முதலில் இந்து என்றால் யார்..?
நீயும் நானும் இந்து என்றால் கோவில் கருவறைக்குள் என்னை ஏன் விடுவதில்லை..? இத்தனை ஆண்டுகளாக எங்களை ஏன் அர்ச்சகர்கள் ஆக விடாமல் வழக்கு போட்டீங்க..?
என் கடவுளுக்கு தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று ஏன் தடுக்கறிங்க..? எதிர்த்து ஏன் கோர்ட்ல வழக்கு போடுறிங்க..?
பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது இந்து விரோதமா.? பண்டிகைகளை கொண்டாடும் மனிதர்களின் அடிப்படை வாழ்க்கைக்கே விரோதமாக இருப்பது இந்து விரோதமா..?
📌 நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது
📌 பெட்ரோல், டீசல் விலை உயர்வு
📌 விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய முடியாது
📌 விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டம்
📌கல்விக் கடன் தள்ளுபடி செய்ய முடியாது
📌 5 வருட ஆட்சியில் இந்தியாவின் கடனை 51% உயர்த்தியது.
📌 இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது.
📌 பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது
📌 இந்தியாவின் GDP ஐ (கொரோனா வுக்கு முன்பே) 4% என்ற அதலபாதாளத்தில் தள்ளியது
📌 ஒரே நாடு, ஒரே மொழி என்று மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சி
என்று ஒட்டு மொத்த இந்திய இந்துக்களின் அடிப்படை வாழ்க்கைக்கே விரோதமாக இருக்கும் பாஜக இந்து விரோத கட்சியா..?
அதெல்லாம் கிடையாது, மனிதனை விட எங்களுக்கு மதம் தான் பெரியது... மத விரோதம், மத உணர்வு தான் எங்களுக்கு பெரியது என்றால்,
இன்றும் ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் அரசு மரியாதை தரும் நீங்கள் இந்து விரோதியா? ஸ்டாலினும், திமுகவும் இந்து விரோதியா..?