என்னோட கதை வேற. ஆனா வேலை கிடைக்கல என்னும் முடிவு ஒன்றேதான்.
PhD, Postdoc எல்லாம் முடித்தும் இந்தியாவில் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைப்பது குதிரை கொம்பு. 1/n
வெளிநாடுகளில் postdoc ஆக இருப்போருக்கு மட்டும் நடத்தும் சேலெக்ஷன் இது.
இதோட நேர்முக தேர்வு நடந்து ஒவ்வொரு பாட பிரிவிலும் 10 பேர் என்ற அளவில் தேர்வு செய்வார்கள். 3/n
UGC தன்னோட கண்ட்ரோலில் இருக்கும் எல்லா university list கொடுத்து உனக்கு எதில் வேலை வேணும் என்று உன்னோட 3 choice கொடு என்று கேட்கும். 4/n
நம்ம என்ன பண்ணுவோம்? ஆஹா இவ்ளோ நிறைய இருக்கே என்று ஒன்னு நம்ம சொந்த மாநிலம் அல்லது டாப் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுப்போம். 5/n
நம்மோட நம்பர் 1 தேர்வு செய்திருக்கும் பல்கலைக்கழகத்துக்கு லெட்டர் அனுப்பும். (நிஜமாவே லெட்டர்தான்.)
அந்த ரெஜிஸ்ட்ரார் என்ன செய்வார்?
அந்த துறைக்கு அனுப்புவார்.
துறை தலைவர் என்ன செய்வார்?
ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்களிடம் பேசுவார்.
6/n
உடனே துறை தலைவர் ரெஜிஸ்டரார் இடம் சொல்லுவார்.
ரெஜிஸ்டரார் UGC க்கு சொல்லுவார்.
இந்த முடிவு நாம் அந்த துறைக்கு தேவை இல்லை என்றால் UGC என்ன செய்யும்?
அடுத்து நம்மோட லிஸ்டை எடுத்து No.2 பல்கலைகழகத்துக்கிட்ட கேட்கும்.
7/n
ஆசிரியர்கள் - துறை தலைவர் - ரெஜிஸ்டரார் - UGC
என்று சங்கிலி தொடர்பு நடக்கும்.
இதில் எங்காவது ஒரு இடத்தில் சங்கிலி அறுந்தாலோ, நேரம் ஆனாலோ UGC பொறுமையாக காத்துக்கொண்டிருக்கும்.
8/n
9/n
ஏனெனில் அவங்களுக்கு இதனால் ஒரு "லாபமும்" இல்லை. 😉
எங்களுக்கு போதுமான ஆட்கள் இருக்காங்க வேண்டாம் என்று சொல்லி விடும்.
ஆனால் அடுத்த ஓராண்டுக்குள் தானே புது ஆட்களை எடுக்கும்போது UGC திரும்ப கேட்காது. 10/n
ஏம்பா, நான் கேட்டப்போ வேண்டாம்னு சொன்ன, இப்ப நீயே புது ஆளை எடுத்து போட்டிருக்க என்று கேட்கலாம்.
UGC க்கு அந்த அதிகாரம் இருக்கு.
ஏனெனில் மத்திய அரசின் மூல நிதி ஒதுக்கீடு, புது நியமனம் அப்ரூவல், ஆராய்ச்சி நிதி எல்லாமே UGC மூலம் தான் வரும்.
ஆனா கேக்காது. 11/n
அவர்களுக்கு என்ன செய்யும் தெரியுமா?
உக்கார நாற்காலி, மேஜை கொடுக்கும். ஆனா அவங்க ளுக்கு research mentorship கொடுக்காது.
அதாவது, அவங்க தாங்களாக PhD மாணவர்களை ஆராய்ச்சிக்கு வழிநடத்த உரிமை கொடுக்காது. Lab வசதி கொடுக்காது.
12/n
ஆனாலும் அம்மா நினைவா இந்தியா நிரந்திரமா வந்திரலாமே. அப்பாவையும் பாதுக்கலாம் என்று நிம்மதி. 14/n
அவர்களையே கேப்போம் என்றால் அந்த UGC-FRP யே இப்போ கிடையாது.
இந்த postdoc வேலை இந்தியர்கள், சீனர்கள் தவிர யாரும் பெரும்பாலும் பண்ண மாட்டாங்க.
ஏன்னா சம்பளம், வேலை அப்படி. 15/n
முற்றும்.