🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

கச்ச அனுஜாமி – நீ போகலாம், உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன்
ரணார்திதஸ்த்வம் – இன்றைக்கு நன்றாக யுத்தம் செய்து அடிபட்டுக் களைத்திருக்கிறாய் ராத்ரிம்சரராஜ லங்காம் – இரவில் சுற்றும் ராக்ஷஸர்களின் ராஜனே
லங்காம் ப்ரவிஷ்ய – மீண்டும் இலங்கைக்குள் போய்க்கொள்…

ஆஷ்வாஸ்ய – களைப்பு நீங்க ஆஸுவாஸப் படுத்திக்கொண்டு
நிர்யாஹி ரதீச தன்வீ – ரதத்தில், அம்புவில் எடுத்து மீண்டும் யுத்தத்திற்கு வா
ததா பலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ – அப்போது எனது பலத்தை நீ பார்க்கக் காட்டுகிறேன்…

என்கிறார்.
இதைத்தான் கம்பன், தனது கவிநடையில் அழகாக, மனதில் தைத்து நிற்கும்படி,

”ஆளையா! உனக்கு அமைந்தன மாருதமறந்த
பூளையாயின கண்டனை; இன்றுபோய் போர்க்கு
நாளவா எனநல்கினன் – நாகிளங் கமுகின்
வாளைதாவுறு கோசல நாடுடை வள்ளல்”

அரக்கர்களை ஆள்கின்ற ஐயா! உனது படைகளனைத்தும்,
பெருங்காற்றில் உதிர்ந்து பறக்கும் பூக்கள் போலாயின. எனவே இன்று போய் நாளை வா என்றான், இளங்கமுகு (கமுகு – பாக்கு) மரத்தில் மீன்கள் துள்ளி விளையாடும் நீர்-நில வளம் கொண்ட கோஸல தேசத்து வள்ளலாகிய ராமன் என்று வர்ணிக்கிறார்.

அப்படியும் அவனதை அவமானமாக நினைத்து ராமரைக் கொல்ல யத்தனித்தானே
ஒழிய, மனம் திருந்தவில்லை. இறுதியில் ராமரின் பானத்தால் ஸம்ஹாரம் செய்யப்பட்டான். மண்டோதரியும், பிற மனைவிகளும் துயருற்றுக் கதறினர். அண்ணனுக்கான ஈமக்கடன்களைத் தான் செய்ய வேண்டுமென விபீஷணன் ராமரிடம் கேட்க,

Temple Preah Khat at AngkorWatt : A pediment depicting the battle of Lanka. Image
“என்னிடம் கேட்பதேன் விபீஷணா… இது உன் கடமை அல்லவா? சென்று நிறைவேற்று….”

எனக்கூறிய ராமர், எதிரியே ஆனாலும், அவன் ஒரு மன்னன் ஆனதால், அவனுக்குரிய இறுதி மரியாதைகளைச் செய்தார் ராமர்.

ராவண வதமும் ஆனது. அசோகவனத்தில் அமர்ந்திருந்த ஸீதையை நோக்கி, ராம-லக்ஷ்மணரும் ஹனுமனும் வந்தனர்.
ஸீதா தேவி மகிழ்ச்சியோடு ராமரை நோக்கி வந்தாள். ஸீதையைக் கண்ட ராமர் புன்சிரிப்போ, மகிழ்ச்சியோ, ஆனந்தமோ இன்றி, அமைதியாக நின்றார்.

Divurumpola Temple – The sacred site where Sita Devi took her oath and performed the Agni Pariksha Image
லக்ஷ்மணனும் விபீஷணனும் பதறிப்போய் ராமரிடம் அவரது செயலுக்குக் காரணம் கேட்க,

“என் மனைவி மேல் எனக்கு ஸந்தேகமில்லை…. ஆனால், இத்தனை காலம் இவள் இங்கே ஒரு அஸுரனின் கோட்டையில் வாழ்ந்து வந்திருக்கிறாள்.

இவளை இப்படியே அழைத்துக் கொண்டால், இவள் நடத்தை பற்றிப் பேசி,
உலகம் இவளைத் தூற்றுமே என்றுதான் யோசிக்கிறேன்…. இவள் களங்கமற்றவள் என்பதை இந்த உலகில் நிரூபிக்க வேண்டாமா??”

என்றார். இதைக்கேட்ட ஸீதை,

“எனது கற்பின் வலிமை உண்மை என்றால், நான் இப்போதே அக்னிப் பரீட்சை செய்து எனது கற்பை நிரூபிப்பேன் இவ்வுலகுக்கு”

எனக்கூறி,
லக்ஷ்மணனை தீமூட்டச் சொன்னாள். அங்கேயே அக்னி வளர்த்து, அதில் இறங்கினாள். அவளது கற்பின் நெருப்பு அக்னியையும் சுட்டதோ என்னவோ? அக்னிதேவன் அவளை அப்படியே வெளியில் ஏந்தி வந்தார்.

“ராமா… துன்பத்திலும், ஒரு கணமும் உனை மனதினின்று பிரியாத இக்கர்புடை மகளை நீ என்னில் இறக்கியது தவறு.
இவள் துளியும் குற்றமற்றவள். அப்பழுக்கற்ற ஸீதையை இவ்வாறு பேசியது தவறு என உணர்ந்து, அவளை ஏற்பாயாக. இது எனது ஆணை…”

என்றார். ராமரின் இந்த சோதனைக்கான காரணத்தை தேவர்கள் அறிவர். ஸீதை அக்னியிலிருந்து மீண்டும் வந்த பின்னர், அவரகளை வாழ்த்தி மறைந்தனர்.
இவள் துளியும் குற்றமற்றவள். அப்பழுக்கற்ற ஸீதையை இவ்வாறு பேசியது தவறு என உணர்ந்து, அவளை ஏற்பாயாக. இது எனது ஆணை…”

என்றார். ராமரின் இந்த சோதனைக்கான காரணத்தை தேவர்கள் அறிவர். ஸீதை அக்னியிலிருந்து மீண்டும் வந்த பின்னர், அவரகளை வாழ்த்தி மறைந்தனர்.
🌱விபீஷணன் பட்டாபிஷேகம் 🌱

பின்னர், விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, உடனடியாக அயோத்தி கிளம்பினார். விபீஷணன் அவரை சற்று தங்கி, ஒரு நாளாவது ஓய்வெடுத்துப் போகுமாறு வேண்டினார். ஆனால் ராமரோ,

“எனது கானக வாசம் நிறைவுற்றது. அங்கே எனது தாய் தந்தையையும் இழந்து,
எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார். இப்போது கிளம்பினால் தான் மூன்று மாதத்திற்குள் சென்று சேர முடியும்”

என்றார். அதற்கு விபீஷணன் அவரைச் சமாதானம் செய்து,

“ஹே ராமா…. கலங்காதே! எனது ஒன்றுவிட்ட தமையன் குபேரன் தான் இந்த லங்காபுரியை ஆண்டு வந்தான்.
என் அண்ணன் ராவணன் அவனை வென்று, விரட்டியடித்து, இந்நாட்டைக் கைப்பற்றினான். இங்கே குபேரன் வைத்திருந்த விமானங்கள் அண்ணனிடம் உள்ளன. அதில் நீங்கள் விரைவாக அயோத்தியை அடையலாம்.”

”மேலும் அவன் வைத்துள்ள புஷ்பக விமானம் என்னும் விமானத்திற்கு, ஓட்டுநர் தேவையில்லை.
உனது மன அலைகளைக் கட்டுப்படுத்தி அதில் செலுத்தி, எந்த வேகத்தில், எவ்வளவு உயரத்தில், எத்திசையில் போக வேண்டும் விமானம் என நினைக்கிறாயோ, அந்த எண்ண அலைகளை க்ரஹித்து, அது அவ்விதமே உம்மைக் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் அயோத்தியை மூன்று மணி நேரத்தில் சென்று அடையலாம்.
எனவே, குளித்து உணவு மட்டுமாவது உண்டு கிளம்புவாய் ராமா…”

என வேண்டினார். அவ்விதமே, அவர் உணவு கொண்டு, விபீஷணனிடம் விடைபெற்று, மனைவியுடனும் தம்பியுடனும் மீண்டும் அயோத்தி திரும்பினார் ராமர். ராமர் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருகையில், வானிலிருந்து தெரியும் இலங்கையின் அழகை,
”இலங்கை ராவணனின் எண்ணற்ற விமானங்களால், அழகாக ஜொலிக்கிறது…”

என வர்ணிக்கிறார்.

Source : Valmiki Ramayanam – Yudha Kaandam – Sargam 20. Image
5000years old Pushpaka Vimana of Ravana Found An Ancient Vimana found in the cave of Afghanistan said to be used in Maha Bharat.

Reference :

இதனிடையே தந்தை மரணத்தால் கைகேயி மனமுடைந்து,
”என்னால் தான் கணவன் மாண்டார், ராமன் வனம் சென்றான், பரதன் எனது முகத்தை இறுதிவரைப் பார்க்க மாட்டேன் என்றான்…. இத்தனைக்கும் காரணமான நான், இனி ராமன் வந்து அழைக்கும் வரை வெளியில் வர மாட்டேன்…”

எனக்கூறி தன் அறையிலேயே 14 ஆண்டுகள் சிறையிருந்தாள். ராமபிரான் திரும்பி வந்து,
கைகேயியை அழைத்து, அவளை வணங்கினார். நந்திக்ராமத்தில் துறவியாக வாழ்ந்து வரும் தம்பி பரதனிடம் தாம் திரும்பிவந்த செய்தியைச் சொல்ல ஹனுமானை அனுப்பினார்.

பரதனைச் சந்தித்த ஹனுமான், நடந்த எல்லாவறறையும் விரிவாகக் கூறினான். அண்ணன் திரும்பிய செய்தி கேட்டுப் பரவசம் கொண்ட பரதன்,
நந்திக்ராமத்தில் தனைத் தேடி ராம – லக்ஷ்மணரும் ஸீதையும் வருவது கண்டான். கண்ணீர் பொங்கியவனாக ஓடிவந்த பரதன் ராமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அவர் அவனைச் சமாதானம் செய்தார்.

”இனி இத்துடன் ராஜ்ய பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் அண்ணா…”

எனக்கதறிய பரதனை அணைத்துக் கொண்டார்.
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Sep 2, 2025
🌺WHY IS USA, ANGRY WITH INDIA - THE BARE TRUTH.🌺

Behind the American perspective is not humility, but a wrong politics is hidden.

There is such a conditional clause which... India has refused to even touch.

Everyone asks, Why is India not signing all those conditions? Image
Trump is pushing.
But India is standing strong.

Let me explain it to you...

India - America trade target:
*Dream of reaching $500 billion by 2030.*

Sounds great, right? But..
There was a condition behind that dream:
Genetically Modified (GM) seeds/crops.
India said – *No* Image
America said – *Sign*
India: *Never*

Because this is not just trade. This is a matter of national independence.
GM seeds are not seeds.
They are software — patented software.

*Sow once.* Always *Keep paying.*

Your crops are no longer yours... Image
Read 16 tweets
Aug 8, 2025
🌺நம் எதிர்காலம்??.??.??🌺

Scary😩😩

இந்த காணொளியை முழுதும் பாருங்கள். இது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடந்துவிடும்...😮

AI யை நம் செயல்களின் உதவிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய அதற்கு முக்கியத்துவம் தந்தால் நம் குணம் நம்மை அழித்துவிடும்.
பல துறைகளில் நவீண யந்திரங்கள் வந்து மனிர்களின் வேலையைப் பறித்தன. பணத்தாசை கொண்ட முதலாளிகளும் தொழிலாளி சம்பளத்தை பாரமாக எண்ணினர்.

பல ஆண்டுகள் யந்திரம் வேலை செய்தாலும், காலமாற்றத்தால் பழைய தொழில்நுட்பம் புதியதாக மாற்றுகையிலும், சர்வீஸ் , கோளாறு போன்றவற்றில் செலவு செய்கையிலும்
ஆகும் பணத்தளவைத் தொழிலாளிகள் சம்பளத்துடன் ஒப்பிட்டால், மனிதைரை வேலையில் வைப்பதுதான் சிறந்தது. பல குடும்பங்கள் பிழைக்கும்.

அதன் அடுத்த பரிணாமமான AI மூலம் மனிதன் புறக்கணிக்கப்பட வாய்ப்பு அதிகம். இதற்கும் காரணம் நாமே...

மத்தியஅரசு AI-ஐ எப்படிப் பயண்படுத்தக் கூடாது என்பதைத்தான்
Read 6 tweets
Jul 24, 2025
🌺அடுத்த சுதந்திரப் போரின் அடித்தளமா??🌺
நேற்று கர்நாடகாவில் அதிர்ச்சிகரமான தீர்ப்பு ஒன்றை நீதிபதி டி. வெங்கட் நாயக் வழங்கியிருக்கிறார்.

ஜம்கந்தியில் உள்ள ராமதீர்த்தக்கோவிலில் மூன்று இஸ்லாமியர்கள் வேலை வாகனங்கள் தருவதாக உறுதியளித்தும்,
organiser.org/2025/07/24/304…
துண்டுப் பிரசுரங்கள் அளித்தும் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்ததோடு, ஹிந்து மதத்தைக் கேவலமாகவும் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கைப் பதிந்தவர் இதில் நேரடியாகத் தொடர்பில் இல்லாதவர் என்றும்,
அந்த இஸ்லாமியர்களின் பிரசாரத்தால் மதமாற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்கு பதிய முடியுமென்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.

இந்த விஷயம் புரியவில்லை. ”ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ, அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தாலோ, பாதிப்புக்கு உட்பட்டவர்தான் வந்து வழக்கினைப்
Read 12 tweets
Jun 10, 2025
😱 *திடுக்கிடும்_உண்மை....!!* 😱

● சாக்லேட் கிட்காட்டில் மாட்டிறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சேர்ப்பதை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது !!

● ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், க்ரீமில் பன்றிக் கொழுப்பிலிருந்து
எண்ணெய் கலந்திருப்பதாக ஒப்புக்கொண்டது.
● ஐரோப்பாவின் பல நாடுகளில் Vicks தடைசெய்யப்பட்டுள்ளது..! அங்கு அது ஸ்லோ பாய்சன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● Lifebuoy என்பது குளியல் சோப்பும் அல்லது கழிப்பறை சோப்பும் அல்ல! ஆனால் அது விலங்குகளைக் குளிப்பாட்டப் பயன்படும் கார்போலிக் சோப் !
ஐரோப்பா நாய்களுக்காக Lifebuoy பயன்படுத்துகிறது! நம் நாட்டில் மில்லியன் கணக்கான மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள் !!
● கோக், பெப்சி உண்மையில் ஒரு டாய்லெட் கிளீனர், அதில் 21 வகையான பல்வேறு விஷங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கேன்டீனில்
Read 13 tweets
May 4, 2025
🌺உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 🌺

8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா எனும் மைமுனா பேகம்" குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅
9️⃣வது அதிசயம்:

தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது?
😂
"காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால்,
இது முடியாதா?😅

🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை!

முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
Read 6 tweets
Apr 24, 2025
🐵 ராம ராம ராம ராம 🐵

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை...

🍒 தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி Image
ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ராமன்
வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் "சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர் புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(