மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.
ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறுதிப்போரில் (2006-2009) நடந்த உண்மைகள்
வெளிவந்துக் கொண்டுள்ளது.
எந்த ஒரு சூழலிலும் பிரபாகரனோ புலிகள் அமைப்போ கலைஞரால் போரை நிறுத்தமுடியும் என்று எண்ணவில்லை.
கலைஞரால் என்ன முடியும் என்பது புலிகளுக்கு தெரியும்.
அதே சமயம் ராஜீவ் கொலைப்பழி சுமந்த கலைஞரால் புலிகளை நேரடியாக ஆதரிக்க முடியாது என்பதும் புலிகளுக்கு தெரியும்.
அவருடைய உண்ணாவிரதம் கூட அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதாகவே இருந்தது.
ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக பார்ப்பணர்களும் ,
கலைஞர் இறந்த பின்னும் வன்மம் கொண்டு போலி தமிழ்தேசியவாதிகள் ஈழத்தமிழர் முகமூடியுடன் தூற்றிவருவதை
விபரம் தெரிந்த ஈழத்தமிழர்களே ஏற்கவில்லை.
கலைஞரின் எழுத்தும் பேச்சும்
ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வை தட்டி எழுப்பியது..
அவரது அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டு எல்லைகளுக்குட்பட்டது என்பது அவர்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது.
நினைக்கமுடியாது. அதன் பின்னரும் கலைஞர் புலிகளை ஆதரித்தார்.
இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளை, ஒரு இந்திய மாநில முதல்வர் ஆதரிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்.
இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்து தேசத்துரோகி பட்டமும் சுமந்த கலைஞர் புலி ஆதரவு நிலைப்பாட்டால் ஆட்சியை இழந்தார். அதன் பின்னர் நடந்த ராஜீவ் படுகொலையால் 1991 தேர்தலில் மீண்டும் ஆட்சியை இழந்தது திமுக.
அன்று கொண்டு வரப்பட்ட தடா சட்டத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் திமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தான்.
அன்று நடந்த இறுதிப்போரை நிறுத்தும் வல்லமையும் கலைஞரிடம் இருக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால் எதுவும் நடந்திருக்காது.
அப்போதே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.
இறுதி போரின்போது சர்வதேச நாடுகளின் பின்புலத்தில் நடந்து கொண்டிருந்த அரசியல் மற்றும்
ராஜபக்சே கேட்டும் சிங்கள படை தளபதி பொன்சேகா மறுத்து விட்டதை இங்கிருக்கும் மூடர்கள் அறியமாட்டார்கள்.
கடைசி சில நாட்கள் நடந்த இறுதிப் போர் முழுமையாக இராணுவ தளபதியின் கட்டுப்பாட்டில்தான் நடந்தது.
ஏனென்றால் சிங்களத் தரப்பில் முப்படையினர் தரப்பிலுமாக, நான்கு கட்ட ஈழப்போர்களிலும், 24,693 படையினர் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது காணாமற்போயினர்.
இந்திய மத்திய அரசுக்கு கலைஞர் கொடுத்த அழுத்தத்தை விட, பல மடங்கு அதிக அழுத்தங்கள் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் மீது பிரயோகிக்கப் பட்டன.
இந்த அழுத்தங்கள் எல்லாம் இராஜதந்திர அரசியலில் தோல்வியுற்றதற்கு ஒரு பிரதானமான காரணம் இருந்தது.
இதற்கிடையில் அப்போது நடக்கவிருந்த இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று வைகோ புலிகளுக்கு தகவல் அனுப்பினார்.
அன்று புலிகள் தமக்கு நெருக்கமாக இருந்த வைகோ சொன்னதை நம்பி ஏமாந்தனர்.
மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலிகளின் சர்வதேச கிளைகளை சேர்ந்தவர்களும், “அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும்” என்று சொல்லி நம்ப வைத்து ஏமாற்றினார்கள்.
புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும்
மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.
கலையரசன்...