இதுதான் உலகின் பார்வை அவர் மீது பட்ட நொடி...
அப்போது கவிதையை மிகவும் ரசித்த ஒருவர் அந்த மேடையிலேயே ரூபாய் ஆயிரம் கொடுக்கிறார் அந்த இளைஞனுக்கு 2/n
என்னடா இவன் பணத்தாசை பிடித்தவனாக இருக்கிறானே என்று பலரும் நினைத்து இருக்க கூடும்...
பணத்தை எண்ணிய அந்த இளைஞன் ரூபாய் ஐநூறு எடுத்து கணையாழி வளர்ச்சி நிதிக்கு கொடுத்துவிட்டு மீதியை பையில் போட்டு கொண்டு நகர்ந்தான் 3/n
இயக்குனர் #பாலுமகேந்திரா அவர்களிடம் உதவி இயக்குனராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தான்.
அதோடு இல்லாமல் சென்னை பல். கழகத்தில் MA தமிழ் மற்றும் திரைப்பட பாடல்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டமும் பெற்றான் 4/n
ஒரு பக்கம் படிப்பு
ஒரு பக்கம் உதவி இயக்குநர்
மற்றொரு பக்கம் கவிதைகள்
என்று இருந்தவன்
பாடலாசிரியர் #அறிவுமதி துணையோடு #பட்டாம்பூச்சி_விற்பவன் என்னும் கவிதை தொகுப்பை வெளியிட்டான்
5/n
#பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பை படித்த இயக்குனர் #சீமான் அவனுக்கு தன்னுடைய #வீரநடை படத்தில் ஒரு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார்
#முத்துமுத்தா_பூத்திருக்கு என்று தன் பெயரையே முதல் பாடலில் எழுதினான் 6/n
அவனது முதல் பாடல் வெளிவரும் முன்னரே நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி முடித்து இருந்தான் அந்த இளைஞன்.
இதற்கு துணை நின்றவர் இசை அமைப்பாளர் #தேவா அவர்கள் பல இயக்குனர்களிடம் அறிமுகம் செய்தார் 7/n
மாநில அரசு விருதுகள்
பிலிம்பேர் விருதுகள்
இரண்டு தேசிய விருதுகள் அவன் பெற்றது
மிக குறுகிய காலத்திலேயே பெரும் உச்சத்தை அடைந்து இருந்தான் அந்த இளைஞன் 8/n
பட்டாம்பூச்சி விற்பவன்
நியூட்டனின் மூன்றாம் விதி
வேடிக்கை பார்ப்பவன்
அணிலாடும் முன்றில்
"அ"னா "ஆ"வண்ணா
கிராமம் நகரம் மாநகரம்
சில்க் சிட்டி
ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள்
அவன் கைவண்ணத்தில் உருவாகின 9/n
வேடிக்கை பார்ப்பவனில் உலகை வித்தியாசமாக வேடிக்கை பார்த்தவன்
தமிழ் இலக்கிய உலகில் பட்டாம்பூச்சி விற்று திரிந்தவன்
வலி கொடுத்து வலி ஆற்றியவன்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்றவன் 10/n
அவன் ஆனந்தயாழ்
பறவையே எங்கு இருக்கிறாய் என்று பறவையின் தடத்தை தேடி பறந்தவன்
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என அழகுக்கு புது பார்வை கொடுத்தவன்
ஒரு பாதி கதவு நீயடி
மறுபாதி கதவு நானடி என்று சேர்த்து வைக்க காத்திருந்தவன் 11/n
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு என்று உணர்த்தியவன்
ஆண்கள் வெட்கப்படும் தருணம் கண்டுகொண்டவன்
வெந்நீரில் நீ குளிக்க விறகாகி தீக்குளித்தவன்
பேரன்பின் ஆதி ஊற்று அவன்
12/n
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும் பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன என்று கேட்டவன்
எடை போடாத தன் உடலை நூறு ஆண்டுகள் பொறுத்து பார்த்து சிதையில் வைக்க நினைத்தவன்
13/n
அவனது வரியில் சொல்ல வேண்டும் என்றால்
"பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லை"
அவன் பாதை முடிந்துவிட்டது
ஆனால் அவன் பயணம் என்றும் முடியாது.
#நாமுத்துக்குமார்
#HBDNaMuthukumar n/n
#சலாம்குலாமு பாடல் இடம் பெற்ற திரைப்படம் #ஹலோ
மேலே #சாக்லேட் என்று தவறுதலாக பதிவிட்டு இருக்கிறேன் .
நன்றி
இளங்கலை பட்டம் இயற்பியலில்
படித்தது காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில்
முதுகலை தமிழ் பயின்றது
சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
முனைவர் பட்டம் பெற்றது
சென்னை பல். கழகத்தில்.
நன்றி