#NEP ஆறாம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வியைக் கற்க வேண்டும் என்கிறது. பின்னர் பல்கலைக் கழகப் படிப்பு வரை தொடர வேண்டும் என்றும் சொல்கிறது.
தொழிற்கல்வி எனும் பெயரில்
நவீன குலக்கல்வித் திட்டமா?
12 ஆம் வகுப்பு முடித்ததும் மாணவன் தனக்கு ஒரு புரிதல் உள்ள நிலையில் சில தொழில்கள்பற்றி தெரிந்து கொள்வது சரி. அதை எல்லா மாணவர்களும் தெரிந்து கொள்ளட்டும். தெரிந்து கொள்வது என்பது வேறு. தேர்வு என்பது வேறு.
ஆறாம் வகுப்பில் இருந்து அதற்குத் தேர்வு என்பதெல்லாம், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களைத் தங்களது குடும்ப சூழல் சார்ந்த குலத்தொழிலை நோக்கி தள்ளுவது தவிர்க்க முடியாதது. மீண்டும் ஒரு குலக் கல்வி அகில இந்திய அளவில் நுழைகிறது.
#NEP-ல் கூறப்படும் தோட்ட வேலை, மண்பாண்டம் செய்தல், தச்சு வேலை, உலோக வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் களை யார் யார் வீட்டுப் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
உண்மையில், சமூகத்தில் பின்தங்கிய இட ஒது
க்கீட்டுப் பிரிவிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், அவரவர் குலத்தொழில் அல்லது ஏதேனுமொரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டு, அங்கேயே அவர்களாகவே நின்று விட வேண்டும் என்கிற திட்டமே இதன் பின்னால் உள்ளது.
உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சிறு கைத்தொழில்களைக் கற்றுக் கொண்டு, பெரும்பான்மை மாணவர்கள் தேங்கி விட்டால் மருத்துவம், பொறியியல், மேலாண்மை, சட்டம், மென்பொருள், ராக்கெட் தொழில் நுட்பம், ஏவியேஷன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு செல்லப் போவது யார்?
எடுத்துக்காட்டாக, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது; அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டம் நடந்ததே - அதற்கு #NEP ஏற்றதா?
புதிய கல்விக் கொள்கை ஒரு குலக்கல்வித் திட்டம்தான் என மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்கள் தெளிவாக சொல்லியுள்ளாரே!
#NEP ராஜாஜியின் பழைய குலக்கல்விச் சிந்தனை தான்; பால கங்காதர திலகர் மகாராட்டிரத்தில் முன் மொழிந்தது தான்.
பார்ப்பனீயம் எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரி யாகவே சிந்திக்கிறது, செயல்படுகிறது, புரிந்துகொள்ளுங்கள்!
புதிய கல்விக் கொள்கை மும்மொழியைக் கட்டாயம் என்கிறது. முதலில் தாய்மொழிக் கல்வியை இந்த புதிய கல்விக் கொள்கை கட்டாயம் ஆக்கியிருக்கிறதா? இல்லையே! முடிந்தவரை (as far as possible) அய்ந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மேலும் எட்டாவது வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்றுதான் சொல்கிறது.
இந்தக் கொள்கையை (#NEP) வெளியிட்ட அடுத்த நாளே, மத்திய கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும், கேந்திர வித்யாலயா, தாய்மொழிக் கல்வி சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டது. இதற்கு என்ன பதில்?
ஒரு மொழி, அதுவும் தாய்மொழி என்பது சரி என்று எல்லோரும் கூறுகிறார்கள். கூடுதலாக, ஒரு மொழி, அது ஆங்கிலம் என்பது உலக வழக்கோடு உதவியாக இருக்கும் என்பதால் கற்றுக் கொள்கிறார்கள்.
மூன்று மொழிகளில், இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்கிறது மத்திய அரசின் கல்விக் கொள்கை. ஆக, ஹிந்தி, சமஸ்கிருதத்தைைக் கட்டாயம் ஆக்கிடவே இந்த நடவடிக்கை.
மூன்று மொழி மட்டுமல்ல, விருப்பம் உள்ளவர்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் வெளியே கற்றுக் கொள்வார்கள், அதற்கு இப்போது நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
மும்மொழிக் கொள்கை என்று இவர்கள் முன்னிறுத்துவது ஹிந்தி அல்ல; இந்தப் புதிய கல்விக் கொள்கை முழுவதும் அங்கிங்கெனாதபடி, நீக்கமற நிறைந்திருப்பது சமஸ்கிருத மொழியைப் பற்றியே!
நாட்டில் யாருக்குமே தாய்மொழியாக இல்லாத சமஸ் கிருதத்தை எதற்காகக் கற்க வேண்டும்? (வருமுன்னரே, இதற்காக பட்ஜெட்டில் 50 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். தமிழ் உள்பட செம்மொழித் தகுதி பெற்ற மொழிகளுக்குக்கூட நிதி ஒதுக்கவில்லை)
சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டு வேத சாஸ்திரம் படித்த தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்டோர் இன்னமும் அர்ச்சகர் பணி கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். சிலர் இறந்தே போனார்கள்.
வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் இஸ்லாமியர் என்பதால், உள்ளே வரக்கூடாது என்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில், சமஸ்கிருதத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஓர் அரசே கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி அழுவதா?
‘டெலிகிராப்' பத்திரிகையில் ஆக-19 வந்துள்ள செய்திப்படி, பல தகுதிகள் பெற்ற சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றி, துணைவேந்தர் பதவிக்கு மனு போட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த தகுதியுள்ள ஒருவரை, நேர்காணலுக்குக் கூட அழைக்கவில்லை. அவர் குடியரசுத் தலைவரிடம் புகார் செய்திருக்கிறார்.
அரசமைப்புச் சட்டத்தின்படி 22 மொழிகள் அலுவல் மொழிகள். இதில் ஹிந்தி, சமஸ்கிருதம் தவிர வேறு எந்த மொழிக்கும் ஒரு முக்கியத்துவமும் தரப்படுவது இல்லை.
9கோடி மக்கள் வாழும் ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்தானி மொழியை அலுவல் மொழியாகச் சேர்க்க வேண்டும் என அந்த மாநில முதல்வர் அசோக்கெலாட்டும் சட்டீஸ்கர் மாநில மொழியான சட்டீஸ்கரி மொழியை அலுவல் மொழியாக்கவேண்டும் என அம் மாநில முதலவர் பூபேந்தர் பாகலும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
ஹிந்தியை ஏற்றுக் கொண்டதால், தங்கள் மாநிலத்தின் தாய் மொழி முக்கியத்துவம் இழந்துவிட்டதை ராஜஸ்தானிலும், சட்டீஸ்கரிலும் 70 ஆண்டுகள் கழித்து அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்!
தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை என்பதைத் தெளிவாக திராவிடர் இயக்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே முடிவு செய்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமாக நிறைவேற்றினார்கள். இதனால், நாம் எங்கேயும் வீழவில்லை. மாறாக நன்றாகவே வளர்ந்துள்ளோம். #கல்வி_சிறந்த_தமிழ்நாடு
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, மொழியைக் கற்றுக் கொள்ள அல்ல; பல்வேறு பாடங்களை அவர்களுக்குப் புரிகிற மொழியில் பயிலவும், உலக நடப்போடு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் தான் என்பதைப் பல கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். #nepisbrahmanism
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து
இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது!
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை பூஜை என்ற பெயரால், அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக நடைபெற்ற நிகழ்வினைக் கண்டித்து கண்டனங்கள் எழுந்தன.
திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (30.7.2021) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் இதுபோல எதுவும் நிகழாவண்ணம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும், இத்தகைய பூஜை, சடங்குகள் நடக்காதெனவும் உறுதி கூறியுள்ளதை ஏற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது.
தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது!
முதலமைச்சருக்கு தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் பாராட்டு - நன்றி!
நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், நீண்ட நாள் - மாணவப் பருவந்தொட்டு, கொள்கை, லட்சியம் இவற்றிற்காகப் போராடி 8 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் செய்தவரும், எளிமையும், தொண்டும் இரண்டறப் பிணைந்த சீரிய தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்கள்
நேற்று (27.7.2021) நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய தொண்டற அங்கீகார விருதான ‘‘தகைசால் தமிழர் விருது’’ - முதல் விருதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ் U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
1/16
ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத்துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ‘கோவிட்’ என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், 2/16
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காக, 3/16
சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?
தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல் மாணவர் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்!
மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. (CBSE) நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஆனால், அதே காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு என்ற நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை! அதை நடத்தியே தீருவோம் என்று கூறுகிறார்கள்!
இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98
கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
தந்தை பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘ அறிஞர் அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை.
இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
நமது நன்றிக் காணிக்கை!
-------------------------------------
திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை! #viduthalai87
இந்த கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும் தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!' #viduthalai87
அதற்காக ஆதரவுக்கரம் நீட்டி, புது உத்தியாம் பி.டி.எஃப். மூலம் பல லட்ச வாசகர்களை ஈர்த்து, புது வகைப் பாய்ச்சலை ஏற்படுத்திடக் காரணமான திராவிட இயக்க உறவுகளுக்கும், புதிய வரவுகளுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.