சிதறுண்டு கிடக்கும் உடல்களை பாத்தா கூட எதுவும் தோனல, போய் சேந்துடுவோம்னு நம்பி நடந்த அந்த செருப்புகளும்,
சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது
உங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா.
இன்குலாப்பின் இந்த பாடலை முச்சந்தியில நின்னு கத்தனும் போல இருக்கு.
#பாஸ்கி
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாபச் சாவு.
சிதறிக் கிடந்த ரொட்டிகளும் உடைந்த பொம்மைகளும் கல் நெஞ்சத்தையும் கரையச் செய்துவிடும்.
கல்லுக்குள்ளிருந்தும் சில சமயம் தண்ணீர் பீறிக் கொண்டு வரும்.
ஆமா, இல்லே. மத வெறுப்பு, மத வெறி தவிர வேறு எதுவுமே இருக்காதே..!