ஒரு தோட்டக்காரனின் கதை...
ஒரு ஊரில் பாரதி என்னும் ஓர் அன்புத்தாய் வாழ்ந்து வந்தாள். பெரும் செல்வந்தகையாகப் பிறந்த அவள், அனைவரயும் நேசிக்க மட்டுமே தெரிந்தவள். அவளின் பலவீனத்தைப் பயன் படுத்தி;
நிலத்தின் பெரும் பகுதியை இழந்த பாரதிக்கு மிஞ்சியது கிட்டத்தட்ட 30 சென்ட் நிலமே.. அவள் அதில் பல இனத்திலுள்ள நெல்விதைகளைப் பயிரிட்டு வந்தாள்.
பாரதியும் பயிர்களைத் தன் பிள்ளைகள் போலவே அன்புடனும் பாசத்துடனும் பார்த்துக் கொண்டாள்.
அவள் நிலத்தின் கிழக்கில் சப்பை மூக்கன் என்னும் ஓர் பண்ணையாரும், மேற்கில் நெட்டையன் எனும் ஓர் பன்னாடையும் நிலங்களை வைத்திருந்தனர். இருவரும் அவ்வப்போது அவள் பயிர்களை சேதப்படுத்தி குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
வம்பிழுக்கும் நெட்டையனை அவள் அடித்து ஓடவிடுவாள்... ஆனால் இந்த சப்பைமூக்கன் பெரிய பணக்காரன். ஆள்பலம் மிக்கவன்.
பாரதியுடன் நேரடியாக மோத முடியாதென்று தெரிந்து கொண்ட நெட்டையன், தன் நிலத்தின் ஒரு பகுதியில் கொடிய விஷச் செடிகளைப் பயிரிட்டு, அந்த விதைகளை பாரதியின் நிலத்தில் தூவி விட்டான். நெற்பயிர்களுக்கு போடும் உரத்தினை சுரண்டி
நாட்கள் போகப் போக, நன்கு வளர்ந்த விஷச்செடிகள் குறிப்பிட்ட இரு நெற்பயிர்கள் இடையே
என்றெல்லாம் சொல்லி குறிப்பிட்ட ஓர் இனப்பயிர்களை மூளைச்சலவை செய்து பயமுறுத்தின அந்த களைச்ச் செடிகள்... அமைதியாயிருந்த அந்தப் பயிர்களும்
சப்பை மூக்கனும் நெட்டையனும் ஆணவத்தால் சிரித்தனர்..
இரண்டு பகுதியிலும் உள்ள பெருபாலான பயிர்களுக்கு விஷயம் தெரிந்தது... இது நெட்டையனின் சதி தான்! ஆனால் அவைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அந்த வேளையில் ஒரு ஏழைத் தாயின் மகன் புதிய காவலாளியாகப் பொறுப்பேற்றார்... அவர் பெயர் தாமோதர்!!
பயிர்களுக்கெல்லாம் அவர் மேல் பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை...
இவனைப்போல் தோட்டக்காரன் நமக்கில்லையே என அடுத்த கழனியிலுள்ள பயிர்களெல்லாம் ஏங்கின.
மிகப்பெரிய பண்ணையாரான "அம்பலத்தாரி"ன் நெருங்கிய நண்பரானார்!! அனைத்து ஜமீன்தார்களும் போற்றும் விதம் கண்ணியமாக நடந்து கொண்டார்!
ஒரு நாள் நெட்டையன், பாரதியின் வேலியின் ஒரு பகுதியில் நெருப்பைப் பற்ற வைத்து ஓடிவிட்டான். வேலி சேதம் அடைந்ததைப் பார்த்த தாமோதர் வெகுண்டெழுந்தார். நெட்டையனின் நிலத்திற்கே சென்று,
அவர் சிரித்து கொண்டே... ""யோவ்.. அவன் ரொம்ப மோசமான ஆளுய்யா....
தாமோதர் கிட்ட உஷாரா பழகணும் என்று சப்பை மூக்கனும் புரிந்து கொண்டான்..
நெட்டையன் போலவே சப்பை மூக்கனும் தன் பங்கிற்கு விஷக்கிருமிகளை வளர்த்து ஒரு டாப்பாக்குள் போட்டு ஒளித்து வைத்திருந்தான். நேரம் வரும்பபோது இதை வைத்து பாரதியின் பயிர்களை அழிக்க திட்டமிட்டிருந்தான்.
பக்கத்து நிலத்திலுள்ள விவசாயிகளெல்லாம் கலக்கம் அடைந்தனர்.
ஆனால் சப்பை மூக்கனைப் பற்றி நன்கு அறிந்த தாமோதர்; தன் வரப்பில் பூச்சி மருந்தைத் தெளித்து விட்டு
ஒரு கட்டத்தில், தன் வயல் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிந்த சப்பை மூக்கன், *நான் மட்டும் ஏன் அழியனும்?? அனைவரும் இந்த நிலைமையைச் சந்திக்கட்டும்* என்று எண்ணி,
எங்கும் ஒரே அழுகுரல்! மரண ஓலம்!! பல மைல்கள் அப்பால் உள்ள அம்பலத்தாரின் பயிர்கள் கூட கருகத் தொடங்கின. கடும் கோபம் கொண்ட "அம்பலத்தார்" சப்பை மூக்கனை கழுவிக் கழுவி ஊற்றினார். சப்பை மூக்கன் ஒன்றுமே தெரியாதது போல் நின்றான்.
நாட்கள் செல்லச் செல்ல ஆங்காங்கே பயிர்கள் கருகுவதை கவனித்த தாமோதர்; சப்பை மூக்கன் தன் வேலையை காட்டி விட்டான் என்று உணர்ந்து பதறினான். பாரதியிடம் விஷயத்தைக் கூறினான். தன் பயிர்களை கண்ட பாரதி அழுது புரண்டாள்...
தாமோதர் சொன்னான்... "அம்மா நான் ரொம்பக் கடுமையான ஒரு நடவடிக்கையில் இறங்கப் போகிறேன். என்ன நடக்கும் என்று இப்பொழுது சொல்லமுடியாது..."
பாரதியின் கண்களைச் சற்று நேரம் உற்றுப் பார்த்த தாமோதர், ஒன்றுமே சொல்லாமல் திரும்பி நடந்தான். அவன் கண்களிலும் ஈரம் எட்டி பார்த்தது.
"பிள்ளைகளே.... நம் மண் ஒரு இக்கட்டான சூழலை நோக்கி
"நீங்கள் அசைந்து கொண்டு இருப்பதனால் அக்கிருமிகள் என் கண்களுக்குத் தென்படவே இல்லை... ஆனால் நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டாம்.
மீதிக் கதையை நீங்களே கூறுங்கள் தோழர்களே...
தாமோதர் வெற்றிவாகை சூடுவாரா... இல்லை சப்பை மூக்கன் சதியில் இந்த மண் அழிந்துவிடுமா?
தாமோதர் காத்திருக்கிறான்...
🌺இக்கதையைப் படித்து விட்டு நான் குலுங்கி அழுகிறேன்....
இல்லை.... என் தாமோதர் தோற்கக் கூடாது.... என் பாரத தேவி தன் பிள்ளைகளை இழந்து அழக்கூடாது....
படிக்கும் உங்கள் மனமும் கரைந்தால், இதை நிறைய பேருக்கு அனுப்புங்கள்... நன்றி.🙏
🍁வாஸவி நாராயணன்🍁