கந்த சஷ்டி கவசம் பற்றி கொஞ்சமும் சிந்தனையோ தெளிவோ அறிவோ இல்லாத #திருட்டு_திமுக இந்துமதத்தை
கொச்சைப்படுத்தும் நோக்கில் ஒருவனை பேச வைத்துள்ளனர்.
எதிர்வினை ஆற்றவேண்டியது நமது கடமை ஆத்திர வார்த்தை மட்டும் பேசி கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை.
அவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை என்றும்,அவர் கணக்கர் வேலை பார்த்தவர் என்றும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.
தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை
பாலதேவராயர் இயற்றியதாக குறிப்புகள் உள்ளது,
எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.
அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணியவர் முருகப் பெருமானை வேண்டி சஷ்டி
விரதம் இருக்கத் தொடங்கினார்.
அமர்ந்தார்.
அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக கந்த சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு
அளித்தார்.
அவர்களின் நோய் தீரும்,அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும்
ஆம் அந்த கோவிலில் அந்நேரம் பாலதேவராயர் மட்டுமல்ல இன்னும் ஏக்பட்ட நோயாளிகள் இருந்தனர்.
பாலதேவராயருக்கு வயிற்றில் வலி
கழலை, நெஞ்சு கூடும் ஒரு எலும்புருக்கி நோய், வயிற்றுவலி, தொடையில் புண் கணுக்கால் வலி, மூலம், என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய் இது போல பேய், பில்லி, சூன்யம் என பாதிக்கபட்டு வந்திருக்கும் கூட்டம் ஒன்று.
கூட்டமொன்ன்று அந்த மொத்த மக்களின் குரலாக முருகனிடம் எல்லா பிணிகளுக்கும், நோய்க்கும் பேய்க்குமாக பாலதேவராயர்
முருகன் சொன்னபடி பொதுநலத்தோடு பாடினார் கந்த சஷ்டி கவசத்தை.
6 சஷ்டி கவசங்களையும் இயற்றி முடித்தார்.
திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு
முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. கந்த சஷ்டி கவசம் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப்
பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து.
சஷ்டி என்றால் ஆறு,
கவசம் என்றால் பாதுகாப்பு,
நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து
கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொண்டாடப்பட்டது.
ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் முருகனிடம்
ஒப்புவிக்கும் பாடல் அது:-
திருநீற்றுப்பொடியினை அணிந்த என் நெற்றியை புனிதவேல் காக்கட்டும்
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!
எனது இரண்டு கண்களையும் கதிவேல் காக்கட்டும்
விதி செவி இரண்டும் வேலவர் காக்க!
பிரமனால் படைக்கப்பட்ட எனது இரண்டு செவிகளையும் வேலவர் காக்கட்டும்
என் மூக்குத் துளைகள் இரண்டையும் நல்வேல் காக்கட்டும்!
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!
பேசும் எனது வாயைப் பெருவேல் காக்கட்டும்
முப்பத்திரு பல் முனைவேல் காக்க!
எனது முப்பத்திரண்டு பற்களையும் முனைவேல் காக்கட்டும்!
சொற்களைச் செப்பும் எனது நாவைச் செவ்வேல் காக்கட்டும்!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
எனது இரு கன்னக்கதுப்புகளையும் கதிர்வேல் காக்கட்டும்!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!
என் இளமையான கழுத்தை இனியவேல் காக்கட்டும்!
என் நடுமார்பை இரத்னவடிவேல் காக்கட்டும்
சேர் இளமுலை மார் திருவேல் காக்க
இரண்டு பக்கங்களிலும் இணையாகச் சேர்ந்திருக்கும் பக்கமார்புகளை திருவேல் காக்கட்டும்
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க!
எனது இரண்டு தோள்களும் வளமுடன் இருக்குபடி வடிவேல் காக்கட்டும்
என் பிடரிகள் இரண்டையும் பெருவேல் காக்கட்டும்!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
என் முதுகு அழகுடன் இருக்கும்படி அருள்வேல் காக்கட்டும்!
பழு பதினாறும் பருவேல் காக்க!
என் பதினாறு விலா எலும்புகளையும் பருவேல் காக்கட்டும்!
என் வயிறு நோயின்றி விளங்க வெற்றிவேல் காக்கட்டும்!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
எனது சிறிய இடை அழகு பெறும்படி செவ்வேல் காக்கட்டும்!
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க!
என் இடுப்பில் அணியும் அரைஞான் கயிற்றை நல்வேல் காக்கட்டும்!
ஆண்குறிகள் இரண்டையும் அயில்வேல் காக்கட்டும்!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
இரண்டு பிட்டங்களையும் பெருவேல் காக்கட்டும்!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
வட்டவடிவான குதத்தை வல்வேல் காக்கட்டும்!
வலிமையான தொடைகள் இரண்டையும் பருவேல் காக்கட்டும்!
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!
எனது கணைக்கால்களையும் முழந்தாள்களையும் கதிர்வேல் காக்கட்டும்!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
ஐந்து விரல்களுடன் கூடிய என் பாதங்களை அருள்வேல் காக்கட்டும்!
இரண்டு கைகளையும் கருணைவேல் காக்கட்டும்!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க!
இரண்டு முன்கைகளையும் முரண்வேல் காக்கட்டும்!
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க!
இரண்டு பின்கைகளையும் பின்னவளான திருமகள் இருந்து காக்கட்டும்!
எனது நாவில் சரஸ்வதி அமர்ந்து நல்ல துணை ஆகட்டும்!
நாபிக் கமலம் நல்வேல் காக்க!
தாமரை போல் வடிவுடைய என் தொப்புளை நல்வேல் காக்கட்டும்!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
மூன்று பிரிவாகச் செல்லும் என் உடலிலுள்ள நாடிகளை முனைவேல் காக்கட்டும்!
என்னை எப்பொழுதும் எதிர்வேல் காக்கட்டும்!
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது
இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது,
ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால்
இதை தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல் இது.
அதிர்வுகளை கொடுப்பதற்காக இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும்
ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.
கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள் தேவராயரும் நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் சரியாக புகுத்தியிருக்கின்றார்.
ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில
அதிர்வுகளை உணரமுடியும்.
அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும்
என்றார்கள்
மலைமீதும் குகைகளிலும் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல் பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும்
முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி
இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்
முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம்.
உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம் நலம் பெற்றோர் ஏராளம்,
கொரானாவால் மனிதர்கள் தங்களை தாங்களே காத்துகொள்ள வேண்டும் எனும் சூழல் வந்துவிட்ட நேரம்
கொரானாவுக்கு இன்னும் கூட மருந்தில்லா காலமது, அவனவன் ஓடி ஓளிய வேண்டியிருக்கின்றது, இந்நிலையில் முருகபெருமானின் கந்த சஷ்டி கவசத்தை பழிப்பது சரியல்ல,
கொஞ்சமும் தமிழ் அறிவே இல்லாமல் பேசுவதும் சரியல்ல,
முலை என்றால் தொடக்கம் என பொருள, சேர் இளம் முலை என்றால் நெஞ்சுகூடு என பொருள்,அது உயிர்நாடி அதைத்தான் காக்க என சொல்கிறார் பாலதேவராயர் இது எப்படி தவறாகும்?
நாணாங்கயிறு என்றால் இடுப்பில் கட்டும் கயிறு.
தமிழர் மரபு அது குடலிரக்கம் எனும் கொடும் நோயினை காக்கும்.
உடலில் தொப்பை ஏறும் பொழுது அலாரம் அடிக்கும், அந்த கயிற்றின் இறுக்கம் வயிற்றுக்கு பல நன்மைகளை கொடுத்ததால் அவசியம் குழந்தைக்கு கொடி போடுவார்கள்.
அதுவே அடிவயிற்றில் கொடுக்கபடும் மெல்ல்லிய இறுக்கம் கர்ப்பபைக்கும் குடலுக்கும் நல்லது அக்கயிறு இருந்த காலமெல்லாம் குடலிரக்கம் இல்லை, குடல் நோய் இல்லை, சிசேரியன் போன்ற இம்சைகள் இல்லை இடுப்பு கயிறு என்பது மிகபெரும் பாதுகாப்பு.
ரகம் இவை எல்லாம் அனுபவத்தால் அன்றி தெரியாது.ஒவ்வொரு நோயின் கடினம் அறிந்து, வலி அறிந்து, ஒவ்வொரு உறுப்பின்
முக்கியத்துவம் அறிந்து மிக நுணுக்கமாக பாடபட்டது சஷ்டி கவசம்.
மானிடரை தேடிவந்தவருமான முருகனிடம் மன்றாடி கேட்பதே கந்த சஷ்டி கவசம்
அதில் ஆபாசம் ஏதுமில்லை,
தண்டியக்காரரும் சண்டாளர்களும்" எனும் சஷ்டி கவச வரிகள் திருட்டு திமுக க்கே எழுதபட்டது.
பொல்லா இடும்பனையும் அடங்கா சூரபத்மனையுமே வதைத்த முருகனுக்கு இந்த திருட்டு கும்பல் எம்மாத்திரம்?
இவர்களுக்கு நல்ல பதிலை அவரே கொடுப்பார்.
பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு கொள்கை என ஆன்மீகத்தை விமர்சனம் செய்கிறார்கள்.
ஆன்மிகத்திற்கு புது விளக்கத்தையும் நல் ஆட்சியையும் தர என் தலைவர் வருவார் வெல்வார்,
நாளை நமதே
நன்றி வணக்கம் 🙏🙏
#SSR