கலைஞன் அமைவது அபூர்வம் அவனை கண்டெடுத்து மீட்டு மின்ன வைக்க ஒருவன் வருவதும் அபூர்வம்.
என்னதான் காளிதாசன் என்றாலும் போஜமன்னன் இல்லை என்றால் அவனுமில்லை, சடையப்ப வள்ளல் இல்லையென்றால் கம்பனில்லை. பரமஹம்சர் இல்லையென்றால் விவேகானந்தருமில்லை
அப்படி ஒரு மேகம் உருவாகி வந்தது, கங்கைக்கரையில்
வலுவும் ஆற்றலும் வீரமுள்ள கிரேக்க இனம் வீணாக விளையாடி களிப்பதா என சிந்தித்தான் சாக்ரடீஸ், அவனின் சிந்தனையே அலெக்ஸாண்டர் எனும் மாவீரனாக
ஆம் ஒரே ஒரு ஞானி, ஒரே ஒரு பொதுநலவாதி ஒரே ஒருவன் மூலம் மொத்த மக்களையும் தொடுவான், மொத்த சமூகத்தையும் புரட்டுவான். ஆனால் யாரை தொட்டால் மக்களை தொடமுடியுமோ, யாரை பயன்படுத்தினால் மக்களை சுருட்ட முடியுமோ அந்த ஒருவனை மிக சரியாக தொடுவான் ஞானி
அப்படி ஒரு ஞானியான யோகிராம்சுரத்குமார் என்பவரின் கண்ணில் பட்டார் அந்த எழுத்தாளன்
அவன் வாழ்வு அதன்முன் வேறுமாதிரியாய் இருந்தது,
அப்படியே விட்டிருந்தால் அவன் சராசரி எழுத்தாளனாக, சம்பாத்தியம் செய்த வசனகர்த்தாவாக தன் வாழ்வினை முடித்திருக்க கூடும்.
அதன் பின் அந்த காவேரிக்கு அணையிடபட்டு அது சென்ற இடமெல்லாம் செழித்தது
பாலகுமாரன் எனும் மாபெரும் நதி உருவானது இப்படித்தான்
சினிமா, வெற்று இலக்கியம் என சுற்றிகொண்டிருந்த
அதன் பின் அவர் எழுதியதெல்லாம் யோகியே சொன்னது போல "பாலகுமாரன் என் பேனா", ஆம் அந்த எழுத்தெல்லாம் சாதாரண கூலி எழுத்தாளனுக்கு சாத்தியம் அல்ல.
பாலகுமாரன் எழுத்தின் விசேஷம் என்னவென்றால் அவர் யாரையும்
காரணம் அந்த மனம் சித்த மனநிலைக்கு உயர்ந்திருந்தது, கடவுளில் கலந்திருந்தது, கடவுளில் கலந்த அந்த மனம் அன்பில் ஊறிக் கொண்டே இருந்தது.
ஆம் அவர் சினிமா, பணம் சம்பாத்தியம் என தொடர்ந்திருந்தால் 100 சினிமா
பணத்துக்கு எழுதியது பணம் போல் மதிப்பிழக்கும், கடவுளுக்கும் மானிடத்துக்கும் செய்தது கால காலத்துக்கும் நிலைத்திருக்கும்.
ராஜராஜசோழன் தனக்கென செய்யாமல் சிவனுக்காய் செய்தான் நின்றான்.
உண்மையில் அம்மனிதனின் நூல்கள் காலத்தை வென்று தஞ்சை கோவிலை போல் நிற்பவை. அவர் வசனம் எழுதிய நாயகன் சில வருடங்களில் பாகவதர் படம் போல் மறக்கப்படலாம், பாட்சா அடுத்த தலைமுறைக்கு
ஆனால் அந்த உடையார், கங்கை கொண்ட சோழன் இன்னும் ஏகப்பட்ட நூல்களும் கால காலத்துக்கும் நின்றிருக்கும், எவ்வளவோ பேருக்கு அது வரலாற்றை சொல்லும், ஞானத்தை சொல்லும்.
பாலகுமாரன் எழுத்து ஞானத்தாலும் தெளிவாலும் புத்தி கூர்மையாலும் ஏற்றபட்ட ஞான விளக்கு.
எப்படி அவரால் முடிந்தது என்றால் அந்த யோகி கொடுத்த ஞானமும் சிந்தையும் அப்படி, அன்பில் அம்மனம் மாறியது, அன்பினால் அவர் அகந்தை அழிந்தது
அகந்தை அழிந்த நல்ல படைப்பாளியால் மாபெரும் விஷயங்களை கொடுக்கமுடியும், பாலகுமாரன் எனும்
அது இதோ உயரத்தில் மின்னுகின்றது
பாலகுமாரனால் பலன் பெற்றோர், இன்னும் பெற்று கொண்டிருப்போர் ஏராளம், இன்னும் பெறபோகின்றவர்களும் ஏராளம்
ஆம் யோகிகள் எல்லோரும் ஒரே வரிசையே. அது புத்தனோ இயேசுவோ ரமணரோ
அந்த யோகி தன் சமாதானத்தையும் அன்பையும் பாலகுமாரன் எனும் தன் சீடனிடம் விட்டு சென்றார், பாலகுமாரன் தன் எழுத்துமூலம் நமக்கெல்லாம் விட்டு சென்றார்
அதனால்தான் அந்த எழுத்து ஒரு நிறைவினை கொடுக்கின்றது, வாழ்வினை பற்றிய
ஏதோ ஒரு தெய்வீக சக்தி அலை வடிவில் இறங்கி அவரை எழுத வைத்தது, அவரும் மானிடருக்காக எழுதி குவித்தார், நாமெல்லாம் பயன்பெற்றோம்.
எவ்வளவு சுகமான எழுத்து அது?
ஒரு வழிகாட்டி அது, ஒரு பாதை அது, ஆழ்கடலின்
பாலகுமாரனை தவிர யாருக்கும் அது சாத்தியமில்லை
ஆனிமாதம் என்பது தமிழருக்கு சிறப்பானது, ஆனியில் வாங்கும் பொன்னுக்கும் முத்துக்கும் மதிப்பு அதிகம் என்பார்கள். இன்றும் அந்த வரிகள் வழக்கில் உண்டு
ஏன்? ஆனி என்பது
இயற்கையிலேயே ஆராய்ச்சி செய்யும் குணத்தினைப் பெற்றிருப்பர்.
இதில் ஆனி உத்திரம் என்பது சிறப்பான ஒரு நாள்.
அந்த மகத்தான நாளில்தான் பாலகுமாரன் அவதரித்தார்.
இன்று கொண்டாடபடும் பிறந்த நாள் ஆங்கில நாட்காட்டி சொல்வது எனினும் அதைத்தான் பலர் பின்பற்றுகின்றனர்
ஆனி உத்திரம் எனும் அபூர்வ நாளில் பிறந்த மகான் அவர், அதனால்தான் எல்லா விஷயங்களிலும் அவருக்கு ஆழ்ந்த ஞானமும் ஆராய்ச்சியும் இருந்தது,
சிலர் வியப்பது என்னவென்றால் எப்படி அவரால் இன்னொருவர் இடத்தில் குறிப்பாக மன்னர்களை பற்றி எழுதினால் மன்னரை பற்றி, யோகிகளை பற்றி எழுதினால் யோகிகளை பற்றி, புரிய மகா சிரமமான புரிந்து கொள்ளவே முடியாத பிற விஷயங்களைப் பற்றி எழுதினால் மிக
இதற்கெல்லாம் அடிநாதம் என்ன தெரியுமா? அன்பு.
அன்பு என்பதே அதிசயத்தை செய்யும், எவன் ஒருவன் தன்னலம் துறந்து தன் மக்களுக்கு நல்வழிகாட்ட, அவர்கள் துன்பப்படாமல் வாழ வழி சொல்ல,
அந்த அன்பான மனம் பாலகுமாரனுக்கு இருந்தது அதை இன்னும் கூர்மையாக்கி ஞானமாக்கி அவரை சித்தனாக்கினார் அவரின் ஞானகுரு.
எல்லா மண்ணும் பானையாகாது, எல்லா கல்லும்
அப்படி அந்த ஞானிதான் எத்தனையோ எழுத்தாளர் இருக்கும் மண்ணில் அவரை சரியாக இழுத்து வசபடுத்தினார்
பாலகுமாரன் எனும் எழுத்தாளனின்
அவர் நினைத்திருந்தால் கோடிகணக்கில் சம்பாதித்திருக்கலாம், எவ்வளவோ சினிமாவுக்கும் நாவலுகும் எழுதி அண்ணாமலை செட்டியார் போல் சேர்த்திருக்கலாம்
ஆனால் அந்த செல்வத்தின் வழியினை துறந்தார், எல்லாம் வீண் என
அது பணம் கொட்டாது என தெரிந்தும் தன் கடமையினை இம்மக்களுக்காய் செய்தார், அதில் அவருக்கு பணரீதியாக நஷ்டமே, எழுத்து ஒன்றையே தொழிலாக கொண்டவனுக்கு அது நஷ்டமே..!
ஆனால் எது அவரை நடத்திற்று?
அந்த வழி அவர் சென்ற பொழுது நமக்கு அவர் ஏற்றிவைத்த ஜோதிதான். வெட்டி வைத்த தங்கம்தான்.
அவரால் எவ்வளவு
அவரின் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொருவரும் பலன் பெற்றிருக்கின்றனர், அவரின் வார்த்தைகளும் வரிகளும் எவ்வளவோ மக்களுக்கு ஆறுதலாயின, இன்னும் அந்த விளக்கு வழிகாட்டும்.
ஒரு ஞானி யாரையும் பகைக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் போராளி புரட்சி புண்ணாக்கு பேசாமல் களத்துக்கே வராமல் மிகபெரிய சாதனையை தன் விலகி இருத்தலால்,
தனித்து இருந்து உலகை கவனித்தல் என்பது யோகிகளின் பார்வை, அப்படி கவனிக்கும் பொழுது தீர்வை சொல்வதும் அவர்கள் வேலை
பாலகுமாரன் அப்படி தனித்திருந்தார், தவமிருந்தார்,
அவரின் சில நூல்களை வாசித்திருக்கின்றேன், உடையார் முதல் எல்லாமே தனி ரகம், ஒவ்வொன்றும் இமயத்தின் உயரம், கயிலாயத்தின் தூய்மை,
ஒரு சில நூல்கள் நீண்டகால தேடலுக்கு வழிகொடுத்தன
உதாரணம் முப்பந்தல் ஆலயம்
அந்த நெல்லைமாவட்ட முடிவில் இருக்கும் முப்பந்தல் ஆலயம் பற்றி பல கதை உண்டு, இன்று கொண்டாடப்படும் ஜெயமோகன் கூட அது நெல்லைமாவட்டம் பழவூரில் செட்டி ஒருவன்
அவரின் ஆராய்ச்சி அந்த அளவில் முடிந்தது
ஆனால் அந்த நீலி யார்? திருவாலங்காட்டில் அவள் எப்படி சேர்ந்தாள், அவளுக்கு எப்படி இவ்வளவு சக்தி வந்தது? அவள் சேர நாட்டுக்கு எப்படி சென்றாள்? சேரநாட்டின் எல்லையான
ஆம் இன்றும் முப்பந்தல் இயக்கி சக்தி மிகுந்த நீலி, அவளுக்கு இருக்கும் பக்தர்களும் அவள் காட்டும் உக்கிரமும் காவலும் கோடிகணக்கான
அதை கடந்து செல்லும்பொழுதெல்லாம் சில கேள்வி எழும், பழவூர் எனும் நெல்லைமாவட்ட ஊரில் அப்படி ஒரு சம்பமே நடந்ததாக யாரும் சொல்லா நிலையில் அப்படி நடந்தாலும் பழவூரில் அவளின் பெயரில் ஒரு கல் கூட இல்லா நிலையில் பழவூர் நீலி எப்படி முப்பந்தல் அம்மனாக மாறினாள் எனும்
அந்த சிந்தனை அம்மனை எட்டிற்றோ என்னமோ பாலகுமாரனின் "புருஷ வதம்" மூலமாக தான் பழையனூர் நீலி என்பதையும், திருவாலாங்காட்டில் குடிகொண்டிருந்தவள் எனும் செய்தியினையும் பாலகுமாரனின் மூலமாக சொன்னாள்
ஆம், இன்னும் எவ்வளவு கேள்விகளுக்கு அந்த எழுத்து சித்தர் பதில்
நீங்களும் அவரை தொடர்ந்து படியுங்கள், உங்களின் எல்லா கேள்விக்கும் தேடலுக்கும் அவரிடம் பதில் உண்டு, காரணம் அவர் அகத்தியனின்
பாலகுமாரன் மிக சரியாக தன் குருவினை அடையாளம் கண்டார், அவரை தயக்கின்றி ஏற்றார், மாபெரும் அவதார எழுத்தாளனாய் மின்னி அழியா இடம்பெற்றார்
ஆம் நாமும் நல்ல குருவுக்காய் பிரார்த்திப்போம், நல்ல குருவாய் நிச்சயம் நமக்கும் ஒருவர் வருவார்,
ஏன் பாலகுமாரனே மிக சரியான ஒரு
சாணக்கியன் எனும் ஒரு சாதாரண ஆசிரியன் உருவாக்கியதே மவுரிய சாம்ராஜ்யம், ஒரு பரதேசியான
ஆம் சித்தர்களும் ஞான புருஷர்களும் முதலில் செய்திருப்பது சாதாரண காரியமாக இருக்கும், ஒரு தீப்பொறி போலதான் தெரியும், ஆனால் மெல்ல மெல்ல அது பற்றி எரியும்பொழுதுதான் அவர்களின் திட்டமும் நோக்கமும் பல விஷயங்களும் தெரியவந்து அதன் பலன் மிக
அப்படி பாலகுமாரன் செய்திருப்பது மிக பெரிய விஷயம், அவர் விதைத்திருப்பதும் ஏற்றி வைத்த தீபமும் சாதாரணம் அல்ல, ஒரு காலத்தின் அதன் மிகபெரும் பலனை இந்த மண்காணும், அப்பொழுது அவரை மிக நன்றியோடு இந்த மண் நினைந்து நினைந்து அழுது வணங்கும்
இன்று தன் குருவுடனும் சிவனுடனும் கலந்து ராஜராஜசோழனுடமும் முப்பந்தல் நீலியுடனும் கரம்பிடித்து வலம்வரும் அந்த ஞானபெருமகன் நம்மை எல்லாம் ஆசீர்வதிக்கட்டும்