வழக்கமான உற்சாகத்துடன்
சூரியன் உதிக்கிறது,
அலைஅடிக்கிறது,
மான்கள் துள்ளுகிறது,
அருவிகள் விழுகிறது,
மிருகங்கள் வேட்டையாடுகிறது,
மீன்கள் நீந்துகிறது,
தவளை கூட துள்ளி ஆடுகிறது,
ஆடு மாடுகள் கூட தெருவில் நடமாடுகிறது,
காக்கை,புறா,மைனா சிட்டுக்குருவிகளும் ஏன் குளவிகளும் மகிழ்ச்சியாய் பறக்கிறது,
ஆனால் மனிதன் அஞ்சி நடுங்கி கிடக்கிறான் சகமனிதனையும் நேசிக்க முடியாமல் வீட்டின் வெளியே பூட்டை போட்டு அடைந்து கிடக்கிறான்,உலகம் முடங்கவில்லை.
இந்த பிரபஞ்சத்தில் சுயநலமாய் மனிதன் மட்டும் வாழ்ந்தான் ஆடினான்
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு தூசி என்று மனிதனுக்கு தெரியவில்லை, உழைப்பு,பணம்,விஞ்ஞானம் இது தான் உயர்ந்தது என்றான் ஆடினான் பறந்தான் தானே வலியவன் என்றான்,
உலகம் சுற்றினான், கடவுளே நான்தான் என்றான், ஒரு சாரார் கடவுளே இல்லை என்றான், இரு சாராரும் ஓசியில் சோறும் தின்றான்,
அதனால் முடங்கியது மனிதகுலம் கண்ணில் உயிர் பயம் கலந்த இன்னதென்று சொல்ல முடியாத நெஞ்சில் மரண பயம்.
முளைத்து வளரும் விதையும் வளர்ந்து விட்ட மரம் கூட அஞ்சவில்லை மரத்தில் உள்ள குருவி கூட சுகந்தரமாய் சுற்றி கேலி செய்கிறது,
கொரானாவுக்காக கை கழுவி கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்து இடுப்பை சொறிந்து கொண்டு சிரிக்கிறது குரங்கு.
நிறுத்தி வைத்திருக்கும் விமானங்களையும் எக்காலமிடுகிறது பருந்து, கப்பல்களையும் பார்த்து கேலியாய் புன்னகைக்கிறது மீன்கள் ,
தெய்வங்களும் கூட நமக்காக கதைவடைத்து விட்ட நிலையில்,
அவன் வீட்டில் முடங்கி கிடக்க வாசலில் வந்து நலம் விசாரிக்கிறது காகம்,
தெருவில் பயமின்றி நாய் நடக்க பயத்துடன் பூட்டை போட்டு வீட்டில் முடங்கி கிடக்கின்றான் மனிதன்,
ஞானம் பெறுகிறது மனித இனம் விழித்துகொள்வோம் அனைவருக்குமானது இந்த உலகம் அனைவருக்கும் என்பதில் மனிதர்கள் மட்டுமல்ல.
அதை அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாக வழங்க வேண்டியது நம் கடமை அனைத்தும் நமக்கானதுதான். ஆனால்,தேவைக்குப் பயன்படுத்தும்வரை அது நிலைத்திருக்கும்.
பொறுப்பு இனி நம்முடையது
வாருங்கள் கரம் கோர்த்து சுற்று சூழல் காப்போம்.
நன்றி வணக்கம் 🙏
என்றும் அன்புடன் ❤️❤️
உங்கள் #SSR
Special Thanks For- மச்சி @BrightAmt