்றத்து ராஜராஜ நல்லூரைச் சேர்ந்தவன்.
இந்த நெல் கொண்டு திருவமுது, 5 கறி, புளிங்கறி, மிளகு, உப்பு, சீரகம், நெல், தயிர், 8 வாழைப்பழம், 20 பாக்கு, 80 வெற்றிலை, விறகு, வாழைக்குருத்து, குசக்கலம், கலமிடும் குசவன், முதலியவற்றுக்கு கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்!
#சட்டிச்சோறு என்றால் ஒரு சட்டிக்கு 2 நாழி அரிசி, புளிங்கறி, மிளகு, சீரகம், உப்பு, நெல், தயிர், 4 பாக்கு முதலியவை கொடுக்க வேண்டும்!
இதற்காக குசவன் 20 சட்டி, பேரகல் 40, சிற்றகல் 20 கொடுக்க வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
#சட்டிச்சோறு பற்றி #மயிலாடுதுறை வட்டம் #குத்தாலம் உத்தவேதீஸ்வரர் ஆலய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது.
இத்தானம் அளித்தவன் "கங்கை கொண்ட சோழபுரத்து உள்ளாலைப் பெரிய அங்காடி வியாபாரி" வெண்காடன் ஆடவல்லான் என்பவன் ஆவான்.
#வேட்கோவர் தொழில் தொடர்ந்து நடைபெற இத்தானம் உதவியளிக்கும்.
#திருச்செந்தூர் வட்டத்திலுள்ள #ஆத்தூர் கோயிலிலுள்ள மாறவர்மன் விக்கிரமசோழ பாண்டிய தேவனின் 25-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு #சட்டிச்சோறு பற்றி கூறுகிறது.
#காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலும் #சட்டிச்சோறு வழங்க பெற்றதாக அக்கோயில் கல்வெட்டு கூறுகிறது.
#சட்டிச்சோறு என்றால் அதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதனையும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன
இன்றும் கோயில்களில் அளிக்கப்படும் உணவிற்கு #பட்டைசாதம் என்றும், #உண்டைக்கட்டி எனவும் அழைக்கப்படுகின்றது.
எனவே #சட்டிச்சோறு என்பது ஒரு குறிப்பிட்ட அளவு சாப்பாடு என்பது உணரப்படுகிறது!
க) #பேரூர் பட்டீசுவரர் கோயில் கல்வெட்டு:
“…நாள் ஒன்றுக்கு அமுதுபடி அரிசி இருநாழியில் நாழி சட்டி யிட்டு வருவதாகவும்…”
ங) #திருமழபாடி வைத்தியநாதர் கோயில் கல்வெட்டு:
“…திருவமுது பொநகப்பானை ஒன்றுக்கும் கறியமுது சட்டி ஒன்றுக்கும்…”
அச்சட்டிச் சோறும் ஒரு குறிப்பிட்ட அளவுள்ளதாக வழங்கப்பட்டு வந்ததாயும் அறிகிறோம்...!
- நன்று -