அந்த பேட்டியில் கலைஞருடனான தனது அனுபவங்களை பகிர்ந்தார். அதில் ஒன்று முக்கியமான அரசியல் பாடம் என்றார்.
முதல்வர் கலைஞர்: என்ன மேயர் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?
மா.சு: உடற்பயிற்சி செய்றேன் அய்யா!
மு.க: செய்தித்தாள் வாசிச்சீங்களா?
மா.சு: வாசிச்சிட்டேன் அய்யா.
மு.க: என்ன பாத்தீங்க?
மு.க: நீங்க அதுக்கு என்ன பண்ணீங்க?
மா.சு: அதிகாரிகள் கிட்ட சொல்லிட்டேன் அய்யா.
மு.க: அப்படியே அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கும் அழைத்து நீங்கள் செய்யப்போவதை சொல்லுங்கள். முதல்வர் அழைத்து பேசினார். உங்களிடமும் சொல்லச்சொன்னார் என்றுச்சொல்லுங்கள்.
கலைஞர் அடுத்தநாள் அழைத்தாராம். பாத்தீங்களா, நாம பத்திரிக்கை செய்திகளை மதித்தால், அவர்களும் நம்மை மதிப்பார்கள். நேற்று ஒரு சின்ன பத்தியில் வந்தது. இன்று அரைப்பக்கத்துக்கு செய்தி வந்திருக்கிறது.