.
ஒடுக்கப்பட்டமக்களின் விடுதலையின் பால் ஆர்வம் காரணமாக ராவ் சாகிப் எல்சி குருசாமி அவர்களுடன் இணைந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தை நிறுவி, அதன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று களப்பணியாற்றினார்.
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பால் அக்கறை கொண்டதால் தன் சமகால தலித் தலைவர்களான தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மற்றும் M.C.ராஜா ஆகியோரிடம் இணைந்தே பணியாற்றினார்.
1921 முதல் 1929 வரை சென்னை மாமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பதவியில் இருந்த போது, பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை அமலாக்கம் செய்வதில் தீவிர அக்கறை காட்டினார்.
1927 ல் சைமன் கமிஷன் தமிழகம் வந்தபோது, அவரைச் சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய வரைவை சமர்ப்பித்தார்.
1931 ல் லோதல் குழுவிடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் வாக்குரிமை கோரி வரைவொன்றை எழுதி சமர்ப்பித்தார். பின்னர், இக்கோரிக்கைகள் பிரிட்டீசாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து, நெல்லூர், பெல்லாரி மற்றும் அனந்தபுரி மாவட்டங்களில் பஞ்சமி நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கே அளிக்கச் செய்தார்.
1932 முதல் சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தின் கெளரவ நீதிபதியாக பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவிலும் பதவி வகித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், முதலமைச்சர் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவந்த போது, சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்தார்.
தகவல்:
ராவ் சாகிப் எல்சி குருசாமி கல்வி மையம், தமிழ்நாடு.
ஜெகநாதன் அவர்களுக்கு வீரவணக்கம்.