பண்ருட்டி காவல் நிலையம்
உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்த அப்பா மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையம் சென்றிருக்கிறார் சிறுமி ஒருவர்.
#Thread
``ஆமாம் சொல்லுமா" என்று அவர் கூறியதும், “என் அப்பா, நான் உண்டியல்ல சேத்து வெச்சிருந்த பணத்தை எடுத்துட்டுப் போயி குடிச்சிட்டாரு. அதைக் கேட்ட என் அம்மாவையும், என்னையும் அடிச்சிட்டாரு.
அதற்கு, “அப்பா தானேம்மா எடுத்தாரு. உண்டியல்ல இருந்தது அவர் உனக்கு கொடுத்த காசுதானே” என்று கேட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர். அதற்கு, “அது அவரு குடுத்த காசு இல்லை. அவரு கடைங்களுக்கு வேலைக்கு போவாரு.
இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்
உடனே காவலர்கள் மூலம் அந்தச் சிறுமியின் தந்தையை அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், குழந்தையின் உண்டியல் பணத்தை ஏன் எடுத்தாய் என்று கேட்டிருக்கிறார்.
அதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் சென்ற அந்த நபர், ”சார் உங்களைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இனி இப்படிச் செய்ய மாட்டேன். நான் திருந்திட்டேன் மன்னிச்சிடுங்க” என்று கூறி..
இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் பேசினோம். “கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, அவர்களின் உறவுச் சங்கிலிகளையும் உரசிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.
சில வழக்குகளை குற்றப் பார்வையோடு அல்லாமல் உளவியல் ரீதியாக அணுகினாலே சரியான தீர்வு கிடைக்கும்.
தன் அப்பா உண்டியல் பணத்தை எடுத்துவிட்டார் என்பதைவிட, அதை எடுத்து அவர் குடித்துவிட்டாரே என்ற ஆதங்கம் அந்தச் சிறுமிக்கு. மதுவுக்கு அடிமையாகிவிட்ட அந்த தகப்பன் வேலைக்குச் செல்ல முடியாமல் மகளின் உண்டியல் பணத்தை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
#வாழ்த்துக்கள் சார்...! 💐@inspectorambeth #Ambedkar_sir
செய்தி: விகடன்