அறுபதுகள் (1960-69) வரை மன்னார் வளைகுடாவில் #முத்துக்குளித்தல் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது!
எனினும், "முத்து வணிகர்கள்" பற்றி தனித்த ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அம்முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.
இந்திய விடுதலைக்கு முன்னர் இலங்கையிலும் இந்தியக் கடற்பகுதியான மன்னார் வளைகுடாவிலும் #முத்தெடுத்தல் தொழிலில் ஈடுபட்டோர், இரு நாடுகளிலும் வாழ்ந்த #பரதவர்கள் ஆவர்.
அதுபோல் இந்தியப் பகுதியில் #முத்துக்குளித்தல் நடைபெறும்போது இலங்கைப் பகுதியில் நடைபெறாது.
எனவே, இருபகுதியிலும் வாழ்ந்தோர் இத்தொழிலில் ஒன்றாக ஈடுபட்டனர்.
சங்க இலக்கியங்களில் #முத்தெடுத்தல் குறித்த செய்திகள் அதிகம் காணப்பட்டாலும் முத்து வணிகம் செய்தோரைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
“வெள்அறைய் நிகமது
காவிதிஇய் காழிதிக அந்தை”
என்ற வரிகளில் காழ் என்பதை முத்து என்றும், அதிக என்பதை கண்காணிப்பாளர் (அதிகாரி) என்றும்...
“பதினெண்விசையத்து திசையாயிரத்து ஐநூற்றுவர்”
என்னும் வணிகக் குழு, முத்து வணிகத்தில் ஈடுபட்டு அவற்றின் வருமானத்தில் ஒரு பகுதியை அங்குள்ள கோயிலுக்கு அளித்துள்ளனர்.
12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெட்டப்பட்ட கல்வெட்டில் “சட்டி செட்டி” என்னும் பெயருடைய #ஐயவொளே வணிகக்குழுவின் வணிகர் முத்து, குதிரை, யானை ஆகியனவற்றை வணிகம் செய்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது!
#காயல் துறைமுகப்பகுதியில் நடைபெற்ற முத்துக்குளித்தலின் போது வணிகர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, முத்துக்குளிப்போரை வாடகைக்கு அமர்த்தி, சிப்பிகளை வெளிக்கொணர்ந்தனர் எனக் கூறியுள்ளார்.
செட்டி (Chitti) என்னும் சான்றோர் (Learned Men) முத்துக்களை சல்லடைகளைக் கொண்டு பிரித்து எடை, அழகு , திடம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நான்கு வகைகளாகப் பிரித்ததாகக் குறிப்பிடுகிறார்.
எனவே, முத்துக்களைத் தரம் பிரிக்கும் செயலையும், வணிகத்தையும் இக்குழுக்களே செய்திருக்க வேண்டும்.
தேவர்னியர் (1631-1668) மன்னார் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவில் நடைபெற்ற முத்துக்குளித்தல் நுட்பத்தை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இம்முறையைக் கையாண்டு டச்சுக்காரர்களும் இவ்வணிகர்களுக்குப் போட்டியாகத் தொழிலில் பொ.பி 1700-ஆம் ஆண்டு நடந்த முத்துக் குளித்தலில் ஈடுபட்டனர் எனத் தெரிகிறது.
1749-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 'சின்னவாண்ட செட்டி' என்பவர் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில்,
அச்சமயம் பிரெஞ்சு ஆளுநர் முத்துக்களை வாங்க விரும்பியபோது பின்நாட்களில் விலை குறையும் என்பதால் தற்சமயம் முத்துக்கள் வாங்க வேண்டாமென தான் கருத்துரைத்ததாக...
இலங்கை முத்துக்குளித்தலில் கண்காணிப்பாளராய் இருந்த ராபர்ட்சென் என்ற ஆங்கிலேயர் 1799-ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்துக்குளித்தலை 'குண்டப்ப செட்டி' என்பவர் ஓட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்ததாகவும், மேலும் இவரே பலகாலம் தொடர்ந்து ஆளுமை செலுத்தி வந்ததாகவும் குறிப்பிடுகிறார்
௧) முத்துக்குளிக்கும் தொழிலில் ஈடுபட்டோர் மற்றும் அப்பகுதியை ஆட்சி செய்தோர் இவ்வணிகத்தை மேற்கொள்ளவில்லை.
௨) முத்துக்கள் வெளிக்கொணரப்பட்ட பின் அவற்றை விலைக்குப் பெற்று,
௩) #கீழக்கரை மற்றும் கர்நாடக மாநிலம் #அரிசிக்கெரே கல்வெட்டுக்கள் #ஐநூற்றுவர் (ஐநூற்றுவர் > ஐயவொளெ > அய்யப்பொழில்) வணிகக் குழுவைச் சேர்ந்த வணிகர்கள் முத்து வணிகம் மேற்கொண்டனர் என்பதைப் புலப்படுத்துகிறது.
௫) உள்நாட்டில் மட்டுமன்றி பிற நாடுகளுக்கும் இவை எடுத்துச் செல்லப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்பட்டதால் இவற்றை கடல் கடந்து வணிகம் செய்யும் குழுக்களே மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
-நன்று-