உயிரோட்டமுடைய லட்சியத்தைக் கொண்ட தி.மு.கழகம் பெற்று வரும் முன்னேற்றத்தை, யாரும், எந்தச்சக்தியும் அழித்துவிட முடியாது.
உதாரணமாக, கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொண்டால் அவர்கள், இந்த நாட்டில் நிலவும் பொருளாதாரஏற்றத் தாழ்வுகளை மட்டும் போக்க முயல்கிறார்கள் – கண் வைத்தியர்களைப் போல்!
தி.மு.கழகம்தான் இந்த நாட்டில் எல்லாத் துறைகளிலும் உள்ள சீர்கேடுகளையும் எடுத்துக் காட்டுகிறது.